கண்ணு நடிக்கும் பார்க்குறியா… தனுஷ் கண்கள் ஏன் அவ்வளவு பவர்ஃபுல்?

ஒரு நடிகனுக்கு கண்ணு ரொம்ப முக்கியம். ஏன்னா, சொல்ல முடியாத பல உணர்வுகள் இந்த உலகத்துல இருக்கு. அதை கண்ணு வழியா மட்டும்தான் எக்ஸ்பிரஸ் பண்ண முடியும். அதுல கில்லாடி ஃபகத் ஃபாஸில். கும்பளாங்கி நைட்ஸ் படத்துக்கு அப்புறமாதான் அவரோட கண்களை கவனிச்சு பல ரைட்டப்கள் வந்துச்சு. குறிப்பா அந்த கிச்சன் சீன்லாம். முதல்ல அந்தப் படத்துல தனுஷை நடிக்க கேட்டதாகூட சொல்லுவாங்க. அதைக் கேட்டப் பிறகு தனுஷ் நடிச்சிருந்தாலும் செமயா இருக்கும்லனு தோண ஆரம்பிச்சு, சில சீன்கள் எல்லாம் கற்பனையா ஓட்டிப் பார்த்தேன். அப்போதான், யதார்த்தமா ஃபகத் ஃபாஸில் கண்கள் மாதிரி தனுஷ் கண்கள் பத்தின ஒரு மீம் பார்த்தேன். தனுஷ் கண்களால எப்படிலாம் நடிச்சிருக்காரு. அதைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

தனுஷ்
தனுஷ்

நானே வருவேன் – நீங்க படம் பார்க்கலைனாலும் பரவால்ல. வெறும் டீசர்ல தனுஷ் கண்களைப் பார்த்தாலே புரியும். அவர் கண்களால நடிக்கிற கலைஞன்னு. பிரபு, அதாவது அப்பா கேரக்டர்ல வர்ற தனுஷ் கண்கள் ஷார்ப்பாலாம் இருக்காது. மகள் மேல உள்ள அன்பும் வாழ்க்கையைப் பத்தின திருப்தியும் அந்தக் கண்கள்ல நிரம்பி இருக்கும். தன் மகளுக்கு பிரச்னைனு தெரிஞ்சதும் அந்தக் கண்கள் அப்படியே துயரத்துக்கு மாறும். கிளைமாக்ஸ் வரைக்கும் அந்த கண்கள் மகளுக்கு சீக்கிரம் குணமாகனும்ன்ற ஏக்கத்தோடுதான் பயணிக்கும். ஆனால், கதிர் கேரக்டரோட கண்கள் ஒவ்வொரு இடத்துலயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கதிர் குடும்பத்தோட ஆரம்பத்துல சாதாரண வாழ்க்கை வாழும்போது, அவன்மேல கோவமே வராது. கண்ணுல எப்பவுமே இன்னசென்ட் இருக்கும். குழந்தைகளை பார்க்கும்போது கண்ணுல அன்பு இருக்கும். மனைவியைப் பார்க்கும்போது காதல் இருக்கும். ஆனால், அந்த டிரான்ஸ்ஃபர்மேஷன்ல கண்ணு மாறுமே அப்போ அரக்கனா தெரிவாரு. ஒரு நடிகனோட பிளஸ் அதுதான்.

நானே வருவேன்
நானே வருவேன்

கதிர் கேரக்டர் ஹன்ட் பண்ற சீன் வரும்ல அப்போ பி.ஜி.எம்மோட நடந்து வருவாரு அவ்வளவு மாஸ் அந்த கண்கள்ள தெரியும். அப்படியே கத்தியை எடுக்கும்போது கொலவெறி தெரியும். தலையை தூக்கிட்டு ஈவில் லுக் ஒண்ணு கொடுப்பாருல, அதுலாம் அல்ட்டிமேட். அவன் கொலைகாரன்னு வீட்டுல தெரிஞ்சதும் அவனுக்குள்ள இருக்குற ஈவில் வெளிய வரும். அப்போ, அவனோட கண்களைப் பார்த்தாலே பயமா இருக்கும். நிறைய இடத்துல கண்ணை பிளிங்க் பண்ணாம குடும்பத்தையே மிரட்டுறதப் பார்த்து நம்மளே மிரண்டு போய்ருவோம். se அந்த கேரக்டர்லயும் தனுஷோட பிரில்லியண்ட்ஸ் இருக்கும். கரெக்டா எங்கனா, மனைவியையும் குழந்தையையும் கொண்ட்ருவாரு, அப்போ ஈவில்னஸா இருந்து ஒரு தவிப்பு கண்ணுல தெரியும். ஈவில்னஸ் கலந்த தவிப்பு இருக்குல அது செமயா இருக்கும். மாஸ் நடிகன்யா நீ – அப்டினு தனுஷைப் பார்த்து அப்போ சொல்லத்தோணும். அவ்வளவு கொலைகள் பண்ணிட்டு கிளைமாக்ஸ்ல சாதாரணமா வந்து பிரபுக்கிட்ட பேசும்போது, யார்யா இவன் ஒண்ணும் தெரியாத மாதிரி பேசுறான்னு தோணும். ஆனால், கண்ணுல ஒரு மிரட்டல் இருக்கும்.

அசுரன்
அசுரன்

அசுரன் படத்துல கண்ணுலயே நிறைய சீன்ல பெர்ஃபாமென்ஸ் பண்ணி மிரட்டியிருப்பாரு. ஒரு பாவப்பட்ட அப்பாவா தனுஷ் நடிக்கிறதுலாம் மாஸ். மகனைப் பத்தி கவலைப்பட்டு மஞ்சுக்கிட்ட கதவு பக்கம் நின்னு பேசுற சீன் ஒண்ணு வரும். அப்போ, கண்ணுல அவ்வளவு கவலையும் பயமும் தெரியும். கால்ல விழுற சீன்ல எல்லாம் மற்ற நடிகர்களா இருந்தா கண்ணீர் விட்டு அழுதுருப்பாங்க. ஆனால், தனுஷ் கண்ணுல கண்ணீர் இருக்காது. மகனுக்கு எதுவும் ஆகாமல் இருந்தா போதும்ன்ற அக்கறை மட்டும்தான் இருக்கும். மூத்த மகன் இறந்த பிறகு ரெண்டாவது மகனை எப்படியாவது காப்பாத்திடணும்ன்ற எண்ணம் கண்ணுல தெரியும். அப்படியே கட் பண்ணி ஃபிளாஷ்பேக் போனால், கண்ணு முழுக்க கோபம்தான் நிறைஞ்சு இருக்கும். செருப்பு போட்டதுக்கு தன் வீட்டு பிள்ளையை அடிச்சதுக்கு பழி வாங்க, திரும்ப போய் அடிக்கிறது. ஊரையே கொளுத்தினதும் அரிவாள் எடுத்துட்டுப் போய் வெட்டும்போது தனுஷ் கண்ணுலாம் அப்படி இருக்கும். படம் முடியும்போது கிளைமாக்ஸ்ல மகன்கிட்ட பேசும்போது இழந்த, மகனை காப்பாத்தின உணர்வு கண்ணுல தெரியும். நடிகன்யா நீ… அப்படினு அந்த இடத்துல தனுஷ்க்கு கைதட்ட தோணும்.

3 திரைப்படம்
3 திரைப்படம்

தனுஷ் நடிச்சதுல நிறைய பேரோட ஃபேவரைட் படமா 3 இருக்கும். அதுல வேரியேஷன்ஸ்க்கான ஸ்கோப் நிறைய இருக்கும். ஸ்கூல் டேஸ்ல ஜாலியான கேரக்டரா நடிப்பாரு. யங் ஸ்டேஜ்ல ஒரு பையன் எப்படிலாம் இருப்பான்னு செமயா நடிச்சிருப்பாரு. காதல் சீன்லாம் வரும்போது கண்ணுல ஃபீல் பண்றது அவ்வளவு கியூட்டா இருக்கும். அப்புறம் கல்யாணம் ஆகி தனக்கு சைக்காலஜிக்கல் பிராப்ளம் இருக்குன்றதையும் கண்ணு வழியாதான் வெளிப்படுத்துவாரு. அதுவும் தற்கொலை பண்ணிக்கிற சீன் இருக்குல அந்த சீனை நிறுத்தி நிதானமா பாருங்க. காதலியை விட்டுட்டுப் போற பிரிவின் வலி இருக்கும், ஒரு மன்னிப்பு கேக்குற தன்மையை அதுல ஃபீல் பண்ண முடியும், இதுக்குமே வாழ முடியாதுன்ற பரிதாபம் இருக்கும், ஹாலுசினேஷன்கள் கொடுக்குற பயம் இருக்கும், இப்படி வாழ்க்கை ஆயிடுச்சேன்ற மிகப்பெரிய கோபம் இருக்கும். 5 நிமிஷம் சீன்ல மனுஷ அவ்வளவு விஷயங்கள் கண்கள் வழியா சொல்லுவாரு. டயலாக்கூட கிடையாது. கூட சேர்ந்து நம்மளையும் அதை ஃபீல் பண்ண வைச்சு அழ வைச்சிருவாரு.  

Also Read: நிஜ ரௌடி கத்தமாட்டான். துல்கர் ஏன் பான் இந்தியா ஸ்டார்?

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆடுகளம், மயக்கம் என்ன, மரியான், வட சென்னை, கர்ணன் இப்படி கண்களை வைச்சு தனுஷ் விளையாடுன படங்கள் எக்கச்சக்கமா இருக்கு. ஒவ்வொரு படத்துலயும் தனுஷோட நடிப்பையும் கண்களையும் பத்தி பேசிட்டே போகலாம். மனுஷன் அவ்வளவு தரமான சம்வங்களை பண்ணியிருக்காரு.

பென்சில்ல கோடு போட்ட மாதிரி இருக்கான். யார்ரா இவன்னு தொடக்கத்துல கேலி பண்ணாங்க. உடம்பு அவ்வளவு பெரிய வீக்னெஸா இருந்துச்சு. எல்லாத்துக்கும் நடிப்பின் வழியா பதில் கொடுத்து கலக்குனவரு தனுஷ்தான். அந்த நடிப்புக்கு அவர் கண்கள் மிகப்பெரிய பிளஸ்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top