நியூ இயர் ரொம்பப் பக்கத்துல இருக்கு. எல்லாரும் இந்த வருஷத்துல என்னலாம் பண்ணோம்னு ஒவ்வொண்ணா யோசிச்சு பார்த்துட்டு இருப்போம். ஸ்விக்கி ஆப்-உம் இந்தியர்கள் இந்த வருஷம் என்னலாம் சாப்ட்ருக்காங்கனு கொஞ்சம் பின்னாடி போய் பார்த்து StatEATistics-ஐ வெளியிட்ருக்காங்க. அதுல சில சுவாரஸ்யமான தகவல்கள் நமக்கு கிடைச்சிருக்கு… என்னலாம்னு பார்க்கலாமா?
மொறு மொறு சமோசா!
“சமோசான்றது எப்படிப்பட்ட விஷயம் தெரியுமாங்க. சும்மா மைதா மாவை உருட்டி, அழகா வெட்டி, முக்கோணமா மடிச்சு, வெங்காயம், உருளைக்கிழங்கு, பட்டாணி, எல்லாம் சேர்ந்த மசாலாவை உள்ள வைச்சு, மடிச்சு, சுட சுட எண்ணெய்ல பொறிச்சு, அது மொறுமொறுனு வந்து, அதைக் கடிக்கும்போது வாய்க்குள்ள சவுண்டும் டேஸ்டும் கலந்தமாறி வெடி ஒண்ணு வெடிக்கும் பாருங்க…” – செம டயலாக்ல. சொல்லும்போதே நாக்கு ஊறுது… அப்படிப்பட்ட சமோசாவுக்கு ஸ்விக்கில இந்த வருஷம் மட்டும் 5 மில்லியன் ஆர்டர்கள் வந்துருக்காம். சமோசால சாஸ் ஊத்தி சாப்பிடுறவங்களுக்கு அந்த அருமை தெரியாது போங்க!
மாஸ் பாஸ்… பாவ்பாஜி!
இந்திய மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் பட்டியலில் இரண்டாவது இடம் பிடிச்சிருக்குறதும் ஒரு ஸ்ட்ரீட் ஃபுட்தான். நம்ம ஊருல அது ரொம்ப ஃபேமஸ் இல்லை. ஆனால், வட இந்தியாவில் இந்த உணவுக்காக உயிரையே விடுவாங்கனு சொல்லலாம். என்னனு கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்…. ஆமாங்க, பாவ்பாஜிதான். 2.1 மில்லியன் ஆர்டர்கள் இந்த பாவ் பாஜிக்கி கிடைச்சிருக்கு. அதாவது 21 லட்சம் ஆர்டர்கள்.
எங்க ஊரு மெட்ராஸ்… பிரியாணிதான் எங்க ஃபேவரைட்டு!
`பிரியாணி’ – வாழ்க்கைல பிரியாணி லவ்வர்ஸ்க்கு இந்த வார்த்தையைவிட வேற என்ன சந்தோஷம் இருக்க முடியும். பிரியாணி லவ்வர்ஸ் ஸ்விக்கியை இந்த ஆண்டு தெறிக்க விட்டுருக்காங்க. ஒரு நிமிடத்துக்கு 115 ஆர்டர்கள் பண்ணி மாஸ் பண்ணியிருக்காங்க. அப்படியே கணக்குப் போட்டு பார்த்தா இந்த ஆண்டு முழுவதும் சுமார் 6 கோடி பிரியாணி ஆர்டர் பண்ணியிருக்காங்க. 2020-ல் ஒரு நிமிடத்துக்கு 90 ஆர்டர்கள்தான் இருந்தது. குறிப்பாக சென்னை மக்கள் சிக்கன் பிரியாணியை விரும்பி சாப்பிடுறாங்களாம்.
கொஞ்சம் ஸ்வீட்டான தகவல்!
ஸ்விக்கி பிரியர்களே… உங்களுக்கு என்ன ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும்? நான் சொல்லட்டுமா? குலாப் ஜாமூன் தானே? எப்படி கண்டுபிடிச்சேன்னு பார்க்குறீங்களா? நான் சொல்லல… பட்சி சொல்லுது. ஸ்விக்கியில் குலாப் ஜாமூன்தான் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்ட ஸ்வீட். ஸ்விக்கியில் 12.7 லட்சம் ஆர்டர்கள் குலாப் ஜாமூனுக்கு கிடைத்துள்ளது. ப்ரௌனி, ஐஸ் கிரீமை விட குலாப் ஜாமூனுக்கு மவுசு அதிகம்.
ஆரோக்கியத்தை விரும்பும் பெங்களூர்!
கொரோனா வந்ததாலேயோ என்னவோ… மக்கள் ஆரோக்கியமான உணவுகளை ஸ்விக்கியில் அதிகளவில் தேடியதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கைக் கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. ஆரோக்கியமான உணவுகளை தேடியதில் பெங்களூரு முதலிடமும், ஹைதராபாத், மும்பை முறையே அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
Also Read : உணவுக் கழிவுகளில் இருந்து மின்சாரம் – பிரதமர் பாராட்டிய காஞ்சிரங்கால் ஊராட்சியில் என்ன ஸ்பெஷல்?
எங்கடா லிஸ்ட்ல காணோம்!
தென்னிந்தியாவில் உள்ள பிரபல உணவு வகைகளில் ஒன்று, மசால் தோசை. தமிழ்நாட்டுலயும் இந்த மசாலா தோசைக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. ஆனால், ஸ்விக்கியில் மசாலா தோசைக்கு அதிக ஆர்டர்கள் தமிழகத்தில் இருந்து கிடைக்கவில்லை. பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா, லக்னோ மற்றும் ஹைதராபாத் போன்ற பகுதிகளில் மசாலா தோசையை மக்கள் அதிகளவில் விரும்பி ஆர்டர் செய்துள்ளனர்.
சென்னையில் என்னலாம் டிரெண்ட்!
ஏற்கெனவே, சொன்னதுபோல சிக்கன் பிரியாணிதான் சென்னையில் முதல் இடத்தைப் பிடிச்சிருக்கு. அந்த வரிசையில் சிக்கன் ஃப்ரைட் ரைஸ், மட்டன் பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா, நெய் பொங்கல் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடிச்சிருக்கு. இதுல உங்க ஃபேவரைட் என்னனு கமெண்ட் பண்ணுங்க!
ஸ்விக்கியை இன்ஸ்டால் பண்ணதும் என்ன ஆர்டர் பண்றாங்க தெரியுமா?
ஸ்விக்கியில் வழக்கமாக ஆர்டர் செய்பவர்கள் பிரியாணியை அதிகமாக ஆர்டர் செய்வதைப் போல, ஸ்விக்கி ஆப்பை இன்ஸ்டால் செய்பவர்கள் தங்களது Debut ஆர்டராக பிரியாணியையே ஆர்டர் செய்கிறார்கள். 4.25 புது பயனாளர்கள் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர்.
எந்தெந்த நகரங்களில் என்னென்ன டாப்?
பெங்களூர் மக்கள் மசால் தோசையை அதிகளவில் ஆர்டர் செய்துள்ளனர். டெல்லி மற்றும் குர்கான் மக்கள் தால் மகானியை அதிகளவில் ஆர்டர் செய்துள்ளனர். அதேபோல, மும்பை மக்கள் தால் கிச்சடி, சென்னை, கொல்கத்தா, லக்னோ மற்றும் ஹைதராபாத் மக்கள் சிக்கன் பிரியாணி, புனே மக்கள் பன்னீர் டிக்கா மசாலா, ஜெய்பூர் மக்கள் தால் ஃப்ரை.
Also Read : ஹலோ Foodies… இந்த உணவுகள்லாம் எந்த ஏரியாவைச் சேர்ந்ததுனு கண்டுபிடிக்க முடியுமா?
Hi! Do you know if they make any plugins to assist with Search Engine Optimization? I’m
trying to get my website to rank for some targeted keywords but I’m not seeing very good gains.
If you know of any please share. Many thanks! I saw similar blog here:
Eco blankets