சமீபத்துல பேங்காக்ல இருந்து இந்தியா வந்த ஃப்ளைட்ல நடந்த ஒரு சண்டையோட வீடியோ சோசியல் மீடியால பெரிய அளவுக்கு வைரலாச்சு… இந்தியர்கள்னாலே இப்படித்தான்ங்குற ரேஞ்சுக்கு நிறைய பேரு வீடியோல கமெண்ட் பண்ணிருந்தாங்க… அதுக்கு இன்னும் சிலர், மொத்தமா இந்தியர்களைக் குறை சொல்லாதீங்க… அது நார்த் இந்தியன்ஸ்னு கமெண்ட் பண்ணிருந்தாங்க… நாம இந்த வீடியோவுல பார்க்கப்போறது டிரெயின் தொடங்கி இப்போ ஃப்ளைட் வரைக்கும் வந்துட்ட நார்த் இந்தியன்ஸ் அலப்பறைகள் பத்திதான்.
பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல 2022 ஜூன் மாசம் நடந்த ஒரு சம்பவம் ரயில்வே டிபார்மெண்டையே ஜெர்க் ஆக வைச்சது.. அப்படி என்ன நடந்துச்சுனுதானே கேக்குறீங்க… கடந்த ஜூன் 16-ம் தேதி டிக்கெட் செக்கர்ஸும் ரயில்வே போலீஸும் KSR Bengaluru-Danapur Sanghamitra Express-ல டிக்கெட் பரிசோதனைல ஈடுபட்டாங்க… அந்த டிரெயின் மட்டும் இன்னோரு ரயில்லயும் சேர்த்து டிக்கெட் எடுக்காம ரிசர்வ் கோச்ல கிட்டத்தட்ட 683 பேர் பயணம் பண்ணதைக் கண்டுபிடிச்சாங்க அவங்க… ஒரே டிரெயின்ல இவ்வளவு பேரானு ஆச்சர்யப்பட்ட அவங்க, பெரம்பூர் ஸ்டேஷன்ல அத்தனை பேரையும் இறக்கிவிட்டு, டிக்கெட் இல்லாம பயணிச்சதுக்காக அவங்க கிட்ட இருந்து கிட்டத்தட்ட ரூ.3.38 லட்சம் அபராதம் வசூல் பண்ணாங்க… அவங்கள்ல பெரும்பாலாவங்க மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவங்க. இதே மாதிரி ஒரு சம்பவம்தான் கடந்த மே 24-ம் தேதி செங்கல்பட்டு ஸ்டேஷன்ல நடந்துச்சு…
அன்னிக்கு Howrah-Kanyakumari Express டிரெயினோட எமெர்ஜென்ஸி செயினைப் பிடிச்சு இழுத்து ரிசர்வ்டு கோச் பேசஞ்சர்ஸ் நிப்பாட்டுனாங்க.. என்னடா ஆச்சுனு ரயில்வே அதிகாரிகள்லாம் பதறியடிச்சு போய் விசாரிச்சா, அன்ரிசர்வ்டு டிக்கெட் வாங்கிட்டு ரிசர்வ் கோச்ல கூட்டமா நிறைய பேர் பயணம் பண்றதா புகார் வந்திருக்கு. விசாரிச்சதுல இப்படி 300 பேருக்கும் மேல டிராவல் பண்றதைக் கண்டுபிடிச்சு, அவங்களை வெளியேத்துனாங்க. அதே ஜூன் மாதத்தில் இன்னொரு சம்பவமும் நடந்துச்சு… பீகார்ல இருந்து சென்னை வழியாக எர்ணாகுளம் செல்லும் Rapti Sagar Express சென்னை வந்தப்போ டிக்கெட் பரிசோதனை நடத்துனதுல டிக்கெட் எடுக்காம பயணிச்சவங்க கிட்ட இருந்து கிட்டத்தட்ட ரூ.51,540 ஃபைனா வசூல் பண்ணாங்க. அதே டிரெயின் காட்பாடி வந்தப்போ செக் பண்ணாங்க.. அதுல ரூ.1, 05, 500 ஃபைன் வசூல் பண்ணாங்க ரயில்வே அத்தாரிட்டீஸ்.. இந்தத் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துச்சு… ஒரே டிரெயின்ல இவ்வளவு பேர் டிக்கெட் எடுக்காம பயணிக்குறாங்களா… இதையெல்லாம் முறையா பரிசோதிச்சு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்கணும்ங்குற குரல் வலுத்துச்சு.
பொதுவா நார்த் இந்தியா போற டிரெயின்ல ஆந்திரா தாண்டிட்டாலே கொஞ்சம் கவனமாப் போங்கனுதான் வழக்கமா டிரெயின் டிராவல் பண்றவங்க நமக்குக் கொடுக்குற அட்வைஸா இருக்கும். அதுக்குக் காரணம், நார்த் இந்தியன்ஸ் அன் ரிசர்வ்டு டிக்கெட் எடுத்துட்டு ரிசர்வ்டு கோச்ல வந்து சீட்ல உக்காந்துக்குறது, அந்த சீட்டுக்கு உரிய நபர் வந்து கேட்டாலும் சரியா பதில் சொல்லாம சண்டைக்கு வர்றதுன்னு ஏகப்பட்ட சேட்டை பண்ணுவாங்கனு சொல்றதுண்டு. இந்த புகார்ங்குறது ஏதோ ஒன்றிரண்டு பயணிகள் சொல்றது இல்ல; சவுத்ல இருந்து நார்த்துக்கு அடிக்கடி பயணிக்குற பாசஞ்சர்ஸோட தினசரி பஞ்சாயத்து இது…
Also Read – வானத்துல இருந்துலாம் குதிக்கிறீங்க… தமிழ் சினிமாவின் வித்தியாசமான புரமோஷன்கள்!
சரி டிரெயின்லதான் இப்படி ஒரு பஞ்சாயத்துனு பார்த்தா சமீபத்துல பாங்காங்ல இருந்து கொல்கத்தா வந்த ஃப்ளைட் ஒண்ணுலயும் இப்படியான ஒரு பஞ்சாயத்து அரங்கேயிருக்கு. தாய்லாந்துல இருந்து கடந்த டிசம்பர் 26-ம் தேதி கிளம்புன ஸ்மைல் ஏர்வேஸ் ஃப்ளைட்ல அந்த விமானத்தோட ஃப்ளைட் க்ரூ சொல்லியும் ஒரு பயணி தன்னோட சீட்டை அட்ஜஸ்ட் பண்ணிக்க விரும்பலையாம். உடனே, அங்கிருந்த மற்ற சில பயணிகள் அவரை குரூப்பாப் போய் தாக்கத் தொடங்கியிருக்காங்க… இன்னும் சொல்லப்போனா அவங்களுக்காக இவர் தன்னோட சீட்டை அட்ஜஸ்ட் பண்ணிக்கலையோனு கோபத்துல அடிக்கப்போனதா சொல்றாங்க. ஒரு கட்டத்துல ஃப்ளைட் க்ரூல இருக்கவங்க சொல்லியுமே அந்தக் கும்பல் அட்டகாசத்தை நிறுத்தல. இதுபத்தின வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக்னு சோசியல் மீடியாவுல வைரலாச்சு.. இந்தியர்கள்னாலே இப்படித்தான்னு ஒரு சிலரும், இல்ல இல்ல அவங்க நார்த் இண்டியன்ஸ்னு பலரும் கமெண்ட் பண்ண ஆரம்பிச்சாங்க.. அதுலயும், அவங்க எல்லாருமே நார்த் இண்டியன்ஸ் மட்டுமில்ல; கடைந்தெடுத்த சங்கீஸ்னு ஒரு குரூப் கிளம்புச்சு…இன்னும் சிலரோ, அவங்க சங்கீஸ் மட்டுமில்லை, மேல்தட்டு வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்னு சொல்லி கமெண்ட்ஸ்ல தெறிக்கவிட்டாங்க. எது எப்படியோ நம்ம நாட்டோட பெயர்தான் அங்க நாறுச்சு. அதே மாதிரி ஒரு சம்பவம்தான் டிசம்பர் 16-ம் தேதி நடந்துச்சு.. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்ல இருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானத்தில், பயணி ஒருவருக்கும் விமானப் பணிப்பெண் ஒருவருக்கும் நடந்த ஹீட்டர் ஆர்க்யூமெண்ட் வீடியோவும் வைரல் ரகம்தான்.. `நீங்களாம் வேலைக்காரர்கள்தானே’னு அந்தப் பயணி பேசுனது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்துச்சு… இந்த சம்பவங்கள் பத்தி இந்திய விமானப் போக்குவரத்துத் துறை விசாரணை நடத்துச்சுங்குறது இன்னொரு பக்கம்!
ரயில்களைப் பொறுத்தவரை அன் ரிசர்வ்டு கோச்ல 120 முதல் 130 சீட்கள் இருக்கும். நீண்ட தூர ரயில்கள் இப்படியான 3 அல்லது 4 பெட்டிகளைக் கொண்டிருக்கும். இருந்தும் இந்த ரயில்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் 700 முதல் 800 அன் ரிசர்வ்டு டிக்கெட்டுகள் விற்கப்படும். இதுபோன்ற நீண்ட தூர பயணத்தில் டிமாண்ட் என்ன என்பது பற்றி ரயில்வே அடிக்கடி ஸ்டேட்டஸ் அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்படி, டிமாண்ட் அதிகரிக்கையில் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்கிறார்கள் பயணிகள் தரப்பில். இதுவே ரயில்வே தரப்பில், பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்கள் போன்ற டிமாண்ட் சமயங்களில் சிறப்பு ரயில்கள் விடுவது வாடிக்கைதான். அதுபோல, பொதுவாகவே பயணிகள் அதிகம் பயன்படுத்தும் ரூட்களில் முன்பதிவில்லா அந்தியோதயா ரயில்கள் போன்ற வசதிகளும் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் ரயில்வே மட்டுமல்லாது, பயணிகளின் ஒத்துழைப்பும் அவசியம் என்கிறார்கள். அரசு தரப்பில் டிரெயினின் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது குற்றம் என்பது பற்றியும், ரிசர்வ்டு டிக்கெட் என்பதன் பொருள் பற்றியும் பயணிகளுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படியான நார்த் இந்தியன்ஸ் அலப்பறைகள் பற்றிய அனுபவம் உங்களுக்கு இருக்கா… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!