இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம், `சார்பட்டா பரம்பரை’. இந்த திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கேரக்டருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, டான்சிங் ரோஸ் கேரக்டர். `வேம்புலியையே அடிக்கிற அளவுக்கு உங்கிட்ட ஆட்டம் இருக்கலாம். ஆனால், அதுக்காகலாம் ரோஸ அடிச்சிற முடியாது’ – சார்பட்டா பரம்பரை படத்தில் வர்ற வசனம் இது. அவ்வளவு பெரிய ஆட்டக்காரர் டான்ஸிங் ரோஸ். டான்ஸ் ஆடிகிட்டே ஃபைட் பண்றதுல கில்லாடி. இவருடைய கதையை மட்டும் தனியா படம் எடுங்கனு சமூக வலைதளங்களின் வழியாக ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுவரைக்கும் எப்படி இருந்தார்னு தெரியல.. ஆனால், இனிமேல் அவரோட எதிர்காலம் சூப்பரா இருக்கும்னும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். படத்தில் கொஞ்சம் நேரமே இவரோட கேரக்டர் வந்திருந்தாலும் மக்கள் மனசில் பதியும்படியாக இவரோட கேரக்டர் அமைந்துள்ளது. இதனால், சமூக வலைதளங்களில் டான்ஸிங் ரோஸ்க்கு ஃபேன்ஸ் அதிகமாகியுள்ளனர். யார் இந்த டான்ஸிங் ரோஸ்? இதுக்கு முன்னாடி என்ன படம்லாம் நடிச்சிருக்காரு? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்தவரின் உண்மையான பெயர் `ஷபீர் கல்லரக்கல்’. இவர் இதற்கு முன்னதாக நெருங்கி வா முத்தமிட, 54321, அடங்க மறு, பேட்ட மற்றும் டெடி உள்ளிட்ட பிரபல திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்டியா கிளிட்ஸிடம் ஷபீர் பேசும்போது, “எந்திரிச்சு ஜாலியா இருக்கனும். புடிச்சத பண்ணனும்ன்றதுதான் என்னோட எய்ம். 15 வருஷமா வேலை இல்லை. நடிகர் ஆகனும்னு ட்ரை பண்ணிட்டு இருந்தேன். இந்த நாள்கள்ல நிறைய கத்துக்கிட்டேன். என்னோட ஸ்கில்ஸ டெவலப் பண்ணேன். எப்பவும் என்னை நான் பிஸியாவே வச்சிகிட்டேன். இடையில போஸ்ட் கிராஜுவேஷனும் முடிச்சேன். வாழ்க்கையில அடிப்படை தேவையான விஷயங்களுக்கு நான் கஷ்டப்படவே இல்லை. ஆனால், ரிஜக்ஷன்ஸ் இருந்துச்சு. நடிகரோட வாழ்க்கைல இதுவும் ஒரு பகுதிதான். 500 ஆடிஷன் போயாச்சினா எல்லாமே கிடைக்காது” என்று தெரிவித்துள்ளார்.
ஷபீர் தொடர்ந்து, “ஈஸியா இருக்காதுனு தெரிஞ்சுதான் இந்த ஃபீல்டுக்கு வந்தேன். என்னோட சாய்ஸ் இது. என்னோட அப்பா பிஸினஸ் எனக்கு இருந்துச்சு. போஸ்ட் கிராஜுவேஷன் முடிச்சிருந்தேன். அதெல்லாம் வேணாம்னு சொல்லிட்டுதான் இந்த ஃபீல்ட சூஸ் பண்ணேன். நான் புடிச்சி பண்ற விஷயம் எப்பவுமே நல்லாதான் இருக்கும். ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். அதை ஏத்துக்கனும். ஏத்துக்கிட்டா எஞ்சாய் பண்ணலாம். இந்த கேரக்டருக்கான கிரெடிக்ட்ஸ் எல்லாமே ரஞ்சித் சார்க்குதான். செட்ல எனக்கு நிறைய நல்ல நண்பர்கள் இருந்தாங்க. எல்லாருமே எனக்கு ஆதரவாகவும் ஊக்கம் அளிப்பவர்களாகவும் இருந்தாங்க. சீன்ஸ் நல்லா வந்துச்சுனா ஆர்யா என்னைக் கூப்பிட்டு பாராட்டுவார். கலையரசனும் நட்போடு பழகினார். ” அப்டினு பாஸிட்டாவா பேசியிருக்காரு. கமெண்ட்ல நீங்க சொல்லுங்க… டான்ஸிங் ரோஸ் வாழ்க்கைய தனியா படம் பண்ணனுமா? வேணாமா?
Also Read : சர்ச்சை பேச்சு… சாபம் – வைரல் பாதிரியார் `ஜார்ஜ் பொன்னையா’!