விஜய்யோட படத்தைப் பத்தி எந்த அப்டேட் வந்தாலும் அதை ரசிகர்கள் தாறுமாறு தக்காளி சோறுனு வெறித்தனமா கொண்டாடுவாங்க. அரபிக்குத்து வைப்ஸே இன்னும் தீரலை. அதுக்குள்ள தளபதி வாய்ஸ்ல ரஞ்சிதமே பாட்டு. உதடு வலிக்க இந்தப் பாட்டைதான் இனி எல்லாரும் முணுமுணுக்கப் போறாங்க. இதுக்கு முன்னாடி, ஆளப்போறான் தமிழன், சிம்டாங்காரன், சிங்கப்பெண்ணே, குட்டி ஸ்டோரி, அரபிக்குத்து பாட்டுலாம்தான் விஜய் படத்தோட ஃப்ஸ்ட் சிங்கிளா ரிலீஸ் ஆச்சு. அப்போ, எப்படிலாம் அந்தப் பாட்டை ரசிகர்கள் கொண்டாடுனாங்கனு நியாபகம் இருக்கா? வாங்க ஒரு ரீவைண்ட் பண்ணி பார்ப்போம்.
ஆளப்போறான் தமிழன் – தமிழர்களுக்கான ஆந்தமாவே இன்னைக்கு வரைக்கும் கொண்டாடப்பட்டுட்டு இருக்கு. மெர்சல் படத்தோட ஃபஸ்ட் லுக்லதான் விஜய் ‘இளைய தளபதி’யை, ‘தளபதி’யா மாத்துனாரு. அப்போவே, விஜய் அரசியலுக்கு வரப்போறாருனு பயங்கரமான டாப்பிக் சோஷியல் மீடியால ஓடிச்சு. அந்த டாப்பிக்குக்கு இன்னும் தீனி போடுற மாதிரி ஆளப்போறான் பாட்டு ரிலீஸ் ஆச்சு. விஜய் தமிழகத்தை ஆளப்போறாரு, அதுக்கு சிம்பல்தான் இந்த ஆளப்போறான் தமிழன் பாட்டுனுலாம் பேசிட்டு இருந்தாங்க. பாட்டு ரிலீஸ் ஆச்சு, பேய்த்தனமான ஹிட்டு. அந்த போஸ்டரே அவ்வளவு பாஸிட்டிவிட்டியை தர்ற மாதிரி இருக்கும். லிரிக்கல் வீடியோ ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம், அதுல வந்த ஒவ்வொரு ஃபோட்டோவையும் ஒவ்வொரு வரியையும் குறிப்பிட்டே பல ரைட்டப்களை எழுதுனாங்க. விஜய் அவ்வளவு அழகா இருப்பாரு. ‘அன்பைக் கொட்டி எங்க மொழி அடித்தளம் போட்டோம். மகுடத்தை தறிக்கிற ழகரத்தை சேர்த்தோம். தலை முறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம். உலகத்தின் முதல் மொழி உசுரென காத்தோம்”னு வரிகள் வரும் போதுலாம் சிலிர்க்கும். உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் மத்தியில் இந்தப் பாட்டு இன்னும் ஒலிச்சுட்டுதான் இருக்கு. “தமிழன்டா என்னாளு, சொன்னாலே திமிர் ஏறும்”னு நிறைய ஃபோட்டோஸ் கேப்ஷனாகவும் இந்த வரிகள் இருக்கு. அல்டிமேட்டான சம்பவம் என்னனா, அஜித் ரசிகர்களே இந்தப் பாட்டை செமயா கொண்டாடுனாங்க. அவங்க வார்த்தைல இப்படி ஒரு பாட்டு நம்ம தலைக்கு கிடைக்கலயேன்ற வருத்தம் தெரிஞ்சுது.
சிம்டாங்காரன் – விஜய்யோட ஃபஸ்ட் சிங்கிள் பாடல்கள்ல இந்தப் பாட்டை டிஸாஸ்டர்னு சொல்லுவாங்க. ஏ.ஆர்.ரஹ்மான் கடுப்புல மியூசிக் போட்டு விவேக் வேண்டா வெறுப்பா எழுதுன பாட்டு மாதிரி இருக்கும். விஜய் ஃபேன்ஸே என்ன ரஹ்மான் இப்படி பண்ணிட்டாருனு நொந்துப்போனாங்க. “முதல் தடவைக் கேட்டேன். பாட்டு புடிக்கலை. ரெண்டாவது தடவையும் புடிக்கலை. கேட்க கேட்க புடிக்கும்னு நினைக்கிறேன். ஆனால் எப்படியும் தலைவன் ஸ்கிரீன்ல பிரசன்ஸாவும் டான்ஸாவும் பின்னியிருப்பாரு”னு மனசை ஆறுதல் படுத்தி போஸ்ட் போட்டாங்க. ஒருவார்த்தைக்கூட புரியாமல்தான் சுத்திட்டு இருந்தாங்க. பல்தி நிக்கிர சுல்தி நிக்கிற காரன்னுலாம் பாடிட்டு திரிஞ்சாங்க. இதுக்குதான் அனிருத் மாம்ஸ் மியூசிக் போடணும்னும் சிலர் ரஹ்மான் மேல வன்மத்தைக் கக்கக் ஆரம்பிச்சாங்க. உடனே, லிரிசிஸ்ட் விவேக் கௌசிக் மாதிரி குறுக்க வந்து சிம்டாங்காரன்nஆ- கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன் பிசுறு கிளப்பினா – தூள் கிளப்புறது, நெக்குலு பிக்குலுனா – கெத்தான காரசாரமான ஆள், தொட்டன்னா தொக்கல்னா – அவன தொட்டன்னா அந்தரத்துல விட்டுடுவான்னு போஸ்ட் போட்டு விளக்கம் கொடுத்தாரு. ஆனால், இதுக்குலாம் பதிலடி கொடுக்குற மாதிரி ‘ஒரு விரல் புரட்சியே’னு அடுத்த சிங்கிள் ரிலீஸ் பண்ணி, யார்லாம் குத்தம் சொன்னாங்களோ அவங்க வாயாலயே ரஹ்மான், விஜய் கொண்டாட வைச்சிட்டாங்க. விஜய் ஃபேன்ஸ்னு சொல்லும்போதே எவ்வளவு கர்வமா இருக்குன்னு பார்த்தியானுலாம் நிமிர்ந்து நின்னு அவர் ஃபேன்ஸ் கலாய்ச்சவங்களுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பிச்சாங்க.
சிங்கப்பெண்ணே – விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி ஹாட்ரிக் கொடுக்குமானு எல்லாரும் ஆவலோட எதிர் பார்த்து கார்த்திருந்தாங்க. அப்போதான், சிங்கப்பெண்ணே பாட்டு ரிலீஸ் ஆச்சு. இன்னைக்கு வரைக்கும் எந்த பெண்கள் ஜெயிச்சாலும், பேக்ரௌண்ட்ல சிங்கப்பெண்ணே பாட்டுதான் ஓடும். அதுமட்டுமில்ல, ஒருகட்டத்துல இந்த சிங்கப்பெண்ணே பாட்டு மீம் டெம்ப்ளேட்டாவும் மாறிடுச்சு. வுமன் ஆந்தமாவே இந்தப் பாட்டை கொண்டாடிட்டு இருக்காங்க. ஆந்தம்னு சொன்னாலே தலைவன் வேறலெவல். பியானோவ ஏர்ல வைச்சு வாசிப்பாரு. பாட்டு வந்த உடனேயே, பெண்கள் எல்லாரும் இந்தப் பாட்டைக் செமயா கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. குறிப்பா, விஜய்யோட பெண்கள் ஃபேன்ஸ் கூட்டம் இருக்குல, அவங்கள்லாம் செம சந்தோஷம். ஆனால், ஒருபக்கம் பாய்ஸ்லாம் சேர்ந்து இந்தப் பாட்டை கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க. எவ்வளவு வன்மத்தோட இருக்காங்க பாருங்களேன்! “அக்னி சிறகே எழுந்துவா, உலகை அசைப்போம் உயர்ந்து வா”னு வரிகள்தான் இன்னைக்கும் மனசுல இருக்குற வரிகள். ஆனால், விஜய்யோட எல்லா ஃபேன்ஸ்க்கும் ட்ரீட்டா அமைஞ்சது வெறித்தனம் பாட்டுதான். காரணம், நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம்னு ஏ.ஆர்.ரஹ்மான் இசைல, விஜய் பாடுனது தான். வெறித்தனம்லாம் பக்கா வெறித்தனம்.
குட்டி ஸ்டோரி – கொரோனாவால எல்லாரும் வீட்டுக்குள்ள முடங்கி போய் கொஞ்சம் டிப்ரஷன்ல இருந்த சமயம். விஜய் – லோகேஷ் – அனிருத் சம்பவம் பண்ணி எல்லாரையும் கொஞ்சம் தேத்தி விட்டாங்க. குறிப்பா, அந்த லிரிக்கல் வீடியோ செம இன்ட்ரஸ்டிங்கா எனர்ஜியா இருந்துச்சு. டிரெண்டிங்ல இருக்குற வார்த்தைகள், மூட் சேஞ்ச் பண்ற மியூசிக், பாஸிட்டிவிட்டியை பரப்புற தீம்னு செம பாட்டு இது. படத்துல வந்த வீடியோவைவிட இந்த லிரிக்கல் வீடியோ நிறைய பேருக்கு பிடிச்சிருந்தது. விஜய் வாய்ஸ் அய்யோ வேற லெவல். மோட்டிவேஷன் ஆந்தமாவும் இன்னிக்கு நிறைய பேருக்கு இந்தப் பாட்டு இருக்குனு சொல்லலாம். குட்டி ஸ்ட்ரோ கிரியேட் பண்ணதும் செம ஹிஸ்டரி.
Also Read: என்னது.. இதெல்லாம் இளையராஜா பாடல்கள் இல்லையா?!
அரபிக்குத்து – விஜய்யோட சிங்கிள் அனௌன்ஸ்மென்ட்லயே செம இன்ட்ரஸ்டிங்கா இருந்தது பீஸ்ட் படத்துக்குதான். அனிருத் – நெல்சன் – சிவகார்த்திகேயனுக்கு பழகுன டெம்ப்ளேட்தான். ஆனால், விஜய் ஃபேன்ஸ்க்கு இது புதுசு. 4 பேரும் சேர்ந்து பண்ண கூத்து இருக்கே. புரோமோ டிரெண்ட் ஆகுறதுலாம் இவங்க படத்துக்கு மட்டும்தான் நடக்கும். அரபிக்குத்துக்கு பெரிய பில்டப்லாம் கொடுத்து ரிலீஸ் பண்ணாங்க. அவங்க கொடுத்த பில்டப்பே பத்தலை பத்தலைனு தான் இருந்துச்சு. இன்னைக்கும் குட்டிப் பசங்கள்ல இருந்து ஃபாரீன்ல இருக்குறவங்க வரைக்கும் எல்லாருமே இந்தப் பாட்டுக்கு ரீல்ஸ் போட்டுட்டுதான் இருக்காங்க. அப்போ, இஸ்லாமியர்களுக்கு எதிராலாம் பேசிட்டு திரிஞ்சாங்க. அப்போ, இந்தப் பாட்டைக் குறிப்பிட்டு “பார்த்தியா விஜய் சைலண்டா சம்பவம் பண்ணிருக்காரு”னுலாம் போஸ்ட் போட்டாங்க. ஆனால், கடைசில படம் டிஸாஸ்டர் ஆயிடுச்சு. படம் போனாலும் பரவால்ல, அடுத்த படத்துல தளபதி ஹிட் கொடுத்துடுவாரு. ஆனால், அரபிக்குத்து மாதிரி ஒரு பாட்டு கிடச்சுதுல. அதுவும் சின்ன ஸ்டெப்லாம் வந்து போட்டு சர்ப்ரைஸ் கொடுத்து டிரெண்ட் பண்ணி விட்டாரு. அதுதாம்லே விஜய்னு ஃபேன்ஸ்.
விஜய்யோட இந்த ஃபஸ்ட் சிங்கிள் எல்லாம் எடுத்து பாருங்க. எல்லாமே தாறுமாறு சம்பவம் பண்ணி இன்னைக்கும் விஜய் ஃபேன்ஸ்க்கு புடிச்ச பாடல்களாதான் இருந்துருக்கு. விஜய்யோட படத்துல இருந்து எத்தனை சிங்கிள் வந்தாலும், விஜய்யோட அந்த ஃபஸ்ட் சிங்கிள்க்கு எப்பவுமே தனி மவுசுதான். அந்த வைப்ஸ எந்த வார்த்தைகளாலும் சொல்ல முடியாது. விஜய்யோட ஃபஸ்ட் சிங்கிள்ல உங்களுக்கு புடிச்சது எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!