தீபாவளிப் பண்டிகை நெருங்கும் சூழலில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கிறது.
தீபாவளி
தீபாவளிப் பண்டிகை பட்டாசு வெடிக்கும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக, விபத்தில்லா தீபாவளியாகப் பண்டிகையைக் கொண்டாட தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்திருக்கிறது. பட்டாசு வெடிக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள்.
- பட்டாசுகளைத் திறந்த வெளியில் வைத்து வெடிக்க வேண்டும்.
- பட்டாசுகளை மூடிய கலனில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
- எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான நைலான் ஆடைகளைத் தவிர்த்து விடுவது நல்லது.
- பட்டாசு வெடிக்கும்போது அருகில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
- குழந்தைகளைத் தனியாகப் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது
- சுவாசக் கோளாறு இருக்கக் கூடிய வயது முதிர்ந்தவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
- பட்டாசுகளை வெடிக்கும்போது கால்களில் செருப்பு அணிந்திருந்து பாதுகாப்பாக வெடிக்க வேண்டும்.
- வெற்றுக் கைகளால் பட்டாசுகளைக் கொளுத்தக் கூடாது. வெடித்த பிறகு கைகளை சோப்புப் போட்டு நன்கு கழுவ வேண்டும்.
- முழுமையாக வெடிக்காத பட்டாசுகளைத் தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும்.
- மின் கம்பங்கள் அருகே பட்டாசுகளை வீசக் கூடாது.
- சானிடைஸர் பயன்படுத்திவிட்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
Also Read – உங்கள் ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது… ஈஸியா கண்டுபிடிக்கலாம் வாங்க!