உகாண்டாவைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் பாபி வைன் (Bobi Wine), இவருக்கு ஃபேஸ்புக்கில் இதுவரை சுமார் 2 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். அதே நாட்டைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் அன்னே கன்சிம் (Anne kansiime), இவருக்கு ஃபேஸ்புக்கில் சுமார் 2.5 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். அதேபோல எட்டி கென்சோ (Eddy kenzo), ஷீபா (Sheebah) ஆகிய கலைஞர்களுக்கு முறையே 1.6 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். உகாண்டாவைச் சேர்ந்த பிரபல கலைஞர்களாக இருக்கும் இவர்கள் உலக அளவில் கலைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.
பல ஆண்டுகளாக தங்களது துறையில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர்களே இன்னும் மூன்று மில்லியன் ஃபாலோயர்களைப் பெறவில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகி சமூக வலைதளங்களை கலக்கிய உகாண்டாவைச் சேர்ந்த மசாகா சிறுவர்கள் ஃபேஸ்புக்கில் கடந்த சில மாதக்களுக்கு முன்பு மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைப் பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தனர். முதன்முறை மூன்று மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கடந்த உகாண்டா பிராண்ட் என்ற பெருமையையும் மசாகா கிட்ஸ் பெற்றுள்ளனர். சரி யார் இந்த மசாகா கிட்ஸ் அப்டிதான கேக்குறீங்க.. வாங்க சொல்றேன்!
மசாகா கிட்ஸ் என்ற நடனக்குழுவின் முழுப்பெயர் `மசாகா கிட்ஸ் ஆஃப்ரிகானா’. கிழக்கு ஆப்பிரிக்கா பகுதியில் அமைந்துள்ள உகாண்டாவில் இருக்கும் மசாகா நகரைச் சேர்ந்தவர்கள் இந்த சிறுவர்கள். `DANCE, RISE & SHINE’ என்பதை தங்களது மோட்டோவாக வைத்து செயல்பட்டு வருகின்றனர். இரண்டு வயது முதல் உள்ள குழந்தைகள் இந்த குழுவில் இருந்து நடனமாடி வருகின்றனர். இந்த நடனக்குழுவானது மசாகாவில் உள்ள ஆர்பனேஜ் ஒன்றை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆர்பனேஜில் வளரும் குழந்தைகளில் பெரும்பான்மையானவர்கள் தங்களது பெற்றோர்களை போர், நோய் மற்றும் வறுமையின் காரணமாக இழந்தவர்கள். தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த ஆர்பனேஜை சார்ந்து உள்ளனர்.
உகாண்டா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞர்களின் பாடல்களுக்கு நடனமாடி தங்களது யூ டியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஆஃப்ரிகன் மியூசிக் மேகசின் விருதுக்கு இவர்களது குழுவானது பரிந்துரை செய்யப்பட்டது. உகாண்டாவைச் சேர்ந்த யூ டியூப் கலைஞர்களில் இரண்டாவது முறையாக கோல்டன் கிரியேட்டர் விருதைப் பெற்றவர்கள் இவர்கள். நடனம் என்பது ஆடுபவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் குதூகலத்தை தரும் விஷயம். அதுவும் சிறுவர்கள் நடனமாடுவது இன்னும் கொஞ்சம் கியூட்டாக இருக்கும். அந்த வகையில் மசாகா கிட்ஸின் ஃப்ளெக்ஸிபிளான நடனமும் செம கியூட்டாகவும் சார்மிங்காகவும் இருக்கும். மசாகா கிட்ஸின் பெரும்பான்மையான வீடியோக்கள் மில்லியன் கணக்கான வியூஸ்களைப் பெற்றுள்ளன.
Also Read : கூகுள் டிரெண்டிங்கில் லுட்விக் கட்மேன் – யார் இவர்?