தமிழகத்தில் இருக்கும் 24 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.50 வரையில் உயர்த்தப்பட்டிருக்கிறது. இது ஏப்ரல் 1-ம் தேதி அதிகாலை முதல் அமலுக்கு வருகிறது.
சுங்கக் கட்டணம்
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 48 சுங்கச் சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச் சாவடிகளில் 24 டோல் பிளாசாக்களில் கட்டணம் உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாகிறது. ஏற்கனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சுங்கக் கட்டண உயர்வும் அவர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்று எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. 24 சுங்கச் சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.50 வரையில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
நாடு முழுவதும் 60 கி.மீ தூரத்துக்குள் இருக்கும் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருக்கிறார். அந்தக் கணக்குப்படி பார்த்தால், தமிழகத்தில் 6 சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு தமிழக அரசு சுங்கச் சாவடிகளை அகற்றுவது குறித்து வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது.
டோல் கட்டணம் உயரும் சுங்கச் சாவடிகள் எவை?
- ஆத்தூர் (தாம்பரம் – திண்டிவனம்)
- நல்லூர் (சென்னை – தடா)
- பரனூர் (தாம்பரம் – திண்டிவனம்)
- சூரப்பட்டு (சென்னை புறவழிச்சாலை)
- வானகரம் (சென்னை புறவழிச்சாலை)
- வாணியம்பாடி (கிருஷ்ணகிரி – வாலஜாபேட்டை)
- கிருஷ்ணகிரி (ஓசூர் – கிருஷ்ணகிரி)
- லெம்பாலக்குடி (திருச்சி – காரைக்குடி)
- லட்சுமணப்பட்டி (திருச்சி – காரைக்குடி)
- போகலூர் (மதுரை – ராமநாதபுரம்)
- நாங்குநேரி (மூன்றடைப்பு – அஞ்சுகிராமம்)
- பூதக்குடி (திருச்சி புறவழிச்சாலை – துவரங்குறிச்சி – மதுரை)
- பழையா (கந்தர்வகோட்டை, தஞ்சாவூர் – புதுக்கோட்டை)
- பள்ளிகொண்டா (கிருஷ்ணகிரி – வாலஜாபேட்டை)
- சிட்டம்பட்டி (திருச்சி புறவழிச்சாலை – துவரங்குறிச்சி – மதுரை)
- பட்டறைப்பெரும்புதூர் (திருப்பதி – திருத்தணி – சென்னை)
- புதுக்கோட்டை (வாகைகுளம்) – (திருநெல்வேலி – தூத்துக்குடி)
- எஸ்.வி.புரம் (திருப்பதி – திருத்தணி – சென்னை)
- சாலைபுதூர் (மதுரை – திருநெல்வேலி -பணகுடி – கன்னியாகுமரி)
- செண்பகம்பேட்டை (திருமயம் – மானாமதுரை)
- எட்டூர்வட்டம் (மதுரை – திருநெல்வேலி -பணகுடி – கன்னியாகுமரி)
- திருப்பாச்சேத்தி (மதுரை – ராமநாதபுரம்)
- கணியூர் (செங்கப்பள்ளி – கோவை புறவழிச்சாலை)
- கப்பலூர் (மதுரை – திருநெல்வேலி -பணகுடி – கன்னியாகுமரி)
Also Read – ஏப்ரல் 1 முதல் அமலாகும் 30% கிரிப்டோ வரி… எப்படி கணக்கிடுவார்கள்?