தமிழில் பிரபல நடிகர்களின் ஆரம்பகாலம், பீக் டைம் மற்றும் சமீபத்திய படங்களில் உள்ள புகைப்படங்களின் தொகுப்பு இங்கே…
Also Read : பாலு மகேந்திராவைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்? ஒரு சின்ன டெஸ்ட்..!
-
1 ரஜினி
அபூர்வ ராகங்கள்ல ஆரம்பிச்ச ரஜினியோட சினிமா பயணம் பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து முத்துவா, அண்ணாமலையா, படையப்பாவா, பாஷாவா இது எல்லாத்தையும் தாண்டி ஒரு சூப்பர் ஸ்டாரா நிக்கிறாரு. இன்னைக்கு பல தர்பார்களைத் தாண்டி அண்ணாத்தையா களம் இறங்க இருக்காரு.
-
2 கமல்
களத்தூர் கண்ணம்மால குழந்தையா நடிக்க தொடங்குன கமல்ஹாசன் பல வெற்றிப்படங்கள்ல நாயகனா நடிச்சு விஸ்வரூபம் எடுத்து இன்னைக்கு விக்ரமா நிக்கிறாரு.
-
3 விஜய்
நாளைய தீர்ப்பு மூலமா அறிமுகமான, விஜய் பூவே உனக்காக எல்லாம் தாண்டி காதலுக்கு மரியாதை கொடுத்து கில்லி விளையாடி மாஸ்டரா நம்ம முன்னாடி நிக்கிறாரு.
-
4 அஜித்
அமராவதில அமைதியா தொடங்கின அஜித்தோட சினிமா வாழ்க்கை அமர்க்களமா மாறி பில்லாவா நின்னு மங்காத்தா விளையாடி வலிமையா வர இருக்காரு.
-
5 சூர்யா
நேருக்கு நேரா மோதும்போது `என்ன ஆவாரோ’னு நினைச்சாங்க. ஆனால், பிதாமகன், கஜினி, வாரணம் ஆயிரம்னு பட்டய கிளப்பி இன்னைக்கு போற்றக்கூடிய சூரரா இருக்காரு.
-
6 விக்ரம்
சேதுலயே அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி `நீ நடிகன்டா’னு பேர் வாங்கி காசி, ஜெமினினு தூள் பறக்கவிட்டு அந்நியனா மாறி இன்னைக்கு பவர்ஃபுல்லா நிக்கிறாரு.
-
7 தனுஷ்
`இவர்லாம் நடிகரா’னு துள்ளுவதோ இளமை கிண்டல் பண்ணவங்க எல்லாம் வாயடைச்சு போற அளவுக்கு பொல்லாதவனா மாறி நடிப்புல அசுரனா நிக்கிறதுதான் தனுஷோட ஸ்டைல்.
-
8 சிம்பு
சின்ன வயசுலயே `ஐ எம் எ லிட்டில் ஸ்டார், ஆவேன்டா சூப்பர் ஸ்டார்’னு பாடி வானம் தாண்டி விண்ணைத் தாண்டி படமே வரலைனாலும் மாநாடு கூடுற அளவுக்கு ரசிகர்கள சேர்த்து வச்சிருக்குறதுதான் சிம்பு ஸ்டைல்.
-
9 விஜய் சேதுபதி
சின்ன சின்ன ரோல்ல தொடங்கின சினிமா வாழ்க்கைல விடா முயற்சியோட போராடி ஸ்டைலா, கெத்தா சூது கவ்வும் பி.ஜி.எம்-ல நடந்து வர்ற கேங்ஸ்டரா, கொலை நடுங்க வைக்கிற பவானியா பலரையும் நடிச்சு மிரண்டு போக வைக்கிற விஜய் சேதுபதி எப்பவுமே வேற லெவல்தான்.
-
10 சிவகார்த்திகேயன்
மெரினால சின்னதா தொடங்கின வாழ்க்கை வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல சேர்ந்து பெரிய ஹீரோவா வளர்ந்து நம்ம வீட்டுப் பிள்ளையா மாறி டானா வெளிய வற இருக்காரு நம்ம, சிவகார்த்திகேயன்.
-
11 சிம்ரன்
வி.ஐ.பி, ஒன்ஸ் மோர், நேருக்கு நேர்னு முதல் வருஷத்துலயே தொடர்ந்து மூணு படங்கள்ல நடிச்ச சிம்ரன் அப்றம் பல படங்கள்ல நடிச்சு தூள் கிளப்பினாங்க. இப்போ பேட்ட வரைக்கும் வந்துட்டாங்க.
-
12 ஜோதிகா
வாலில வந்தாங்களானு கேக்குற அளவுக்கு சின்ன ரோல். பிறகு, சந்திரமுகியா மாறுனப்போ எல்லாரும் பயந்தாங்க. இப்போ `பொன்மகள் வந்தாள்’னு எல்லாரும் கொண்டாடுறாங்க. வேற யாரு நம்ம ஜோதிகாதான்.
-
13 நயன்தாரா
ஐயா படத்துல அறிமுகமான நயன் அறம், டோரா, மாயானு சோலோவா இறங்கி ஹிட் குடுத்து லேடி சூப்பர் ஸ்டாரா மாறி நெற்றிக்கண்ணைத் திறக்க இப்போ காத்திருக்காங்க.
-
14 த்ரிஷா
மௌனமா பேச ஆரம்பிச்சதுல இருந்து விஜய்க்கூட கில்லில தனலெட்சுமியா கலக்கி ஜானுவா யமுனை ஆற்றிலே பாடி பரமபதம் விளையாடுனது வரை... த்ரிஷா பண்ண எல்லாமே க்யூட் தான்.
-
15 தமன்னா
கேடி படத்துல அறிமுகம் ஆகி இருந்தாலும் கல்லூரிலதான் இவங்க வாழ்க்கை ஸ்டார் ஆச்சுனு சொல்லனும். அப்புறம் அயன், பையா, சிறுத்தைனு பல ஹிட் படங்களைக் கொடுத்து இன்றைக்கு வரைக்கும் கலக்குறாங்க.
-
16 கீர்த்தி சுரேஷ்
`இது என்ன மாயம்’ படத்துல இருந்து தமிழ் கெரியர ஸ்டார்ட் பண்ணி இருந்தாலும் முன்னணி ஹீரோக்கள் கூட நடிச்சு பட்டய கிளப்பினாங்க. அப்புறம் சாவித்ரியா நடிச்சதுக்கு நேஷனல் அவார்டும் வாங்கிட்டாங்க கீர்த்தி சுரேஷ்.
0 Comments