விக்ரம், விஜய் சேதுபதி பெயர்களை சொன்னாலே, என்னமா நடிக்கிறாங்க? இப்படிலாம் நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைச்சது வரம்ல?னு தோணும். ஆனால், ரெண்டு பேரும் சோலோவா ஹிட் கொடுத்து எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க.. விக்ரம் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து 17 வருஷம் ஆச்சு. விஜய் சேதுபதி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து 4 வருஷம் ஆச்சு. ரெண்டு பேரும் கடைசியா என்ன படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தாங்கனு கடைசில சொல்றேன். அதுக்கு முன்னாடி, இவங்க ரெண்டு பேரும் எங்க மிஸ் பண்றாங்கனு இந்த வீடியோல பார்ப்போம்.
தூள், சாமி, பிதாமகன்னு தொடர்ந்து விக்ரம் பல ஹிட்களை கொடுத்துட்டு இருந்த சமயத்துல முன்னணியான பத்திரிக்கை நிறுவனம் நேற்று ரஜினி.. இன்று விக்ரம்னு டைட்டில் போட்டு அடுத்த சூப்பர் ஸ்டார் விக்ரம்ன்ற அளவுக்கு எழுதியிருந்தாங்க. ரஜினி ஒரு மேடையில, “ஹாலிவுட்லகூட இந்த அளவுக்கு ஒரு நடிகர் கேரக்டருக்கு மெனக்கெடுவாரானு தெரியலை. சீனியர் ஆர்டிஸ்ட்டா ஹேட்ஸ் ஆஃப்”னு சொல்லுவாரு. கமல்ஹாசன் மீரா படம் பார்த்துட்டு, யாருயா இந்த பையன்? சினிமால பெரிய ஆளா வருவான்யானு மிரண்டு போனதா மேடைல சொல்லுவாரு. இப்படி விக்ரம் முன்னணி நாயகர்களுக்கே நடிப்புல சவால் விட்டவரு. ஆனால், இன்னைக்கு விக்ரம் படங்கள் எல்லாமே தோல்வியை மட்டுமே சந்திக்குது.
Also Read – ஒரு கதை சொல்லட்டா சார்… ஜெய் பீம் மணிகண்டன் செம சினிமா ஜர்னி!
முதல் காரணம், கதை – நல்ல நடிகர்கள் எவ்வளவோ பேர் இருக்காங்க. ஆனால், காணாமல் போய்டுவாங்க. அதுக்கு கதைகள்தான் காரணம். சரியான கதைகள் இல்லாமல் திணறி காணாமல் போறாங்க. நல்ல நடிக்கிறாருனு ஒரு சீன்ல சொல்ல வைக்கலாம். ஆனால், அந்த சீனை ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு சீன்லயும் சொல்ல வைச்சிட்டே இருக்கணும். அப்போதான் சினிமா துறைல சர்வைவ் பண்ண முடியும். அந்த ஒவ்வொரு சீனும் பேசப்பட கதை முக்கியம். கதை கேட்கும்போது அந்த கதை நல்லாருக்கானு பார்க்குறதை விட அந்தக் கதைல அவர் நடிக்கிறதுக்கு எவ்வளவு ஸ்கோப் இருக்குனு பார்க்குறாரு. இன்னைக்கு சினிமா ரசிகர்கள் ரொம்பவே அப்டேட் ஆயிட்டாங்க. அவங்க ரசிகர்கள் நல்ல கதையைதான் எதிர்பார்க்குறாங்க. அந்த கதைக்கு நியாயம் செய்தால் போதும். கஷ்டப்பட்டு மெனக்கெட்டு நடிக்கிற விக்ரம், கமல், சூர்யா படங்களைவிட ரஜினி, விஜய், அஜித், கார்த்தி, தனுஷ் படங்களுக்கு மாஸ் ஓப்பனிங், வெற்றிலாம் கிடைக்க ரசிகர்களோட மனசை அவங்க புரிஞ்சுகிட்டது தான் காரணம். இதை மனுஷன் தவிரவிடுறாரு.
இரண்டாவது காரணம், கேரக்டர் – ஹீரோயிஸம் எங்க எடுபடும்னு கேட்டா, நல்ல வில்லன்கள் இருந்தால் மட்டும்தான். விக்ரமோட கடைசி பல படங்களை எடுத்துப் பார்த்தா எல்லா ரோலையும் வித்தியாசமா நடிக்கிறேன்னு அவரே நடிக்கிறாரு. கதைக்கு டபுள் ரோல் தேவையில்லாத பட்சத்துல அதை பண்ணா போர் அடிக்கதான் செய்யும். இன்னொன்னு டபுள் ரோல் பண்ணும்போது அந்த வில்லன் எஃபெக்ட் முழுசா இல்லாமலேயே போகுது. இந்த தப்பை விக்ரம் தொடர்ந்து பண்றாரு.
மூன்றாவது காரணம், விமர்சனம் – தோல்வி படங்கள் பத்தி முன்னணி நடிகர்கள் வெளிப்படையா பேசுறாங்க. விமர்சனங்களை ஏத்துக்குறாங்க. ஆனால், விக்ரம் தன்னோட தோல்வி படங்களை பத்தி எங்கயும் பேசுறதில்லை, விமர்சனங்களையும் பெருசா கவனிக்கிறதில்லைனு தோணுது. அப்படி விமர்சனங்களை கவனிச்சா கதைல மனுஷன் எப்பவோ கவனம் செலுத்த தொடங்கியிருப்பாரு.
விஜய் சேதுபதியும் படத்துல இருக்காரா? அப்போ நம்பி போய் பார்க்கலாம். விஜய் சேதுபதி படமா அப்போ பார்க்க வேணாம்ன்ற மீம் செம டிரெண்டா போச்சு. அதேமாதிரிதான், ஏ.கே 62 படத்துல இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிட்டாருனு தகவல்கள் வந்ததும், நீ ஏன் சோகமா இருக்க தம்பி, போய்.. விஜய் சேதுபதியை பாருங்கனு சொல்ற மாதிரியான மீமும் ரெண்ட் ஆச்சு. விஜய் சேதுபதியும் ரஜினி, கமல், விஜய்னு எல்லாரும் பார்த்து மிரண்டு போன நடிகர்தான். இன்னைக்கும் அவரோட நடிப்புலாம் பார்த்தா, எப்படி இவ்வளவு இயல்பா ஒருத்தரால நடிக்க முடியும்னுதான் தோணும். நிறைய பேர் அவரோட நடிப்பை கிளாஸ் பார்த்து பாடம்லாம் கத்துக்கிட்டு இருக்காங்க.
முதல் காரணம், ஃபிளாப்ஸ் – தமிழ் சினிமால எவ்வளவு பெரிய ஹீரோவா இருந்தாலும் தங்களோட ரசிகர்களுக்காக ஒரு படம், கதையை ஃபோகஸ் பண்ணி ஒரு படம்னு நடிப்பாங்க. படம் ஃபிளாப் ஆனாலும், டக்னு ஃபார்முலாவை மாத்திட்டு இளம் இயக்குநர்களோட கைகோர்த்து வித்தியாசமா எதாவது கதைல நடிப்பாங்க. நம்ம விஜய் சேதுபதி எத்தனை ஃபிளாப் வந்தாலும், எத்தனை ஹிட் வந்தாலும் ஒரேமாதிரிதான் இருக்காரு. அதுனாலயே, அதை பாஸிட்டிவா சொல்றதா, நெகட்டிவா சொல்றதான்ற கஷ்டம் வருது.
இரண்டாவது காரணம், பழக்கத்துக்கு படம் பண்றது – இதுவும் விஜய் சேதுபதிக்கிட்ட இருக்குற பிளஸ்ஸா, மைனஸானு சொல்ல தெரியல. பழக்கத்துகாக படம் பண்றதுன்றது விஜய் சேதுபதிகிட்ட இருக்குற வழக்கம். சோலோவா அவர் நடிச்ச எல்லா படங்களுமே இந்த லிஸ்ட்தான். டைரக்டர்ஸ் கஷ்டத்தை பார்க்குற விஜய் சேதுபதி, அவர் ரசிகர்களோட கஷ்டத்தையும் புரிஞ்சுக்கணும்.
மல்டி ஸ்டாரரா இவங்க நடிச்ச படங்கள் எல்லாமே செம ஹிட்டுதான். விக்ரம்க்கு இந்த லிஸ்ட் பெருசுலாம் இல்லை. பொன்னியின் செல்வன் மட்டும்தான். விட்டா கெட்டப் மாத்தி எல்லா கேரக்டரும் நானே பண்ணட்டானு கேப்பாருனும் அவரைப் பத்தி ஃபன்னா போட்ருந்தாங்க. ஆனால், சேது, பிதாமகன், காசி மாதிரியான படங்களையெல்லாம் விக்ரமைத் தவிர வேற யாராலயும் பண்ணியிருக்க முடியாது. அப்படியே கட் பண்ணி இன்னொரு பக்கம் பார்த்தா ஜெமினி, சாமி, அருள்னும் மாஸான படங்களை கொடுத்துருக்காரு. விஜய் – அஜித் கிளாஷ் மாதிரி.. சுர்யா – விக்ரம் கிளாஷ்லாம் அன்னைக்கு அப்படி போச்சு.
விஜய் சேதுபதி இந்த மல்டி ஸ்டாரர்ல பி.ஹெச்டி வாங்கிருக்காருனே சொல்லலாம். மாஸ்டர், விக்ரம்னு அவர் கரியர்ல கடைசியா ஹிட்டான எல்லா படங்களுமே மல்டி ஸ்டாரர் படங்கள்தான். இவருக்கும் ஆரம்பகால படங்களை எடுத்துக்கிட்டா பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பால குமாரா, பண்ணையாரும் பத்மினியும்னு வித்தியாசமான எதார்த்தமான படங்களை செலக்ட் பண்ணி மாஸ் காட்டிட்டு இருந்தாரு. சும்மா வந்தாலே அதிரும்ன்ற அளவுக்கு மனுஷன் இருந்தாரு. ஆனால், இப்போ சோலோ படங்களை அப்படி சொதப்பிட்டு இருக்காரு. அதுவும் டி.எஸ்.பிலாம் ஒரு சீன்கூட நல்லால்ல.
சரி, கடைசியா விக்ரம்க்கு பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் அந்நியன். விஜய் சேதுபதிக்கு 96. இந்தப் படங்களுக்கு அப்புறம் இன்னும் சோலோ ஹிட் கொடுக்க திணறிட்டுதான் இருக்காங்க. உண்மையிலேயே, அந்த விக்ரமையும் விஜய் சேதுபதியையும் ரொம்பவே மிஸ் பண்றோம்.