மகாநதி சங்கர்

கரகர குரல்… முரட்டு வில்லன்… தத்ரூப நடிப்பு… வியக்க வைக்கும் மகாநதி சங்கர்!

நம்மைச் சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர்கள், கலங்க வைத்த குணச்சித்திர நடிகர்கள், தனித்துத் தெரிந்த துணை நடிகர்கள், குரூப் டேன்ஸர், ஸ்டண்ட் மேன் என தமிழ் சினிமா எனும் பெருந்தேரை வடம் பிடித்து இழுத்த அத்தனைக் கலைஞர்களையும் கௌரவித்த மேடை Tamilnadu Now நடத்திய “Golden Carpet Awards”. அம்மேடையில் விருது வென்ற மகாநதி சங்கர் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பு இங்கே.

மகாநதி சங்கர்
மகாநதி சங்கர்

மகாநதி ஜெயிலராக நடிப்பு அவதாரத்தைத் தொடங்கி மாஸ்டர் ஜெயிலரில் வேறொரு பரிணாமம் பெற்றவர் சங்கர். ஸ்டண்ட்மேனாக சினிமாவுக்குள் வந்த சங்கர் 80 அடி உயரத்திலிருந்து குதிக்கச் சொன்னாலும், உடல் முழுக்க நெருப்பு மூட்டி நடக்கச் சொன்னாலும் தயங்காமல் ரிஸ்க் எடுக்கும் முரட்டுக்காளை. ஸ்டண்ட்மேனாக இருந்து நடிகரானது இவருக்கு கிடைத்த ஜாக்பாட் என்றால் வில்லனாக இருந்து காமெடி ரூட்டைப் பிடித்தது நமக்கு கிடைத்த ஜாக்பாட். திரையில் வில்லனத்தனமான பார்வை காட்டி மிரட்டும் மகாநதி சங்கர், நிஜத்தில் சன்மார்க்கத்தைக் கடைபிடித்து தினமும் மந்திரம் ஜெபிக்கும் ஆன்மிகவாதி. போகிற போக்கில் இவர் சொல்லிச் சென்ற ஒரு வசனம், உச்ச நட்சத்திரத்தின் கோடிக்கணக்கான ரசிகர்கள் தினம் தினம் கொண்டாடும் மந்திர வார்த்தையானது தல வரலாறு.

தனித்துவ குரல், தத்ரூப நடிப்பு என வியக்க வைக்கும் கலைஞன் மகாநதி சங்கருக்கு விருது வழங்கி கௌரவித்தார் தயாரிப்பாளர் தேனப்பன்.

மகாநதி சங்கர்
Mahanathi Shankar

“விருதுலாம் பெருசா கெடைக்காது. ஸ்டண்ட் மேனா இருக்கும் போது நூறாவது நாள் விழாக்களில் ஷீல்ட் தருவாங்க. கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆன பிறகு விருதெல்லாம் பெருசா கிடைக்காது. நான் எப்படி ஸ்டண்ட் மேனா எப்படி ஆனேன்னு தெரியாது, எப்படி நடிக்க வந்தேன்னு தெரியாது. இயக்குநர்கள் யாரும் கூப்பிட்டாங்கன்னா என்ன ரோல்னுலாம் கேக்க மாட்டேன். நடிக்க போயிருவேன். அப்படித்தான் எல்லாமே நடிச்சது. ஸ்டண்ட் மேனா இருக்கும் போது தமிழ் மட்டுமில்ல, ஏழு மொழி படங்கள்ல நடிச்சிருக்கேன். கேரக்ட்டர் ஆர்டிஸ்டா, காமெடியனானுலாம் தெரியாது. கூப்பிடுவாஙக நடிப்பேன். இந்த மாதிரி குணச்சித்திர நடிகர்களை கூப்பிட்டு வச்சு ஒரு விருது கொடுத்தீங்க பாத்தீங்களா… இது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு” என்றார் தன் கர கர குரலில் மகாநதி சங்கர்.

Also Read – “இளையதளபதியின் நண்பர், உலகநாயகனால் பெயர் சூட்டப்பட்டவர்…” கராத்தே ராஜா

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாருக்கு தல என பெயர் வைத்ததுக்குப் பின்னால் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களையும், அஜித்துடனான தன் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். #AK61 படத்தி மீண்டும் அஜித்தை சந்தித்ததைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார். அந்தச் சுவாரஸ்ய சம்பவங்களை Tamilnadu Now Youtube Channel-ல் நீங்கள் பார்க்கலாம்.

6 thoughts on “கரகர குரல்… முரட்டு வில்லன்… தத்ரூப நடிப்பு… வியக்க வைக்கும் மகாநதி சங்கர்!”

  1. Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.

  2. Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top