அநேகமாக அதிகமான போலீஸ் கேரக்டரில் நடித்த கோலிவுட் ஹீரோன்னா அது நம்ம கேப்டன் விஜயகாந்தாதான் இருப்பார். தன்னுடைய கரியரில் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் சட்டத்தைக் காப்பாத்தியிருக்கிறார் விஜயகாந்த்.
பொதுவா கோலிவுட்ல இன்ட்ரோ ஆகுற ஹீரோக்கள் போலீஸ் கேரக்டர்கள்ல நடிச்சா, அவங்க கரியரே வேற லெவல்ல பிக்-அப் ஆகும்னு ஒரு டாக் இருக்கு. சில நேரங்கள்ல பிரபலமான ஹீரோக்களும் போலீஸ் வேடம் ஏற்பதுண்டு. ஆனால், நம்ம கேப்டன் கொஞ்சம் வித்தியாசமானவரு. ஆரம்ப காலகட்டங்கள் தொடங்கி, பீக்ல இருந்த சமயங்கள் வரை போலீஸா கலக்குனவரு. தமிழ் சினிமா போலீஸ் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் விஜயகாந்த்தான். போலீஸ் படங்கள் என்றாலே எப்படி இருக்க வேண்டும்… வில்லனிஸம் எப்படியிருக்கணும்னு கோலிவுட் மட்டுமல்ல, அருகிலிருக்கும் மற்ற வுட்டுகளும் பாலபாடம்னா அது கேப்டன் விஜயகாந்த் படங்கள்தான்..
அப்படி போலீஸ் கேரக்டர்களையும் போலீஸ் படங்களுக்கும் எப்படி விஜயகாந்த் பென்ச் மார்க் செட் பண்ணாரு… அதுக்கான 5 காரணங்களைத்தான் நாம இப்போ பார்க்கப்போறோம்.
மாஸ் எலமெண்ட்
வெளிநாட்டு சூப்பர் ஹீரோக்களின் நார்மல் வெர்ஷனாகத்தான் சினிமா ரசிகர்கள் போலீஸ் கேரக்டரை திரையில் பார்ப்பார்கள். அவர்களது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே அந்த போலீஸ் கேரக்டர் சக்ஸஸ்ஃபுல்லானதாக பார்க்கப்படும். அதேபோல், சாதாரண மனிதர்கள் செய்யும் விஷயங்களையும் தாண்டி சூப்பர் Cop-ஆக இருக்க வேண்டும். இப்படியான அத்தனை எலமெண்டுகளையும் மாஸாக விஜயகாந்தின் போலீஸ் படங்களில் இடம்பிடித்திருக்கும். அவரது என்ட்ரியே எதிரிகளை வெலவெலத்துப் போகச்செய்யும். போனஸாக விஜயகாந்தின் நக்கலான நைய்யாண்டிகளும் ரசிகர்களை சிலிர்க்கச் செய்திருக்கும்னே சொல்லலாம்.
சாதாரண பின்னணி கொண்ட கேரக்டர்கள்
சாதாரணப் பின்னணியில் இருந்து முன்னேறி அசாதாரண போலீஸ்காரராக இருந்தால் மட்டுமே, ரசிகர்கள் அந்த கேரக்டர்களைத் தங்களோடு பொருத்திப் பார்த்து, தங்களுள் ஒருவராகக் கொண்டாடுவார்கள். விஜயகாந்த், போலீஸாக நடித்திருக்கும் பெரும்பாலான படங்களில் அவரது கேரக்டர் இந்த பிண்ணணியை இழையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக சத்ரியன் படத்தில் எல்லாவற்றும் கணக்குப் பார்த்து செலவழிக்கும், மிடில் கிளாஸைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தை பன்னீர்செல்வமாக விஜயகாந்த் நடித்திருப்பார். அதுவே, போலீஸ் யூனிஃபார்மில் வில்லன்களை துவம்சமும் செய்திருப்பார். அந்த எக்ஸ்டண்டும் இந்த எக்ஸ்டண்டும் நம்பும்படி திரைக்கதை அமைந்திருக்கும்.
தெறிக்கும் வசனங்கள்
போலீஸ் கேரக்டர்கள் பேசும் வசனங்களுக்கு எப்போதுமே மவுசு தனி. அந்த வகையில், விஜயகாந்த ஆரம்பகாலம் தொட்டு நடித்திருந்த போலீஸ் படங்களில் எல்லாம் டயலாக்குகளைத் தெறிக்கவிட்டிருப்பார். ’ஊமை விழிகள்’ டி.எஸ்.பி தீனதயாளன், கேப்டன் பிரபாகரன் தொடங்கி வல்லரசு, வாஞ்சிநாதன் கேரக்டர்கள் பேசும் வசனங்கள், New era போலீஸ் கேரக்டர்களுக்கு அரிச்சுவடி.
கம்பீரம்
போலீஸ் படங்களோட அடிநாதமே, ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்குற கண்ணாமூச்சி ஆட்டங்கள்தான். அந்த கண்ணாமூச்சி ஆட்டங்கள் எந்த அளவுக்கு ரசனையோட கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்துதான் படத்தின் வெற்றியும் அந்த கேரக்டரும் பேசப்படும். போலீஸ் கேரக்டர் என்றாலே ஒரு கம்பீரத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். முக்கியமாக கெத்தான அந்த கம்பீரத்தை ரசிகர்கள் நம்பும்படி இருக்க வேண்டும். அப்படியான ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் விஜயகாந்த் போலீஸ் கேரக்டரில் நடித்த படங்களில் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். வில்லன்களின் கை ஓங்கியிருக்கும்படியாக பல இடங்களில் வந்து, ஒரு கட்டத்தில் அந்த வில்லத்தனத்தை புத்திசாலித்தனமாகவும் அதே சமயம் போலீஸ் என்கிற கம்பீரத்துடனும் முடித்து வைப்பார் கேப்டன்.
வில்லன்கள்
போலீஸ் கேரக்டர்களின் வேல்யூவே அவர்கள் எதிர்க்கொள்ளும் வில்லன்களைப் பொறுத்துதான் முடிவு செய்யப்படும். அப்படிப் பார்த்தால், கேப்டன் பிரபாகரனுக்கொரு வீரபத்ரன், சத்ரியனுக்கொரு அருமை நாயகம், வல்லரசுவுக்கொரு வாசிம்கான் என விஜயகாந்தின் போலீஸ் படங்களில் வில்லன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் வில்லத்தனத்தில் மெர்சல் காட்டியிருப்பார்கள். வில்லன்களின் வெயிட்டேஜ் ஏறுகையில், அவர்களை வெல்லும் போலீஸ் ஹீரோவின் மைலேஜும் மாஸும் தானாகவே எகிறும்.
விஜயகாந்த் போலீஸாக நடித்த படங்களில் எது உங்களோட மனசுக்கு நெருக்கமான படம்… கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read: விஜயகாந்த்.. நிஜப்பெயர் முதல் டூப் பயன்படுத்தாதது வரை.. | Vijayakanth Unkonow Facts