‘பீஸ்ட்’ ஃபஸ்ட் லுக், டிரைலர், பாட்டுலாம் வந்தப்போ சிலிர்த்துப்போய் சில்லறைய விட்டு எறிஞ்ச பீஸ்ட் விஜய் ஃபேன்ஸ், படம் வந்ததுக்கு அப்புறமா தலைல துண்டப் போட்டு தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காங்க. வெளிய வீரமா திரிஞ்சாலும் ‘என்னப்பா நெல்சா இதெல்லாம் நியாயமா? Pan World-னு சொல்லிட்டு, அண்ணனுக்கு நானும் செய்வேன்னு செஞ்சு வைச்சிருக்க’னு மைண்ட் வாய்ஸ் வெளிய கேக்குற அளவுக்கு விஜய் ஃபேன்ஸ் சோகமா சுத்துறாங்க.
வாத்தி கம்மிங்க்கு உலகமே ஷோல்டர் டிராப் ஸ்டெப் போட்டுச்சு. அரபிக் குத்து பாட்டுக்கு அரபி மக்களே மீனிங் தேடுறாங்க, மணி ஹெய்ஸ்ட் புரொஃபஸர்க்கு விஜய் கரெக்டா இருப்பார்னு அந்த டைரக்டரே சொல்றாரு. இப்படி உலகமே தளபதியை கவனிக்குது. உஷாரா ஒவ்வொரு ஸ்டெப்பும் எடுத்து வைக்க வேண்டிய சிச்சுவேஷன்ல, நெட்ஃபிளிக்ஸ்ல படம் வெளியாகி சர்வதேச அளவுல சரித்திர சோதனைகளை சந்திச்சுட்டு இருக்கு. எப்படி இது ஸ்டார்ட் ஆச்சு… என்னலாம் பேசிக்கிறாங்க. அதைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை விமானி சிவராமன் சஜ்ஜன் தன்னோட ட்விட்டர் பக்கத்துல விஜய் ஜெட் ஓட்டுற சீனை அப்படியே ஷேர் பண்ணி, “இதுல எனக்கு நிறைய கேள்விகள் இருக்கு”னு கேப்ஷன் போட்ருந்தாரு. இதுதான் எல்லா ட்ரோலுக்கும் இன்டர்நேஷனல் லெவல் டிரெண்டிங்ல பீஸ்ட் இடம் பிடிச்சதுக்கும் காரணம். மாஸ் ஹீரோக்கள் படம்னு சொன்னாலே லாஜிக் மீறல்கள் எல்லாம் சாதாரண விஷயம்தான்னு கடந்து போடலாம். ஆனால், இப்போ வர்ற படங்கள்ல ரசிகர்களுக்கு லாஜிக்கும் முக்கியம். இதை பீஸ்ட் படத்துல கொஞ்சம்கூட எதிர்பார்க்க முடியாது.
விமானிகள் இதை வைச்சு செய்றதுக்கும், இந்த லாஜிக் ஓட்டைதான் காரணம். பொதுவா போர் விமானங்கள் இயக்கும்போது ஆக்ஸிஜன் மாஸ்க், ஹெல்மெட்டும் கண்டிப்பா போடணும். ஏன்னா, அவ்வளவு உயரத்துல பறக்கும்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும். அதுமட்டுமில்ல காத்து அடிக்கிற வேகத்துல காது ஜவ்வு கிழிஞ்சிடும். அதுனால, இந்த ப்ராப்பர்ட்டிலாம் இல்லாமல் விமானத்தை இயக்குறதை நினைச்சுக்கூட பார்க்க முடியாது. நம்ம விஜய் இதெல்லாம் அசால்ட்டா பண்ணியிருப்பாரு. அதுவும் யாருக்கும் தெரியாமல் ஜெட் எடுத்துட்டு போவாரு.
சரி, இதையாவது மன்னிச்சிடலாம். ஜெட் விமானம்லாம் மணிக்கு 1,500 கி.மீ ஸ்பீட்ல போகும். அப்போ, எதுக்க வர்ற விமானத்துல இருக்குறவங்கள பார்த்து விஜய் சல்யூட் அடிப்பாறே. அதையெல்லாம், ஏத்துக்கவே முடியாதுனு கமெண்ட்ஸ்ல கதறுறாங்க. “என்னடா மில்டன் பாட்டில்லாம் வைச்சிருக்கீங்கனு”ம் கமெண்ட்ல அதிகாரிகள் கலாய்ச்சு தள்ளியிருக்காங்க. வெளிநாட்டுல உள்ள ‘Philippe Top-Action’ன்ற ட்விட்டர் பேஜ்லயும் இந்த ஹெல்மெட், ஜேக்கெட் இல்லாமல் சாதாரண டீ ஷர்ட் போட்ருக்குறதை வைச்சு கேள்வி கேட்ருக்காங்க.
உலக அளவுல தன்னோட தளபதியை ரசிக்கணும்னு பல ரசிகனுக்கும் ஆசை இருக்கும். அந்த விஷயம் இப்படி நடக்கும்னு யாரும் கனவுலகூட நினைச்சுப் பார்த்துருக்க மாட்டாங்க. என்னதா இருந்தாலும் தளபதியையும் கோலிவுட்டையும் விட்டுக்கொடுக்க ரசிகர்களுக்கு மனசு வருமா? எனக்கும் சில கேள்விகள் இருக்குனு நம்ம தளபதி ஃபேன்ஸ். சில பாலிவுட் சீன்களோட ஸ்கிரீன் ஷாட் போட்டு பதிலடி கொடுக்க ஆரம்பிச்சாங்க. குறிப்பா, கிரிஷ் படத்துல ஹ்ருத்திக் ரோஷன் பில்டிங் பில்டிங்கா தாவி ஏரோபிளேன் டயர பிடிப்பார்ல… அதுக்குலாம் இது பரவால்லைனுதான் தோணுது மக்களே. உடனே, வால் தெரியுதுடானு கமெண்ட் பண்ணாதீங்க. எதார்த்தத்தை சொன்னேன்.
’படத்துல அண்ணா ஹிந்திக்கு எதிரா ஒரு வசனம் பேசிட்டாருல அது பொறுக்க முடியாமதான் இந்த வடக்கன்ஸ் கதறிட்டு இருக்காங்க’ – அப்படினு சில விஜய் ஃபேன்ஸ் முரட்டுத்தனமா முட்டுக்குடுக்குற சம்பவங்களும் பார்க்க முடிஞ்சது. என்ன ஒண்ணு, அதை பாகிஸ்தான் ஆக்குபைடு காஷ்மீர்ல போய் சொல்லுவாரு. மற்றபடி ஐ லவ் திஸ் டயலாக்தான்!
“பிகிலுக்கு அப்புறமா இப்படி ஒரு படம் விஜய்க்கு அமைஞ்சிருக்கு. எவ்வளவு பெரிய நடிகர்… இந்தப் படம் அவரோட கதைல ஒரு கறுப்புப் புள்ளி. அதனால, விஜய் இனி கவனமா நடிக்கணும்’னு பல ஃபேன்ஸ் சொல்லியிருக்காங்க. அதாவது மக்களே, கடைசீயா நான் என்ன சொல்ல வறேன்னா… நம்ம தளபதியை தமிழ்நாடு மட்டும் இவ்ளோ நாள் கவனிச்சிட்டு இருந்துச்சு. ஆனால், இப்போ இந்தியாவே கவனிக்குது. உலகமே கவனிக்குது. அதனால, உஷார் தளபதி… உஷார்.!
Also Read: இயற்கை முதல் லாபம் வரை… எஸ்.பி.ஜனநாதனின் மக்களுக்கான அரசியல்!