விமல் சொல்லிக்கொடுத்த 9 களவாணித்தனங்கள்!

ஒரு காலத்துல மதுரை படங்களா வந்துட்டு இருந்த தமிழ் சினிமால தஞ்சாவூர் பெல்ட்டை மையமா வச்சு வந்த ‘களவாணி’ புதுசா மட்டுமில்லாம ரகளையா இருந்தது. படத்தோட டைட்டிலுக்கு 100% நியாயம் சேர்க்குற மாதிரி விமலோட கேரக்டர் டிசைன். ஒவ்வொரு 10 நிமிசத்துக்கும் ஒரு களவாணித்தனம் பண்ற கேரக்டர். அப்படி இந்த படம் மூலமா விமல் நமக்குச் சொல்லிக்கொடுத்த 9 களவாணித்தனங்களை Beginner, Medium, Pro level -னு பிரிச்சு பார்க்கப்போறோம்.

Beginner Level :

* காசு தர்றியா டிவியை உடைக்கவானு செங்கலைத் தூக்கிட்டு போய் வீட்டுல காசு கேக்குறது. இதெல்லாம் beginner லெவல் களவாணித்தனம். ரொம்ப சிம்பிள் ஐடியா. Easily executable. குழந்தைகளும் ட்ரை பண்ணலாம்.

Oviya - Vimal
Oviya – Vimal

* லவ் பண்ற பொண்ணுக்கு ஒரு சீக்ரெட் நேம் வைக்கிறது. இதுவும் சிம்பிள் ஐடியாதான். நிறைய பேர் ஆல்ரெடி பண்ணிட்டு இருக்காங்க. அறிக்கி 112 னு பேர் வச்சிக்கிட்டு அதையும் ஓவியாவோட அப்பாகிட்டயே போய் அறிக்கி 112 னு எதோ நெல் ரகம் வந்திருக்காமேனு சொல்றதெல்லாம் உச்சகட்ட விமலிசம்.

* ஓவியாவுக்கு நடந்த மாதிரி திடீர்னு ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்கனா டூத்பேஸ்ட்டை எடுத்து வாயில தேச்சிட்டு பாலிடாய்ல் குடிச்சிட்டேனு பொய் சொல்லி மயக்கம் போட்டு விழுந்துரலாம். மத்ததை ஹாஸ்பிடல்ல வச்சு பாத்துக்கலாம். புடிக்காதவனை மிரட்டுறதுக்கும் இதே டெக்னிக்கை வேற மாதிரி யூஸ் பண்ணலாம். Two in One மாடல் ஐடியா இது.

Medium Level:

* ரெக்கார்டு நோட் எழுதலைனா வேற ஒரு நோட்டை கடைசியா அடில வச்சிட்டு மறுநாள் ரெக்கார்டு எழுதிட்டு போய் ‘நோட்டை மாத்தி வச்சிட்டேன் மிஸ்’னு சொல்லிக் கொடுத்தது தலைவன் விமல்தான்.

* சொந்தக் காசை செலவழிச்சு அடுத்தவனை மாட்டி விடுறதுக்கு சில களவாணித்தனங்களை சொல்லிக் கொடுத்தது இந்தப் படம். அதுல ஒண்ணுதான் புடிக்காதவன் பேர்ல ஆட்டக்காரிக்கு 500 ரூபா அன்பளிப்பு கொடுத்தது. மொரட்டு அலும்பு.

* லவ்வரை வீட்டை விட்டு வெளிய வர வைக்க அவ ஃப்ரெண்டுக்கு கல்யாணம்னு பொய் சொன்னா நம்பமாட்டாய்ங்க. அவங்களை நம்ப வைக்க ஒரே ஒரு கல்யாண பத்திரிகை மட்டும் அடிக்கிறது. நாதாரித்தனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனும்டா மொமண்ட்.

Vimal

Pro Level:

* ஓடிக்கிட்டு இருக்குற லாரில ஏறிக்குதிச்சு உரமூட்டைய திருடி ப்ளாக்ல வித்து சரக்கடிக்கிறது. எலேய் நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிருபீச்சுட்டல.

* கிரிக்கெட் போட்டி நடத்துறேன்னு பேக்கரி பேக்கிரியா டொனேசன் வசூல் பண்ணி சரக்கடிக்கிறது.  காசு செலவு பண்ணி ஒரு ரசீது நோட்டு பிரிண்ட் பண்ண வேண்டியிருக்கும். ஒரு குட்டி சதுரங்க வேட்டைய போட்டு ஆட்டைய போடலாம்.

* பார்ல சப்ளையர் மாதிரி பேசி ஆர்டர் எடுத்து காசு ஆட்டையபோடுறது. போதைல இருக்குறவனுக்கு கடைக்காரன்னு தெரியுமா.. களவாணிப்பயனு தெரியுமா? போனமா ஆர்டர் எடுத்தமா காசு வாங்குனோமா எஸ்ஸானோமோனு இருக்கலாம். ஆனா இதுக்கு ஒரு மொரட்டு தைரியம் வேணும்.

இந்த ஐடியாக்கள் இல்லாம சில லைஃப் ஹேக்ஸ்கூட சொல்லிக் கொடுத்தார் ப்ரொஃபஷர் விமல். தீடீர்னு கல்யாணம் பண்ணிட்டு வீட்டுக்கு போறீங்க. வெறுங்கழுத்தோட போனா நம்ப மாட்டாய்ங்க. டக்குனு நிலைக் கதவுல இருக்குற மாலையை புடுங்கி கழுத்துல போட்டுக்கிட்டா கல்யாண எஃபெக்ட் கரெக்டா இருக்கும்.
அதே போல பொண் வீட்டுக்கும் மாப்பிள்ளை வீட்டுக்கும் பஞ்சாயத்தாகிப் போச்சுனா டக்குனு உள்ளே பூந்து ‘எவண்டா என் மச்சான் மேல கைவச்சதுனு’ பொண்ணோட அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணி எகிறி அடிச்சு பெர்ஃபாமன்ஸ போட்டா எல்லாம் சுபமாகிடும்.

பொறுப்புத் துறப்பு: இதெல்லாம் சும்மா ஜாலிக்கு சொல்றது. சீரியஸா எடுத்துக்கிட்டு இந்த ஐடியாவெல்லாம் ட்ரை பண்றேங்குற பேர்ல சொதப்பி நீங்க மிதி வாங்குனாலோ போலீஸ் கேஸ் ஆனாலோ கம்பெனி பொறுப்பேற்காது.

Also Read – பாடகர் மாணிக்க விநாயகம் இசையமைப்பாளர்னு தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top