இல்லத்தரசிகள்தான் டிவி சீரியல்களைப் பார்ப்பார்கள் என்பதை மாற்றி இளசுகளையும் சீரியல் பார்க்க வைத்திருக்கிறது லாக்டவுன். டிவியில் மட்டுமில்லாது யூடியூப், ஓடிடி தளங்கள் என எங்கெல்லாம் சீரியல்கள் பார்க்க முடியுமோ அங்கெல்லாம் பார்த்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் தங்களுக்குப் பிடித்த சீரியல் நடிகர் – நடிகைகளைப் பின்தொடரவும் செய்கிறார்கள். இளைஞர்கள் சீரியல் பார்ப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அந்தந்த சீரியல் ஹீரோயின்கள்தான். சன், விஜய், ஜீ தமிழ் என பல சேனல்களில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களின் டாப் 10 சீரியல் நடிகைகள் யார் என்பதைப் பார்க்கலாமா…
-
1 ப்ரீத்தி ஷர்மா - சித்தி 2 (சன் டிவி)
கலர்ஸ் தமிழ் சேனலில் ஹிட்டான திருமணம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ப்ரீத்தி ஷர்மா. இந்த சீரியல் முடிந்தப்பிறகு சித்தி - 2 சீரியலில் நடிக்க கமிட்டானார். ராதிகா சரத்குமார் நடித்து பிரமாண்ட வெற்றிப்பெற்ற சித்தி சீரியலின் இரண்டாம் பாகம் பெரிய எதிர்பார்ப்போடு ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீரியலில் ராதிகாவுக்குத்தான் முக்கியத்துவம் என்றாலும் சில காரணங்களால் ராதிகாவால் இந்த சீரியலில் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் ப்ரீத்தி ஷர்மாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சித்தி - 2 சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் பலரின் கவனத்தைப் பெற்றிருக்கிறார், ப்ரீத்தி ஷர்மா.
-
2 டெல்னா டேவிஸ் - அன்பே வா (சன் டிவி)
பாரதிராஜா, வித்தார்த் நடித்த குரங்கு பொம்மை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் டெல்னா டேவிஸ். இவரும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஹிட்டான பேரழகி சீரியல் ஹீரோவாக நடித்த விராட்டும் இணைந்து நடிக்கும் சீரியல்தான், அன்பே வா. முதலில் விராட்டிற்காக இந்த சீரியலைப் பார்க்க ஆரம்பித்தவர்கள், தற்போது டெல்னாவிற்காகவே பார்க்கிறார்கள். தனது முதல் படத்திற்குப் பிறகு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் வராததால் சீரியல் வாய்ப்பு நன்றாகப் பயன்படுத்தி வருகிறார், டெல்னா.
-
3 பிரியங்கா நல்கரி - ரோஜா (சன் டிவி)
‘யாருப்பா இந்தப் பொண்ணு’ என தனது க்யூட்டான எக்ஸ்பிரஸன்களால் அனைவரைக்கும் வியக்க வைத்திருக்கிறார் பிரியங்கா நல்கரி. ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் பலரின் மனதில் ரோஜாவாகவே பதிந்தவர், பல சீரியல்களில் கேமியோவாகவும் வலம் வருகிறார். சீக்கிரம் சினிமாவிலும் ஒரு ரவுண்ட் வருவார் என்கிறார்கள்.
-
4 பவித்ரா ஜனனி - ஈரமான ரோஜாவே (விஜய் டிவி)
ரியாலிட்டி ஷோக்களின் மூலம் கவனம் ஈர்த்த பவித்ரா, ஹீரோயினாக நடிக்கும் சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் இரண்டு ஹீரோ - ஹீரோயின்கள் இருந்தாலும் பவித்ரா மற்றும் திரவியத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனை நன்றாக உணர்ந்து நடித்து வருகிறார் பவித்ரா.
-
5 ரச்சிதா மகாலட்சுமி - நாம் இருவர் நமக்கு இருவர் (விஜய் டிவி)
ரச்சிதா பல சீரியல்களில் ஹீரோயினாக நடித்த சீனியர் என்றாலும் ஒவ்வொரு சீரியலிலும் தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கிக்கொண்டே வருகிறார். அதனால்தான், அவர் சீனியர் என்றாலும் தொடந்து ஹீரோயின் வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.
-
6 ரோஷினி - பாரதி கண்ணம்மா (விஜய் டிவி)
கையில் டிராவல் பேக்கைத் தூக்கிக்கொண்டு இவர் நடந்தது மீம் கன்ட்டென்ட்டாக மாறியதில் இருந்து ஹிட்டடித்தது பாரதி கண்ணம்மா சீரியல். சீரியல் மட்டுமல்ல ரோஷினியும் பலரது கவனத்தை ஈர்த்தார். பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக கலக்கிக்கொண்டிருக்கிறார் ரோஷினி.
-
7 ஆல்யா மானஸா - ராஜா ராணி 2 (விஜய் டிவி)
ராஜா ராணி சீரியலில் நடித்ததற்குப் பிறகு திருமணத்திற்காக ப்ரேக் எடுத்துக்கொண்ட ஆல்யா, உடல் தோற்றத்திலும் நடிப்பிலும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே திரும்பி வந்திருக்கிறார். ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்தில் செம்பாவாக அடக்கி வாசித்தவர் தற்போது இரண்டாம் பாகத்தில் சந்தியாவாக வெளுத்து வாங்குகிறார்.
-
8 ஜாக்குலின் - தேன்மொழி பி.ஏ (விஜய் டிவி)
தொகுப்பாளினியாக தனது கரகர குரலை வைத்து ட்ரெண்டிங்கான ஜாக்குலின் சீரியலில் ஹீரோயினாக நடிக்கப்போகிறார் என்றதும், ‘ஆங்கரிங்தான் செட்டாகும்; ஆக்டிங் எல்லாம் வராது’ என கலாய்த்தவர்களுக்கு மத்தியில் வென்று காட்டியிருக்கிறார்.
-
9 ஷபானா - செம்பருத்தி (ஜீ தமிழ்)
1,000 எபிசோடுகளை கடந்து மெகா ஹிட்டடித்து இருக்கிறது செம்பருத்தி சீரியல். இதுவரைக்கும் ஜீ தமிழ் தொலைகாட்சியில் வெளியான சீரியல்களிலேயே மிக முக்கியமான சீரியலாக மாறியிருக்கும் செம்பருத்தி சீரியலின், மிகப்பெரிய பலம் ஷபானா.
-
10 ஆயிஷா - சத்யா (ஜீ தமிழ்)
விஜய் டிவியின் பொன்மகள் வந்தாள் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான ஆயிஷா, ஜீ தமிழ் சேனலில் நடித்துவரும் சீரியல்தான் சத்யா. இந்த சீரியலின் தொடக்கத்தில் ஆயிஷா போட்டிருந்த கெட்டப் அனைவரையும் கவர்ந்திருந்ததுதான், இந்த சீரியலின் வெற்றிக்கு முதல் காரணம். ரெளடி பேபியாக ஆயிஷாவின் நடிப்பு சிறப்பாக இருக்கும்.
0 Comments