இன்னைக்கு ஆடியோ லாஞ்ச்னு சொன்னாலே விஜய் பெயர்தான் நியாபகம் வரும். அப்படி மாத்திட்டாரு. எந்த வருஷத்துல இருந்து இவ்வளவு பிரம்மாண்டமா ஆடியோ லாஞ்ச் விஜய் பண்றாரு? கடந்த 10 வருஷத்துல அவரோட ஆடியோ லாஞ்ச் எப்படிலாம் மாறியிருக்கு? விஜய்யோட படத்தின் ஆடியோ லாஞ்ச் எப்பவுமே ஸ்பெஷல். ஏன்?
ஆடியோ லாஞ்ச்ல விஜய் பண்ண இண்டரஸ்டிங்கான விஷயங்கள் என்னென்ன? இதெல்லாம் பத்திதான் இந்த வீடியோல விஜய் கரியரை திருப்பி போட்ட படம்னா, துப்பாக்கிதான். அந்த படத்தோட ஆடியோ லாஞ்ச் எவ்வளவு பெருசா பிரம்மாண்டமா நடந்துருக்கும்னு தேடிப்போனா, சிம்பிளா பிரஸ் மீட் மாதிரி நடந்துருக்கு. சச்சின் படத்துல வாடி வாடி பாட்டுக்கு அப்புறம் விஜய் பாடுனது துப்பாக்கி படத்துல வந்த கூகுள் கூகுள்தான். அந்தப் பாட்டை பாடிதான் ஆரம்பிப்பாரு. அந்த படம் நடக்க அவரோட அப்பாதான் முக்கிய காரணம். விஜய்க்கு இப்படியொரு டீமை அமைச்சுக் கொடுத்தது எஸ்.ஏ.சிதான். அதை மேடைல சொல்லிதான் தன்னோட பேச்சை ஆரம்பிப்பார். குட்டிக் கதைலாம் சொல்ல மாட்டாரு. குட்டி மணிரத்னம்னு விஜய், முருகதாஸுக்கு பெயர்லாம் அந்த விழால வைப்பாரு. அதுக்கு முன்னாடி பயங்கரமா ரசிகர்கள் முன்னால ஆடியோ லாஞ்ச்லாம் விஜய் பண்ணிருக்காரு.
ஆனால், துப்பாக்கி படத்துக்கு அப்படி இல்லை. அப்புறம் தலைவா படம். அந்த மேடை ஏறுனாலும் கண்டிப்பா பாட்டு பாடுவாரு. தலைவா படத்தோட ஆடியோ லாஞ்ச்ல பேசலாம் மாட்டாரு. படம் ரொம்ப புடிச்சிருக்குனு சிம்பிளா சொல்லிட்டு, எல்லாருக்கு நன்றி சொல்லிட்டு இறங்கிடுவாரு. ஆனால், அந்தப் படத்துக்கு ஏகப்பட்ட ஆப்புகளை அப்போதைய ஆட்சில இருந்தவங்க வைச்சாங்க. ஜில்லா ஆடியோ லாஞ்சும் ஆஹா, ஓஹோனுலா நடக்கலை. பிரஸ்மீட் மட்டும்தான் நடந்துச்சு. “வெற்றி இரண்டு மடங்கு நம்பிக்கையை கொடுக்கும். தோல்வி இரண்டு மடங்கு அனுபவத்தை கொடுக்கும். அந்த அனுபவத்தை வைச்சு நீங்க எல்லாரும் மறுபடியும் பெருசா ஜெயிக்கணும்”னு சொல்லுவாரு.
இப்படி துப்பாக்கிக்கு அப்புறம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு விஜய்கிட்ட இருந்தாலும் ரசிகர்களை பெருசா சந்திக்காமல், கலவரம் இல்லாமல், அறிவுரை இல்லாமல் சிம்பிளா வைச்சுட்டாரு. துப்பாக்கி படத்துக்கு பிறகு கத்தி படத்துல ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் சேர்ந்தாங்க. அனிருத் அந்த படத்துக்கு மியூசிக். வேறலெவல்ல எதிர்பார்ப்பு இருந்துச்சு. எனக்கு தெரிஞ்சு முன்னாடி இருந்த 3, 4 படங்களை விடவிம் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமா ஆடியோ லாஞ்ச் பண்ணது கத்திக்குதான். சிலபல பஞ்ச்களை கத்தில போட்ருப்பாரு. “உண்மைக்கு விளக்கம் கொடுத்தா தெளிவாயிடும். வதந்திக்கு விளக்கம் கொடுத்தா உண்மைனு ஆயிடும், நான் தியாகி இல்லை. ஆனால், துரோகியும் இல்லை”னு சொல்லுவாரு. இவ்வளவுதான் பெருசாலாம் பேசமாட்டாரு. ஆனால், அவர் பேசுன சில விஷயங்கள் அரசியல் கலந்துதான் இருக்கும்.
புலி படம்தான் அவர் ஆடியோ லாஞ்ச்ல மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதுவும் நேஷனல் டிரெண்டுங்க். அதுக்கு முழு காரணம், டி.ஆர்தான். அட்ராக்ட் பண்ற புலி, அட்டாக் பண்ற புலி, அட்டகாசமான புலினு புலியே மிரண்டு போற அளவுக்கு ஏகப்பட்ட வெரைட்டிகளை சொல்லி, தெறிக்க விட்டுட்டாரு. விஜய் குட்டிக்கதை இந்த ஆடியோ லாஞ்ச்ல இருந்துதான் சொல்ல ஆரம்பிச்சாரு. “எனக்கு உண்மையா ஒருத்தரை வெறுக்க தெரியும். பொய்யா ஒருத்தரை நேசிக்க தெரியாது”னு ஆரம்பிச்சு “எனக்கு பின்னால நிறைய அவமானங்கள் தான் இருக்கு”னு வார்த்தைக்கு வார்த்தை பஞ்ச் போட்டுதான் பேசுவாரு. அப்படியே பில்கேட்ஸ் பத்தின குட்டி ஸ்டோரி சொல்லுவாரு. பல்லாண்டு வாழ்கன்ற படத்துல வர்ற சீன் பத்தி பேசுவாரு. இப்படி விஜய்யை செம எனர்ஜியா பார்த்தது புலி படத்துலதான். அப்புறம் எல்லா ஆடியோ லாஞ்ச்லயும் விஜய்யோட ஆட்டம்தான். சத்யம் தியேட்டர்லதான் தெறி படத்தோட ஆடியோ லாஞ்ச் நடந்துது. விஜய் மேடை ஏறி அவரை பேச விடாம பண்ண சம்பவம் நடந்தது அப்போதான். கிட்டத்தட்ட 5 நிமிஷம் விசில் சத்தம் குறையவே இல்லை. வழக்கம் போல எல்லாருக்கும் நன்றி, பாராட்டுகளை தெரிவிச்சிட்டு, கதைக்கு வருவாரு. டிஸ்கவரில வர்ற புலி – மான் இதை வைச்சு கலைப்புலிக்கு இன்ட்ரோ கொடுப்பாரு, ஜி.வி.பிரகாஷ் குமார்க்கு விர்ஜின் படங்க தலைவர்னு பட்டம் கொடுப்பாடு, என்னை வைச்சு ஆக்ஷன் படம் எடுக்கணும்ன்ற அட்லீயோட வெறிதான், இந்த தெறினு அவருக்கு ஒரு இன்ட்ரோ போடுவாரு. எதுகை, மோனைல சும்மா மாஸ் பண்ணியிருப்பாரு. அடுத்த அவரோட ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிடுவாரு.
“நீங்க தொட்ட இலக்கை அடுத்தவங்களுக்கு இலக்காக வைங்க”னு சொல்லுவாரு. மாவோ பத்தி குட்டி கதை ஒண்ணு சொல்லுவாரு. போர் அடிச்சா மன்னிச்சுக்கோங்க. ஸ்பார்க் அடிச்சா ஏத்துக்கோங்க. ஃப்ரீ அட்வைஸ்னு மாஸ் பண்ணுவாரு. பைரவாக்கு ஆடியோ லாஞ்ச்லாம் நடக்கலை. ஒருவேளை ஆடியோ லாஞ்ச் நடக்காத படம்லாம் அவருக்கே தெரியும்போல.
Also Read – விஜய்க்கே ஆட்டநாயகன் இவர்தான்… யார் இந்த டென்ஸல் வாஷிங்டன்?
விஜய்யோட கரியர்ல மெர்சல மிஞ்சுற அளவுக்கு இன்னொரு ஆடியோ லாஞ்ச் நடக்குமானு கேட்டா, தெரியலைனுதான் சொல்லணும். அவருக்கு கொடுத்த இன்ட்ரோலாம் பெஸ்ட்டா இருக்கும். பல நிமிஷத்துக்கு அவரை பேசவே விடலையே. எப்படிலாமோ நன்றி சொல்லி பார்த்தாரு. அமைதியே ஆகலை. எல்லாருக்கும் நம்மள புடிச்சுப் போச்சுனா, லைஃப் போரடிக்கும்னு அவர் சொல்றதுலாம் இன்னைக்கும் ஸ்டேட்டஸ்ல பார்க்க முடியும். அப்படி ஹிட் ஆச்சு, அவரோட பேச்சு. மெக்கானிக் வைச்சு குட்டிக்கதையும் சொல்லுவாரு. அதுவும் அந்த எண்ட் பஞ்ச்லாம் சான்ஸே இல்லை. சர்கார் ஆடியோ லாஞ்ச்லதான் அதிகளவில் அரசியல் பேசுவாரு. வேறலெவல் வைப்ல இருப்பாரு. நிஜத்துல முதலமைச்சரானா, முதலமைச்சரா நடிக்க மாட்டேன்ன்னு ஆரம்பிச்சு, கட்சி எப்படி இருக்கணும், தலைவன் எப்படி இருக்கணும், ஆட்சி எப்படி இருக்கணும்னு சும்மா பிரிச்சு விட்ருப்பாரு. அப்படியொரு விஜய்யை இனி பார்க்க முடியாதுனு நினைக்கிறேன். அதே எனர்ஜி அப்படியே பிகில் படத்துலயும் கண்டினியூ ஆச்சு. பிகில்ல ஆரம்பத்துலயே, நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்னுதான் ஆரம்பிப்பாரு. உம்முனு, கம்முனு, ஜம்முனுனு தெறி ஸ்பீச் விட்ருப்பாரு. இந்த ஆடியோ லாஞ்ச்லயும் அரசியல்லாம் பேசியிருப்பாரு. “எவனை எங்க உட்கார வைக்கணுமோ, அவனை அங்க உட்கார வைச்சீங்கனா, கோல்டு மெடல்லாம் தானா வரும்”னு சொல்லுவாரு.
பிகில் கட் பண்ணா கொரோனா பிரச்னைகள்னால மிகப்பெரிய அளவில் மாஸ்டர் ஆடியோ லாஞ்ச் நடக்கல. ஆனால், மேடை ஏறுனதும் டான்ஸ் ஆடி, பாட்டுப் பாடி, குட்டிக்கதை சொல்லி, “உண்மையா இருக்கணும்னா சில நேரத்துல ஊமையா இருக்கணும்” அதிகமா பேச விரும்பலைனு கையெடுத்து கும்பிட்டுட்டு மாஸ்டர்ல கிளம்பிடுவாரு, வழக்கமான விஜய்யா அப்போதான் மாறுனாரு. அதுவரைக்கும் கொஞ்சமாவா பேசுனாரு. ரைட்டு, ஏன் விஜய் ஃபேன்ஸ்க்கு ஆடியோ லாஞ்ச் அவ்வளவு புடிக்கும்ணா, அவரோட மோட்டிவேஷன் ஸ்பீச், குட்டிக்கதை, டான்ஸ், பாட்டுனு எதாவது ஒண்ணு கியூட்டா பண்ரதுனாலதான். கிஸ் பண்ணி தூக்கி போடுற சேட்டையெல்லாம் அப்படிதான பண்றாரு. அதுமட்டுமில்ல படத்துல இல்லாமல் நேர்ல பார்க்கணும்ன்ற ஆசை வருஷத்துல ஒருநாள்தான அவரோட ரசிகர்களுக்கு நிறைவேறும். விஜய்க்கு ஏன் ஆடியோ லாஞ்ச் எப்பவும் ஸ்பெஷல்னா, அப்போ மட்டும்தான் ரசிகர்களை பார்க்க முடியும். அவர் சும்மா வந்து நின்னாலே அந்த படத்துக்கு வேற புரொமோஷன் தேவையில்லை. அதுனாலதான். அவருக்கு கொஞ்சம் எனர்ஜி கிடைக்கும்ல. அப்படி இப்போ வாரிசு ஆடியோ லாஞ்ச்லயும் செமயான எனர்ஜியோட ஸ்பீச்லாம் கொடுத்தார். விஜய் சொன்ன ரியல் லைஃப் பஞ்ச்ல உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!