Virat Kohli

யோ யோ டெஸ்ட் என்பது என்ன… வீராட் கோலியை சேஸ் செய்த 3 வீரர்களைத் தெரியுமா?

இந்திய கிரிக்கெட்டில் 90களில் `யோ யோ டெஸ்ட்’ என்ற பெயர் பெரும் சூறாவளியையே ஏற்படுத்தியது. ஆனால், இன்றைய சூழலே வேறு. அசாருதீன், ஜடேஜா காலத்தில் ஒரு வீரரின் பேட்டிங், பௌலிங் திறனை மட்டுமே வைத்து வீரர்கள் தேர்வு இருந்தது. அப்போதெல்லாம், ஃபிட்னெஸ் என்பதெல்லாம் ஒரு திறனாகவே கணக்கில் கொள்ளப்படாது. ஆனால், 2011 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய அணியில் நிலைமை தலைகீழானது.

யோ யோ டெஸ்ட், ஃபிட்னெஸ் போன்ற விஷயங்கள் இந்தியாவில் பாப்புலராக்த் தொடங்கின. அதன்பிறகு, ஃபிட்னெஸை மெயிண்டெய்ன் செய்யவில்லை என்ற ஒரே காரணத்துக்காக வீரர்கள் பலரின் கரியருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Virat Kohli
விராட் கோலி

யோ யோ டெஸ்ட்

டச்சு பிசியாலஜி மருத்துவரான ஜென்ஸ் பேங்ஸ்போ (Dr Jens Bangsbo) என்பவரால் 1990களில் கால்பந்து வீரர்களின் ஃபிட்னெஸைக் கணக்கிட யோ யோ டெஸ்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்திய அணி 2017ம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பு பிசிசிஐயால் அறிமுகப்படுத்தப்பட்டு, கண்டிஷனிங் கோச் ஷங்கர் பாஸு சப்போர்ட் ஸ்டாஃப் பட்டியலில் இணைந்தார்.

எப்படி மேற்கொள்ளப்படுகிறது?

யோ யோ டெஸ்டின் போது 20 மீட்டர் இடைவெளியில் இரண்டு எல்லைகள் ஃபிக்ஸ் செய்யப்படும். முதல் பீப் ஒலி – இரண்டாவது பீப் ஒலிக்கு இடைப்பட்ட கால இடைவெளியில் ஒரு புள்ளியில் இருந்து இரண்டாவது புள்ளிக்கு வீரர்கள் சென்றடைய வேண்டும். மூன்றாவது பீப் ஒலிக்கு முன்பாக வீரர்கள் புறப்பட்ட புள்ளிக்குத் திரும்பிவிட வேண்டும். இது ஒரு ஷட்டிலாகக் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு ஷட்டிலுக்கு இடையிலும் 7 விநாடிகள் இளைப்பாறும் காலம் கொடுக்கப்படும்.

ஒவ்வொரு லெவல் அதிகரிக்கும்போதும் ஷட்டில்களுக்கான நேரம் குறைந்துகொண்டே வரும். அதேபோல், லெவல் கூடக் கூட ஷட்டில்களின் எண்ணிக்கையும் கூடும். வீரர்கள் ஓடும் வேகத்தை அதிகரிக்கும் வண்ணம் இது இருக்கும். ஒரே ஒரு ஷட்டிலைக் கொண்ட லெவல் 5-ல் தொடங்கும் டெஸ்ட், 23வது லெவல் இதில் அதிகபட்சம். உதாரணமாக 11வது லெவலில் 2 ஷட்டில்கள் இருக்கும். லெவல் கூடக் கூட ஷட்டில்கள் எண்ணிக்கைத் தொடர்ச்சியாக அதிகரிக்கும். ஒரு வீரர் 2 பீப் ஒலிகளை மிஸ் செய்துவிட்டால், அவருக்கான டெஸ்ட் அந்த இடத்திலேயே முடிந்துவிடும். சாஃப்ட்வேர் கொண்டு மானிட்டர் செய்யப்படும் இந்த டெஸ்ட் ரிசல்டுகள் பதிவு செய்யப்படும். இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பென்ச்மார்க் 16.1, அதேநேரம் நியூசிலாந்து அணிக்கு 20.1. இந்திய அணி வீரர்கள் ஒருமுறை இந்த டெஸ்டில் சுமார் 1,120 மீட்டர்கள் ஓட வேண்டியிருக்கும்.

இந்திய வீரர்களும் யோ யோ டெஸ்டும்!

இந்திய வீரர்களுக்கான பென்ச் மார்க்காக 16.1 என்ற ஸ்கோர் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சூழலில், வீரர்கள் பலர் அதையும் தாண்டி இந்த டெஸ்டில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ஸ்கோர், 19. அதேநேரம், மூன்று வீரர்கள் இந்த டெஸ்டில் விராட் கோலியை விடவும் அதிகமாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

Mayank Dagar
மயங்க் தாகர்

ரிஷப் பண்ட் – 17.3

ஆசிஷ் நெஹ்ரா – 18.5

ஹர்திக் பாண்டியா – 19

விராட் கோலி – 19

மணீஷ் பாண்டே – 19.2

மயங்க் தாகர் (ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்) – 19.3

அகமத் பாண்டே (ஜம்மு – காஷ்மீர் தொடக்க வீரர்) – 19.4

Manish Pandey
மணீஷ் பாண்டே

இதேபோல், இந்திய அணியின் கருண் நாயரும் விராட் கோலியை விட அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் என்கிறார்கள். இந்திய அணியின் கண்டிஷனிங் கோச், ஷங்கர் பாஸுவால் ஃபிட்டஸ்ட் கிரிக்கெட்டர் என்று கருண் நாயர் அழைக்கப்படுவார் என்று பிசிசிஐ வட்டாரங்களில் சொல்கிறார்கள். ஆனால், அவரது டெஸ்ட் ஸ்கோரை இதுவரை பிசிசிஐ வெளியிடவில்லை.

2 thoughts on “யோ யோ டெஸ்ட் என்பது என்ன… வீராட் கோலியை சேஸ் செய்த 3 வீரர்களைத் தெரியுமா?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top