கூகுள் சர்ச்சில் கடந்த சில தினங்களாக ரஷ்யாவில் அதிகம் தேடப்பட்ட ஒரு கீ வேர்ட் என்ன தெரியுமா?
கூகுள் சர்ச்சில் ஒரு கீவேர்ட் எவ்வளவு அதிகமாகத் தேடப்படுகிறது என்பதைப் பொறுத்து அதற்கு ஒரு interest rating இருக்கும் இது 0-100 அளவீடு கொண்டதாக இருக்கும். அதிகமாகத் தேடப்படும் கீவேர்டுக்கு 100-ம் குறைவாகத் தேடப்படுவதற்கு தேடப்படும் அளவைப் பொறுத்து 40, 60, 78 என்றெல்லாம் இருக்கும். அதிகமான வேல்யூ அதிகமான தேடல் உடையது.
ரஷ்யாவில் அதிகம் தேடப்பட்ட அந்த கீவேர்ட் “как сломать руку” டேய் தமிழ்ல சொல்லுன்னு நீங்க சொல்றது கேக்குது. “கைகளை உடைத்துக்கொள்வது எப்படி?”
என்னடா இதெல்லாம் தேடுறீங்க, என்னடா ஆச்சு ரஷ்யன்ஸ் உங்களுக்குனு கேக்குறீங்களா? சம்பவம் என்னனா?
ரஷ்யாவுக்கு உக்ரைனுக்குமான போர் கடந்த சில மாசங்களாகவே நடந்துகிட்டிருக்கிறது உங்களுக்குத் தெரியும். ரஷ்யாவும் தொடர்ந்து தன்னுடைய படை பரிவாரங்களை உக்ரைனுக்கு அனுப்பிகிட்டே இருக்காங்க. கடந்த சில நாள்களுக்கு முன்னாடி ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் போருக்காக ரஷ்யர்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் உக்ரைனுக்கு படைதிரட்டி அனுப்ப திட்டமிட்டிருக்கிறதா தெரிவிச்சிருந்தாரு.
இதைச் சொன்னா உடனே நம்மளைத்தானே திரும்பிப்பாருன்னு ரஷ்ய இளைஞர்களுக்குப் புரிஞ்சிருச்சு. அதனால, வசதி குறைவான வலியைப் பொறுத்துக்கக்கூடிய இளைஞர்கள் இப்படி கூகுளைத் தேடி காயமேற்படுத்திக் கொண்டு ராணுவத்தில் பணி புரிவதில் இருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள்.
Also Read: `தக் லைஃப் கிங்’ மிர்ச்சி சிவாவின் தரமான சம்பவங்கள்!
இந்த keyword-ற்கு அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயம் என்ன தெரியுமா? “how to get out of Russia” இப்படித் தேடி, விமான டிக்கெட் வாங்க வசதியுள்ள இளைஞர்கள் ரஷ்யாவிலிருந்து வெளியே செல்வதற்கான one way ticket எடுத்துக்கொண்டு ஐரோப்பாவிற்குத் தப்பித்துச் செல்கிறார்களாம்.
ஏற்கனவே ராணுவப் பயிற்சி பெற்ற 3,00,000 வீரர்களை ராணுவத்திற்கு அழைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இந்தப் பணிக்காக அவர்களின் ஊதியம் ரஷ்யாவின் சராசரி ஊதியத்தை விட 15 மடங்கு எனவும் தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே சில ஐரோப்பிய நாடுகள் ரஷ்யர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க தடை விதித்திருக்கும் நிலையில், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் பல இளைஞர்களும் கலகத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
அடுத்தடுத்து கூகுளில் ரஷ்ய இளைஞர்கள் என்ன தேடப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தும் கூட ரஷ்யா-உக்ரைன் போர் என்ன ஆகும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.