ஆயுள் காப்பீடு பாலிசியைத் தேர்வு செய்யும் முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க வேண்டும் என்ற ஐடியாவில் இருப்பவரா நீங்கள்… ஒரு பாலிசியை நீங்கள் தேர்வு செய்யும் முன்னர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

ஆயுள் காப்பீடு

இந்தியக் குடும்பங்களின் தவிர்க்க முடியாத அங்கமாக இருப்பது ஆயுள் காப்பீடுகள். இந்த வகை பாலிசிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் 91% அளவுக்கு இருப்பதாகச் சொல்கிறது ஒரு ஆய்வு. அதேநேரம், பாலிசி எடுத்திருப்பவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தோமென்றால், அது 60% என்கிற அளவுக்குத்தான் இருக்கிறது என்கிறார்கள். அதிகமான பிரீமியம் தொகை, வட்டி விகிதம் என இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், கொரோனா பெருந்தொற்று காலம் இந்த சூழலை மாற்றியிருக்கிறது என்றே சொல்லலாம். காப்பீடுகள் அவசியத்தையும் இந்த சூழல் மக்களுக்குப் புரியவைத்திருக்கிறது.

ஆயுள் காப்பீடு பாலிசியைத் தேர்வு செய்யும் முன்பு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்.

Life Insurance
Life Insurance

டிராக் ரெக்கார்டு

லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்வு செய்வதற்கு முன்பு, நீங்கள் வாங்க நினைக்கும் பாலிசியை அளிக்கும் நிறுவனம் பற்றியும், அவர்களது டிராக் ரெக்கார்டு எப்படிப்பட்டது என்பதையும் கவனிக்கத் தவறாதீர்கள். கிளெய்ம் புராசசிங்குக்கு எடுக்கும் கால அளவு, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் சேவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் தீர ஆய்வு செய்துவிட்டு அந்த நிறுவனத்தைத் தேர்வு செய்யலாமா, வேண்டாமா என்கிற முடிவுக்கு வாருங்கள்.

நம்பகத்தன்மை

ஒரு நிறுவனம் பற்றிய விளம்பரங்களை மட்டுமே வைத்து, அந்த நிறுவனத்தின் பாலிசியைத் தேர்வு செய்துவிடாதீர்கள். ’Life Insurance Council’ அமைப்பு நடத்திய ஆய்வில், இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்க நிறுவனங்கள் பொய்யான மற்றும் திரிக்கப்பட்ட தகவல்களையும் விளம்பரங்களில் பயன்படுத்துவதாகத் தெரியவந்திருக்கிறது. ஒரு காப்பீடைத் தேர்வு செய்யும் முன்னர், அந்த நிறுவனம் பற்றிய புரஃபைலைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை பற்றி உறுதி செய்துகொண்டு அடுத்த கட்டத்துக்கு நகருங்கள்.

சேவைகளின் தரம்

காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை அவை அளிக்கும் சேவைகளைத் தரத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கலாம் என்கிறது Global Journals நடத்திய ஆய்வு. முதலாவது என்னவிதமான சேவைகள் அளிக்கப்படுகிறது என்பதை வரையறுக்கும் technical quality, இரண்டாவது அந்த சேவைகள் எப்படி அளிக்கப்படுகின்றன என்பதைக் குறிக்கும் functional quality. இந்த இரண்டு வகைகள் வாயிலாக, இன்சூரன்ஸ் செய்திருக்கும் வாடிக்கையாளரின் தேவையை எப்படிப் பூர்த்தி செய்கின்றன, அதற்கான நடைமுறை எந்த அளவுக்கு எளிமையாக இருக்கிறது என்பது முக்கியமான அம்சம்.

 Life Insurance
Life Insurance

தொழில்நுட்ப வசதி

பாலிசி வாங்குவது தொடங்கி, கிளெய்ம் வரையில் முன்பெல்லாம் ஆவணங்களைப் பூர்த்தி செய்து ஏகப்பட்ட நடைமுறைகள் இருக்கும். ஆனால், இன்றைய சூழலில் இவற்றில் 90%-க்கும் மேலான விஷயங்களை டிஜிட்டலாகவே முடித்துவிட முடியும். அப்படியான தொழில்நுட்ப வசதி அடிப்படையில் நீங்கள் பாலிசி வாங்கப்போகும் நிறுவனம் அப்டேட் ஆகியிருக்கிறதா என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

வாடிக்கையாளர் நலன்

பொதுவாக காப்பீடு என்பது, ஒருவரின் கடினமான சூழலில் அவரின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும். இதைப் புரிந்துகொண்ட காப்பீட்டு நிறுவனங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். இதனால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சலுகைகளைப் பிரித்தறிந்து, ஒருவரின் தேவைகளைச் சரியாகப் பூர்த்தி செய்யும் பாலிசியைத் தேர்வு செய்வது அவசியம்.

Also Read –

முதலீடாக வீடு வாங்கப் போகிறீர்களா… கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top