Facebook, Twitter, Insta, Youtube-னு தமிழ் இணைய உலகத்துல இன்னைக்கு என்னெல்லாம் Trend ஆச்சுனு தெரிஞ்சுக்க Scroll பண்ணுங்க!
-
1 குக்கூ குக்கூ Free Fireக்குள்ள போயாச்சு!
ஃப்ரீ ஃபயர் கேம் பற்றிய அப்டேட்களை தொடர்ந்து கொடுக்கும் PVS Gaming யூ-டியூப் சேனல் எஞ்சாயி எஞ்சாமி பாடலை ரீமீக்ஸ் செய்துள்ளது. கேட்டுப் பாருங்க!
-
2 கடைசி இசை 😢
இந்தோனேசியாவில் நீர்மூழ்கிக் கப்பலில் 53 வீரர்கள் மரணமடைந்தனர். அந்த வீரர்கள் கடைசியாக பாடிய பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
-
3 மேட்ச்ல அடிச்சிக்குவோம்... முடிஞ்சதும் சிரிச்சுக்குவோம்.
நேற்றூ #RCBvDC பரபர மேட்சுக்குப் பிறகு கடைசி பால் த்ரில்லிங் தருணங்களைப் பற்றி அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் கோலி, பண்ட்.
-
4 ரெண்டு மாஸ்க் போடுங்கப்பா!
-
5 1962 ல வந்த கார்ட்டூன் இது... இப்பவும் பொருந்துது!
உத்திரபிரதேசத்தில் தன் தாத்தாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவை என டிவிட்டரில் பதிவிட்டவருக்கு எதிராக FIR பதிவு செய்திருக்கிறது அரசாங்கம். இதன் காரணமாக இந்த கார்ட்டூனை மீண்டும் ஷேர் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
-
6 வரிசையில் காத்திருக்கும் சடலங்கள்
-
7 LEAVE 😷
இசையமைப்பாளர் யுவன் தன்னுடைய பக்கத்தில் குரோன் வரிகளை ஷேர் செய்திருந்தார். அதற்கு விமர்சனங்கள் எழ, நீங்கள் என்னைப் பின் தொடரவேண்டாம் என்று பதிலளித்திருந்தார்.
பதிவைக்காண இங்கே க்ளிக் பண்ணுங்க
-
8 ஹேப்பி பர்த் டே சமந்தா!
சமந்தாவுக்கு இன்னைக்கு ஹேப்பி பர்த்டே. நண்பர்களுடன் கேக் வெட்டிக்கொண்டாடியதை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.
-
9 இன்னுமொரு உ.பி சோகம்!
உத்திரபிரதேசத்தில் சுடுகாட்டில் புதைக்க அனுமதிக்காததால் திலக்தரிசிங் என்ற முதியவர் இறந்த தன்னுடைய மனைவியின் உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற சம்பவம் The Quint இணையதளத்தில் படத்துடன் வெளியானது. இந்த செய்தியும் படமும் ஃபேஸ்புக்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
-
10 தட்டான் தட்டான்
கர்ணன் படத்தின் தட்டான் தட்டான் பாடல் வீடியோ சாங் நேற்று வெளியானது. இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்தப் பாடலை தனுஷின் குரலுக்காகவும் ரஜீஷாவின் குட்டி குட்டி எக்ஸ்பிரசன்களுக்காகவும் நிச்சயம் பார்க்கலாம். வொர்த்து.
0 Comments