உங்க வீட்டோட Interior எப்பவுமே பிரைட் கலர்ஸ்ல இருக்கணும்னு ஏன் சொல்றாங்க.. அதுக்கான 3 காரணங்களைப் பத்திதான் நாம இப்போ தெரிஞ்சுக்கப் போறோம்.
வீட்டு Interior
வீட்டு Interior சிம்பிளா இருக்கிறது ஒரு மெஜஸ்டிக்கான லுக் கொடுக்கலாம். ஆனால், பிரைட்டான கலர்ஸ்ல உங்க வீட்டு இண்டீரியரை டிசைன் பண்றது பல நன்மைகளைக் கொடுக்கும்னு சொல்றாங்க டிசைனர்ஸ். சிம்பிள் கலர்ஸ்தான் நமக்கு எப்பவுமே பிடிச்சதுனு நினைக்கிற ஆளா நீங்க… உங்க வீட்டு இண்டீரியரை பிரைட்டான கலர்ஸுக்கு மாத்த பல காரணங்கள் இருக்கு. அதுல முக்கியமான 3 காரணங்களைத்தான் நாம இப்போ பார்க்கப் போறோம்.
பாசிட்டிவிட்டி
பிரைட் கலர்னாலே அது டார்க்காத்தான் இருக்கணும்னு இல்ல பாஸ். அவை உங்கள் மனதுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பதோடு, ஃபீல் குட்டாவும் உங்களை உணர வைக்கும். அத்தோடு, மகிழ்ச்சியையும் பாசிட்டிவிட்டியையும் பரப்புபவை. வீட்டுக்கு வெளியில் எத்தனையோ டென்ஷனான மொமண்ட் இருந்தாலும், அவற்றையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு புது வைப் கொடுக்கும் இடமாக மாற்றுவதில் பிரைட் கலர்ஸுக்கு முக்கியமான பங்கு இருக்குனு சொல்றாங்க உளவியலாளர்கள். உங்க வீட்டு சுவர்கள் சிம்பிளான கலர்ஸ்ல இருந்தாலும், பர்னிச்சர் மாதிரியான பொருட்கள் பிரைட் கலர்ஸ்ல இருக்க மாதிரி பாத்துக்கிட்டீங்கனா, அது பேலன்ஸ் ஆகிடும். மஞ்சள், மிண்ட் பச்சை மற்றும் ஊதா போன்ற நிறங்கள் நல்ல சாய்ஸாக இருக்கும்.
தனித்த அடையாளம்
பிரைட்டான கலர்களின் இண்டீரியர் அமைப்பது உங்கள் வீட்டை மற்றவைகளில் இருந்து தனித்து அடையாளப்படுத்தும். அதேநேரம், பிரைட் கலர்களை வைத்து விளையாடுவது சில நேரங்களில் நீங்கள் நினைப்பதைச் சரியாக கன்வே பண்ண முடியாமல் செய்துவிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரைட் கலர்ல பர்னிச்சரைத் தேர்வு செய்வதற்கு முன்னர், அது உங்கள் இண்டீரியர் கலரோட மேட்ச் ஆகுமா, எந்தமாதிரியான அவுட் லுக் கொடுக்கும் என்பதையெல்லாம் சிந்தித்துவிட்டு முடிவெடுங்கள். இதற்காக கொஞ்சம் மெனக்கெடுவது நல்லதுதான் பாஸ். அதேநேரம், கலரைத் தேர்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்றுவிட்டால், நிச்சயம் அது உங்களுக்கு நன்மையே பயக்கும்.
கிளீன் லுக்
பிரைட் கலர்களில் உங்கள் இண்டீரியர்ஸ் இருக்கும்போது, வீடு எப்போது பளீச்சென சுத்தமாக இருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும். புதிதாக உங்கள் வீட்டுக்கு வருபவர்கள், நிச்சயம் இதை உணர்வார்கள். வீட்டில் இருக்கும் பொருட்கள் எல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்டது போன்று நீங்களே உணர்வீர்கள். கண்களுக்குக் குளிர்ச்சியை அளிப்பதோடு, good vibes-ஐயும் உணரச் செய்யும். தினசரி உங்கள் வீட்டைப் பராமரிக்க முடியாத சூழலில், இதுபோன்ற பிரைட் கலர்களைத் தேர்வு செய்தால் அது உங்களுக்குக் கைகொடுக்கும். அதேநேரம், ரொம்பவும் போல்டான கலர்களைத் தேர்வு செய்ய வேண்டாம்.
Also Read – பிரேக்-அப்ல இருந்து மீண்டு வருவது எப்படி… உளவியலாளர்கள் சொல்லும் எளிய வழிகள்!