டி.வி சீரியல் Vs வெப் சீரிஸ் | சினிமாக்களைத் தாண்டி இன்று மக்கள் பொழுதுபோக்கிற்கு அதிகம் விரும்பி பார்ப்பது ஆன்லைனில் ஒளிபரப்பாகும் வெப் சீரிஸ்களைத் தான். பதிவுகளை காட்சிப்படுத்துவது தொடங்கி, இசை, திரைக்கதை, பார்க்கும் அனுபவம் வரை நேர்த்தியாக இருக்கும் இந்த வெப் சீரிஸ்கள் ஒரு பக்கம். கடந்த 30 வருஷமா ஒரே கதை தான், ஆனா நடிகர்கள் தான் வேற வேற-ன்னு இருக்க டி.வி சீரியல்கள் ஒரு பக்கம். அம்மாக்கள் ஒரு சைடு சலிக்காம சீரியல் பார்த்த, இந்த 90’ஸ் கிட்ஸுகளும், 2k கிட்ஸும் விடிய விடிய வெப் சீரிஸ்களை பார்த்துட்டு இருக்காங்க. ரெண்டுத்துல எது பெஸ்ட்-ன்னு பார்க்கலாமா?
டி.வி சீரியல் Vs வெப் சீரிஸ் – கதை
ஒரு சின்ன குரும்படமா இருந்தாலும் கதை ரொம்பவே முக்கியம். கதையை எந்த அளவுக்கு ஆர்வமா இருக்கோ, அதே அளவு அது வெற்றியடையும். டிவி சீரியல்களின் கதையை ஒப்பிட்டு பார்க்கும்போது, வெப் சீரிஸ்களின் கதைச் சுருக்கம் ரொம்பவே ஷார்ட் & கிரீஸ்பா இருக்கும்.
அதே போல எபிசோட்-களின் கணக்குகளும் வெப் சீரிஸ்களில் ரொம்ப கம்மி. அதனால் பார்க்கவும் விறுவிறுப்பா இருக்கும். அதுவே டிவி சீரியல்-னா வருஷ கணக்கா எதுவும் இல்லாத கதையை க்ளோஸ் அப் ஷாட்டா வெச்சு வெறுப்பெத்துவாங்க.
டி.வி சீரியல் Vs வெப் சீரிஸ் – நடிகர்கள்
கதைக்கு உயிர் கொடுப்பதே நடிகர்கள் தான், அதனால கேரக்டர்களுக்கு பொருந்தும் நடிகர்களை தேர்வு செய்வதும் ஒரு மிக முக்கிய பொறுப்பு-ன்னு சொல்லலாம். வெள்ளித்திரையில் நடிக்கும் அதே நடிகர்கள் பலர் வெப் சீரிஸ்களிலும், டிவி சீரியல்களும் நடிக்குறாங்க. அவர்களை பொறுத்த வரை எல்லாருமே எதர்த்தமான நடிப்பை வெளிப்படுத்திட்டு வர்றாங்க. சில சமயம் சீரியல்களில் அது ஓவர் அக்டிங்-ன்னு பச்சையாகவே தெரியும். கொஞ்சம் மேக்கப் & நகையை எடுத்து சம்மந்தமே இல்லாமா மாட்டிக்கொள்வதை தவிர்க்கலாம்னு தோணுது.
காட்சிகள்
கதையை காட்சிப்படுத்துவது ஒரு இயக்குநரோட புத்திசாலித்தனத்துல தான் இருக்கு. ஆனா டிவி சீரியல்களில் எதுக்குடா இந்த சீன்-லாம் எடுத்து வெச்சு இருக்கீங்க! எதுக்குடா எப்படி ஒரு சீன்? என்னடா பண்ணி வெச்சு இருக்கீங்க ? அப்படின்னு தான் கேட்க தோணும். நிஜமாவே எபிசோடை எப்படி போட்டு உருட்டுறது-ன்னு தெரியாம போட்டு உருட்டு உருட்டு-ன்னு உருட்டி இருப்பாங்க. சில சமயம் இது வெப் சீரிஸ்களிலும் நடக்கும் ஆனா அவ்ளோ பெரிய உருட்டா-லாம் இருக்காது.
சோ, டெய்லி எபிசோட்-களில் சில சீன்களை தவிர்ப்பது சீரியல் காரர்களுக்கு ரொம்ப நல்லது.
டாக்சிக் கேரக்டர்கள்
எடுக்குறதுலாம் சைக்கோ கதைகள் இதுல நாங்க டாக்சிக்கா அப்படின்னு சில சீரியல் பிரியர்கள் சண்டைக்கு வரலாம். ஆனாலும் இதை சொல்லியே ஆகணும்.
சில வெப் சீரிஸ்கள் பார்க்க கொஞ்சம் கொடூரமா தான் இருக்கும். ஆனா அதை விட இவங்க செய்யும் அலப்பறைகள் அதிகம். ஒரு குடும்பத்தை எப்படி சின்னாபின்னம் ஆக்குறது.
ஒரு பொண்ணுக்கு 2 புருஷன், ஒரு பையனுக்கு 2 பொண்டாட்டி, தற்கொலைகள், கொலைகள்-ன்னு சீரியல் முழுக்க Toxic Mentality உள்ள கேரக்டர்கள் அதிகம் உலாவிட்டு இருக்கு. சில சமயம் ரிமோட்டை தூக்கி அடிக்கலாம்னு தோணும். அதே போல பெண்களை கார்னர் செய்யும் கதைகள் இன்னமும் டிவி சீரியல்களில் வந்துட்டு தான் இருக்கு. இதுல என்ன கொடுமைனா … பாவத்த அவங்களே இதை உட்கார்ந்து டெய்லி பாக்குறாங்க.
எங்கேயும் எப்போதும்
24*7 மணி நேரமும் இன்டர்நெட் கையிலே இருக்குறதால எங்கே எந்த நேரத்திலும் புடிச்சத்தை பார்க்க முடியுது. அதே போல hotstar, netflix, amazon prime, zee, sony, aha என பல்வேறு ஓடிடி தளங்கள் பார்க்க நேரமில்லாத அளவுக்கு சீரிஸ்களை ரிலீஸ் பண்ணிக்கிட்டே இருக்காங்க. அதுவும் சில வேற்றுமொழி சீரிஸ் பாக்குறோம்னா, வித் சப் டைட்டில் ஓட ஓடிடி தளங்கள் அதை கொடுக்குது. வெப் சீரிஸ் பார்ப்பவர்களுக்கு இது ஒரு பெரிய வரம். சில டிவி சீரியல்கள் ஓடிடி-யிலும் இருக்கு. ஆனா நம்ப ஒரு ஒரு நாளும் வெய்ட் பண்ணி தான் பார்க்கனும். சீரியல்களில் இது ஒரு மைனஸ்.
இப்போ நான் சொன்ன காரணங்கள் தவிர்த்து பல விமர்சனங்கள் பார்வையாளர்களுக்கு இருக்கலாம். அதனால உங்களுக்கு சீரியல் புடிச்சா சீரியல் பாருங்க. வெப் சீரிஸ் புடிச்சா சீரிஸ் பாருங்க. அப்படியே இது வரை நீங்க பார்த்த பெஸ்ட் சீரியல் / வெப் சீரிஸ் எது-ன்னு கமெண்ட்ல சொல்லுங்க.