சமீபத்துல மும்பை மேரி ஜான் சீரிஸ் ரிலீஸ் ஆச்சு. மொத்தம் 10 எபிசோட்கள். அதுல தாவூத் இப்ராஹிம் வாழ்க்கையைச் சொல்லியிருந்தாங்க. அதுல சாதாரண பையன் எப்படி சர்வதேச டானா மாறுனான் அப்படினு ஒரு எலிவேஷன் இருக்கும். அதுக்காக தாவூத் பல சம்பவங்களை பண்ற மாதிரி காட்டியிருப்பாங்க. ஆனா ஒவ்வொரு சம்பவமும் இன்னைக்கும் வரலாறா இருக்கு. அப்படி தாவூத் பண்ண சில சம்பவங்களைத்தான் இந்த எபிசோட்ல பார்க்கப்போறோம்.
தாவூத்தோட ஸ்டோரியை சுருக்கமா சொல்லணும்னா, மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம் கேஸ்கர்ங்குற சாதாரண கான்ஸ்டெபிளோட மகனா இருந்து கடத்தல், போதைப்பொருள், கிரிக்கெட் பெட்டிங், கார்ப்பரேட் பஞ்சாயத்துனு இன்னைக்கு உலகமே தேடுற சர்வதேச டானா மாறியிருக்கார்.
தாவூத் இளம் வயசுலயே கிரிமினல் வேலைகள்ல ஈடுபட ஆரம்பிச்சார். தாவூத்தோட அப்பா ஒரு நேர்மையான போலீஸ்காரர். லங்சமே வாங்காத போலீஸா வேலை பார்த்தார். 12 குழந்தைகள் கொண்ட குடும்பம். மிகப்பெரிய குடும்பத்துக்கு போதுமான வருமானம் இல்லை. தன் பசங்களுக்கு சாப்பாடுகூட போட முடியாத நிலையிலதான் இப்ராஹிம் இருந்தார். தான் எவ்ளோ கஷ்டப்பட்டாலும் குடும்பத்துக்கு கஷ்டம் வரக்கூடாதுனு நினைக்கிறவர். ஆனாலும் தவூத்தை மட்டும் இங்க்லீஷ் மீடியம் ஸ்கூல்யும், டிராஃபிக் போலீஸ் ஸபயிற்சியிலேயும் சேர்த்துவிட்டார். ஒருமுறை ஒரு வழக்குல தாவூத்தோட அப்பா சஸ்பெண்ட் ஆனதுக்கு பின்னால குடும்ப சூழல் ரொம்ப மோசமா போச்சு. அதனால படிப்பை பாதியிலயே கைவிட்டார், தாவூத். டிராஃபிக் பயிற்சிக்கு போறதையும் நிறுத்திட்டார். இயல்பான வாழ்க்கையை விட்டு விலகிட்டார் தாவூத். ஸ்கூலுக்கு போகாததால நேரம் அதிகம் கிடைச்சது. நண்பர்கள்கூட சுதந்திரமா ஊர் சுற்ற ஆரம்பிச்சார். குடும்ப வறுமை பணம் சம்பாதிக்கணும்னு ஒரு வெறியை தாவூத்துக்கு உருவாக்கிச்சு. இதுக்காக உள்ளூர் ரவுடிகளோட வழியில குறுக்கிட்டு அவங்களை வம்பிழுக்க ஆரம்பிச்சார். 14 வயசுல முதல் முதலா குற்றச் செயல்ல இறங்குறார்.
தனக்கு கேங்க் ஒன்னு ஃபார்ம் பண்ணனும்னு முடிவு பண்ணி தன்னோட சொந்த ஊர்ல இருந்து ஆட்களை வரவைக்கிறார். அந்த கேங்க்கோட ப்ளான் என்னன்னா?, ஒரு ப்ராஜெக்ட்னா அசம்பிள் ஆகணும். பிரச்னைனா ஊர்ப்பக்கம் போயிட ணும். இதுதான் அவங்க பார்முலா. முதல்முதலா மாமூல் வாங்குறதுல ஆரம்பிச்சு, வாட்ச் ஃபோர்ஜெரினு அப்கிரேட் ஆனாலும் பெரிசா ஏதாவது செய்யணும்னு குறியா இருந்தார். இதுக்காக முதல்ல பண்ண சம்பவமே அந்த ஊர்ல பெரிய டானா இருந்த பாசுதாதாங்குறவரை அடிச்சு, டான் தொழிலைவிட்டே ஓடவிட்டார், இதுதான் மக்கள் மத்தியில இவருக்கான பயத்தை அதிகமாக்கினது. அடுத்து பண்ணதுதான் முக்கியமான சம்பவம்..
Also Read – சின்னதா வந்து சில்லறையை சிதறவிட்ட குட்டி வில்லன்களைத் தெரியுமா?
ஒருமுறை தங்கக்கடத்தல் மன்னன் ஹாஜி மஸ்தான், தாவூத் ஆட்கள் இரண்டு பேரை பத்தான் கும்பலை வைச்சு அடிச்சு உதைச்சார். என் டெரிட்டரிக்குள்ள வர்ற ஹாஜிக்கு சரியான பாடம் புகட்ட முடிவு பண்ணார் தாவூத். 1972-ம் வருஷம் அது நடந்தது. ஹாஜி மஸ்தானோட கருப்பு பணம் கார்ல கொண்டுபோகப் போறதா தாவூத்க்கு தகவல் கிடைச்சது. நண்பர்கள்கூட சேர்ந்து திட்டம் போடுறார். மொத்தமா 98 பேர் கொண்ட டீம் தயாராச்சு. பெரிய லெவல் அட்டாக்ங்குறதால கவனமா இருந்தார். இதுக்கு சரியான இடம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பாலமா இருந்தா நல்லா இருக்கும்னு ப்ளான் தயாராகுது. பாலத்தோட ரெண்டு முனையில ஆட்கள் தயாரா இருக்காங்க. அப்போ ஒரு கார் தனியா வருது. பாலத்தை முன்னாலயும், பின்னாலும் லாக் பண்ணி துப்பாக்கி வைச்சு கார்ல இருந்த 4.75 லட்சம் பணத்தை கொள்ளையடிக்கிறாங்க. தாவூத்தோட முதல் கொள்ளை வெற்றி அடைஞ்சது. ஆனா அங்கதான் ஒரு ட்விஸ்ட்டே இருந்தது. அந்த பணம் ஹாஜிக்கு சொந்தமானது இல்ல, ஒரு பேங்க்குக்கு சொந்தமான பணம். அது பேங்குக்கு போற வழியில அந்த கார்ல கொள்ளையடிச்சிருக்காங்க. இது மிகப்பெரிய சம்பவமா பேசப்பட்டுச்சு. மறுநாள் தாவூத் படத்தோட தலைப்புச் செய்திகள்ல வந்தார்.
மும்பையே அவரைப் பத்திதான் பேசினாங்க. அதைப் பார்த்த இப்ராகிம் மனம் உடைஞ்சு போனார். நேர்மை தவறாத தனக்கு அவமானத்தைக் கொடுத்துட்டானேன்னு கவலைப்பட்டார். தாவூத் நண்பர்கள் மூலமா கஷ்டப்பட்டு தாவூத்தையும், அவர் அண்ணனையும் கண்டுபிடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தார். ஒரு ரூம்க்குள்ள அடைச்சு வைச்சு இரவு பகலா பெல்ட்டால அடி பிரிச்சார், அவங்க அப்பா. அந்த அறைக்குள்ள அலறல் சத்தம் கேட்டுக்கிட்டே இருந்தது. கடைசியா ரெண்டு பேரையும் போலீஸ்ல ஒப்படைச்சார், ஆனா அவங்க அப்பாவோட நேர்மையை பார்த்த போலீ நடவடிக்கைகள் எடுக்காம, வழக்கு மட்டும் பதிவு பண்ணிட்டு விட்டாங்க. அந்த வழக்கு கடைசி வரைக்கும் நிலுவையிலதான் இருக்கு. இதுபோக பதான்களை அழிக்க போலீஸ் தாவூத் பின்னால் இருந்து மூளையா செயல்பட்டுச்சுன்னு கூட சொல்லலாம். பதான்களோட மோதல், ஹாஜி மஸ்தானோட சமரசம்னு அடுத்தடுத்து தன்னோட பிசினஸ்களை கவனிக்க போயிட்டார்.
மிரட்டி பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்துகூட கடத்தல் தொழிலிலும் களமிறங்கினார். தாவூத்துக்கு கடத்தல் தொழில் புதுசா இருந்தாலும் சரியா செஞ்சார். கடத்திட்டு வர்ற தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை நடுக்கடல்ல நிறுத்தி படகு மூலமா கரைக்கு கொண்டு வந்தார். கப்பல் பாணி மட்டும் இல்லாம, விமானம் மூலமா தங்கக்கட்டிகள் கடத்துனார். மிட்டாய் பெட்டிகள்ல தங்கத்தை கடத்துனார். அதை குப்பை தொட்டியில போட்டு, அதை துப்புரவு ஆட்களை வைச்சு வெளில கொண்டு வந்தார். இதுபோல தங்கம் கடத்துறதுக்கே ஒரு படையே உருவாக்கினார், தாவூத். அப்போதான் டி கம்பெனினு தன்னோட கம்பெனிக்கு பெயரை வைச்சார். அதையும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடிக்க, டெக்னிக்கை வேற மாதிரி மாத்தினார். ஆசனவாயில தங்கத்தை வைச்சு கடத்த ஆரம்பிச்சார். கப்பல்லேயும், விமானத்துலயும் தங்கம் வந்து இறங்கிட்டே இருந்துச்சு. தாவூத் கொஞ்சம் கொஞ்சமாக மும்பையை ஆக்கிரமிக்க ஆரம்பிச்சார்.
இந்த நிலையில மும்பை பதான்கள் கோபமாகி இவரோட அண்ணனை நடுரோட்ல வைச்சு சுட்டுப்போட்டாங்க. இதுக்கு பழிவாங்க கொலை செய்தவனை கோர்ட்லயே வைச்சு துப்பாக்கியால சுட வைச்சார், தாவூத். கோர்ட்ல நடந்த கொலையால மறுபடியும் தாவூத் பிரபலமானார். கூட இருக்கிற நபரா இருந்தாலும் தனக்கு பின்காலத்துல ஏதாவது பாதிப்பு வரும்னா, அவங்களை காணாம பண்ணிடுவார். 1986-ம் வருஷம் துபாய்க்கு தப்பி போய் அங்க இருந்தே மும்பையை ஆண்டார், தாவூத். உலகம் முழுக்க தன் குழுவை விரிவுபடுத்துனார். இதுதான்னு இல்லாம அரசியல், சினிமானு எல்லாத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டுவந்து சர்வதேச டானா உருமாறினார். அதுக்கப்புறம் மும்பையில ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புகள்லயும் இவருக்கு தொடர்பு இருந்தது. சரணடையிறேன், ஆனா என்னை வீட்டுக்காவல்லதான் வைக்கணும், என் மேல இருக்கிற வழக்குகளை நீக்கணும்னு கோரிக்கை வைச்சார். அனா அதை இந்திய அரசு ஏற்க மறுத்தது. அதனால பாதுகாப்பு கருதி, பாகிஸ்தான்ல இருக்கிற கராச்சிக்கு போயிட்டார். அதுக்கப்புறம் அவர் எங்க இருக்கிறார்னு யாருக்குமே தெரியலை. ஆனா இன்னமும் நிழல் உலக தாதாவா தாவூத் வலம் வந்துக்கிட்டிருக்கார்.
இந்த கதையில துபாய் போனது வரைக்கும்தான் இப்போ வெளியாகியிருக்கிற மும்பை மேரி ஜான்ல வந்துருக்கு. இன்னும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் இருக்கு. தாவூத்க்கும் அயனுக்கும் இருக்கிற ஒற்றுமை என்னன்னா?, அயன் படத்துல ப்ரெட்டுக்குள்ள கோல்ட் பிஸ்கெட் கொண்டு வருவாங்கள்ல அது தாவூத்தோட இனிப்புக்குள்ள லட்டை வைச்சு கடத்துற டெக்னிக்கோட இன்ஸ்பிரேஷன்தான்.