ஆப்கானிஸ்தான் டி20 மேட்ச்ல சதமடிச்சு, பழைய பன்னீர்செல்வமா ஃபார்முக்குத் திரும்பியிருக்கார் விராட் கோலி. இதன்மூலம் கிட்டத்தட்ட 1020 நாட்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் சதமடித்திருக்கும் அவருக்கு இது 71-வது சதமாகவும் அமைந்திருக்கிறது. ரசிகர்களால் ’கிங்’ கோலி என்றழைக்கப்படும் விராட் கோலியை நாம ஏன் மிஸ் பண்ணோம்… அதுக்கான 3 காரணங்களைத்தான் இந்த வீடியோவுல நாம பார்க்கப்போறோம்.
2018-க்குப் பிறகு விராட் கோலி தீவிரமா வெஜிடேரியன் டயட்டுக்கு மாறினார். அதுக்குப் பின்னாடி இருந்த முக்கியமான ரீசன் என்ன தெரியுமா… அதே மாதிரி விராட் கோலிக்கு ஏன் ‘Cheeku’ங்குற செல்லப் பெயர் வந்துச்சுனு தெரியுமா.. அதுக்கான பதிலை ஒரு பேட்டில விராட்டே சொல்லிருப்பார். அது என்னங்குறதையும் சொல்றேன்.. வீடியோவை முழுசா பாருங்க..
கிங் கோலியை நாம ஏன் மிஸ் பண்றோம்… அதுக்கான 3 காரணங்கள்!
* ரன் மெஷின்
எப்பவும் ரன் ஸ்கோர் பண்ணிட்டே இருக்கணும். களத்துல ஒரு இடத்துல நிக்காம சும்மா துறுதுறுனு இருக்க விராட் கோலி, ரன் குவிக்குறதுலயும் கில்லாடி. அதனாலயே, இவரை ரன் மெஷின்னு கிரிக்கெட் உலகத்துல செல்லமா அடையாளப்படுத்துவாங்க. இப்ப இருக்க ஆக்டிவ் பிளேயர்ஸ்ல விராட் கோலிதான் Highest Run Scorer. அதேமாதிரி, செஞ்சுரீஸ்ல பார்த்தாலும் நம்ம விராட்தான் முதலிடத்தில் இருக்கார். எந்த மாதிரியான சூழ்நிலையிலும் எந்தவொரு டீமுக்கு எதிராகவும் ரன் குவிக்குறதுல விராட் மொரட்டு சம்பவம் பண்றவரு. எல்லா ஏரியாலும் அய்யா கிங்… எடுத்துப்பாரு ரெக்கார்டுனு பல சாதனைகளையும் இதுக்கு சப்போர்டா தன்னோட டேட்டா பேஸ்ல வைச்சிருக்காரு. ‘Form is temporary, class is permanent’னு சொல்வாங்க. அது விராட் கோலி விஷயத்துல 200% உண்மை. இதை கிரிக்கெட்டோட பல லெஜண்ட்ஸுமே பல சூழ்நிலைகள்ல சுட்டிக்காட்டியிருக்காங்க.
* சேஸிங் மாஸ்டர்
சேஸிங்குனு வந்துட்டாலே கோலி குஷியாகிடுவார். ஒண்டே மேட்சோ, டி20 மேட்சோ சேஸிங்ல விராட் கோலிக்குனு தனி ரெக்கார்டே இருக்கு. இதுவரைக்கு ஒண்டே மேட்ச்கள்ல அவர் அடிச்சிருக்க 43 சதங்கள்ல, 26 சேஸிங்ல ஸ்கோர் பண்ணது. அதுல, வெறும் 7 மேட்ச்கள் மட்டுமே இந்தியாவால வெற்றிபெற முடியாமப் போயிருக்கு. அவரோட சேஸிங் மாஸ்டர் இன்னிங்ஸ்கள்ல எத்தனையோ மேட்சுகளை உதாரணமா சொல்லலாம். அதுல முக்கியமான ரெண்டுனா, பாகிஸ்தானுக்கு எதிரான டி20 வேர்ல்டு கப் சேஸிங்கையும், 2016 டி20 வேர்ல்டு கப்ல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொகாலி மேட்சையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த அளவுக்கு சேஸிங்ல பல தரமான மொரட்டு சம்பவங்களை விராட் கோலி பண்ணிருக்கார். அதனாலேயே கிரிக்கெட் உலகத்துல சேஸிங் மாஸ்டர்ங்குற செல்லப்பெயர்ல விராட் கோலியை அடையாளப்படுத்துவாங்க.
* Energetic Presence
விராட் கோலி வந்ததுக்கு அப்புறம் இந்தியன் டீமோட கல்ச்சரே மொத்தமா மாறியிருக்குனு சொல்லலாம். ஃபிட்னெஸின் முக்கியத்துவம் தோனி கேப்டன்ஷிப்புக்குக் கீழ் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சாலும், கோலி தலைமையின் கீழ் ஃபீட்னெஸ் முக்கியமான அம்சமாவே மாறிடுச்சு. அதேமாதிரி, எல்லா மேட்சுகளையும் ஜெயிக்கணும்ங்குற ஆட்டிடியூடும் இந்தியன் டீமுக்குள்ள பரவ ஆரம்பிச்சதுனே சொல்லலாம். அதுக்கு நல்ல உதாரணம், கோலி முதன்முதல்ல கேப்டனா விளையாடின அடிலெய்டு டெஸ்டை சொல்லலாம். தோனியோட திடீர் ஓய்வுக்குப் பிறகு கேப்டனா களமிறங்குனார் விராட் கோலி. 364 டார்கெட்டை நோக்கி விளையாடிய இந்திய அணி ஒரு கட்டத்துல 242/3 என்கிற ஸ்ட்ராங்கான நிலைமைல இருக்கும். மிடில் ஆர்டர் சொதப்பலால அந்தப் போட்டில 315 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்துல தோத்துடும். ஆனால், அந்தப் போட்டில சேஃப் கேம் ஆடி டிராவை நோக்கிப் போகாம, ஜெயிக்கணும்னு போராடுன இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிஞ்சது. இன்னிக்கு அவரோட பேட்டிங்கை எவ்வளவோ விமர்சித்தாலும், எதிரணியோட முக்கியமான டார்கெட்டாவும் Most Prized wicket-ஆவும் பார்க்கப்படுறது கோலியோட விக்கெட்தான். சமீபத்துல நடந்த ஹாங்காங்குடனான மேட்சுக்கு முன்னாடி, இந்தியன் டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்த அந்த நாட்டு வீரர்கள், `Thank you for Inspiring a generation’னு நெகிழ்ச்சியா டிஷர்ட்ல வாழ்த்து வாசகம் போட்டு விராட் கோலிக்கு கிஃப்ட் பண்ணிருந்தாங்க. அந்த அளவுக்கு தன்னோட டீம் மட்டுமில்லீங்க, எதிரணிக்கும் தன்னோட Presence-ஆல மேஜிக் பண்றவர் நம்ம கோலி.
விராட் கோலி ஏன் வெஜிடேரியனுக்கு முழுசா மாறுனார்னா… உலகத்துல இருக்க பல அத்லெட்ஸ், அவங்களோட லைஃப்ஸ்டைல் பத்தி நெட்ஃபிளிக்ஸ்ல ‘Game Changers’னு ஒரு டாக்குமெண்டரி இருக்கு. அதப் பாத்ததுக்குப் பிறகு விராட் கோலிக்கு வெஜ் டயட்டை ஃபாலோ பண்ணனும்னு தோணியிருக்கு. 2018ல தென்னாப்பிரிக்கா டூரின்போது விராட் கோலிக்கு முதுகுத் தண்டுவடத்துல காயம் ஏற்பட்டுச்சு. அந்தக் காயத்துனால, தன்னோட எலும்புகள் வீக்கானதாகவும் அவர் ஒரு பேட்டில சொல்லிருப்பார். அதேநேரம், வெஜ் டயட்டுக்கு மாறுனதுக்கு அப்புறம் ரொம்பவே பெட்டரா ஃபீல் பண்ணதாகவும் அவர் சொல்லியிருந்தார். ‘Cheeku’ பட்டப் பெயர் பத்தி கெவின் பீட்டர்சன்கிட்ட ஒரு தடவை விராட் கோலி பகிர்ந்திருப்பார். `அந்தப் பெயர் என்னோட சின்ன வயசு கோச் வைச்சது. சின்ன வயசுல என்னோட கன்னம் பெருசா இருக்கும். அப்போலாம் ஹேர் கட்டும் டைட்டா பண்ணிருப்பேன். அதனால என்னோட காதுகளும் பெருசா தெரியும். ரொம்ப பேமஸான காமிக் புக்கான சம்பக்ல ஒரு முயல் கேரக்டர் இருக்கும். அதோட பேர் Cheeku. அப்படித்தான் கோச் என்னை Cheeku-னு கூப்ட ஆரம்பிச்சார். அப்டித்தான் எனக்கு அந்தப் பேர் வந்தது’னு பகிர்ந்திருப்பார் விராட். பல்வேறு சூழ்நிலைகள்ல தோனி, விராட் கோலை Cheeku’னு கூப்டது ஸ்டம்ப் மைக்ல நாம கேட்டிருக்கலாம். அந்தப் பேருக்குப் பின்னாடி இருக்க ரகசியம் இதுதான்.
கிங் கோலியோட பெஸ்டான சிங்கிள் மேட்ச் பெர்ஃபாமன்ஸ்னா டக்குனு உங்களுக்கு நினைவுக்கு வர்ற இன்னிங்ஸ் எது.. மறக்காம அதை கமெண்ட்ல சொல்லுங்க!