நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கலை இயக்குநர் என பன்முகக் கலைஞராக ஜொலிப்பவர் தியாகராஜன். பிஸினஸ் மேனாக இருந்தவரை அலைகள் ஓய்வதில்லை `டேவிட்’டாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் பாரதிராஜா. அன்று பதித்த முத்திரையை நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தக்க வைத்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1980-களிலேயே பான் இந்தியா ஸ்டாராகக் கலக்கியவர். இவர் நடித்த படம் எந்த மொழியில் ரீமேக் ஆனாலும் அவர் மட்டும் அதே கதாபாத்திரத்தில் நடிப்பது அவரது தனித்தன்மைக்கு எடுத்துக்காட்டு.
பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்ற கிளாசிக் இயக்குநர்களிடம் நீங்கள் கேட்டவை கிடைக்கும் என வெரைட்டி விருந்து வைத்தவர். மலையூர் மம்பட்டியானாக தமிழ் சினிமா என்றென்றைக்கும் நினைவுகூறும் ஒப்பற்ற கலைஞன். தியாகராஜனுக்குத் தங்கக் கம்பளம் விரித்து வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறது Tamilnadu Now Golden Carpet Awards. தியாகராஜனுக்கு Tamilnadu Now சார்பாக Lifetime Achievement விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தியாகராஜனுக்கான விருதை தயாரிப்பாளர்கள் கட்ரகடா பிரசாத் மற்றும் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் இணைந்து வழங்கினார்கள். அப்போது மேடையில் தியாகராஜனின் மகனும் நடிகருமான பிரசாந்தும் உடனிருந்தார். மைக் பிடித்த தியாகராஜன், `Tamilnadu Now சேனல் புதுசா ஆரம்பிச்ச மாதிரி தெரியலை. ஏதோ நூறு வருஷம் ஆன மாதிரி முத்தாய்ப்பான ஆரம்பம் இது. இந்த ஆரம்பத்தை பெரிய அளவில் கொண்டுபோக வேண்டும். வித்தியாசமான விருதுகளை வழங்கும் Tamilnadu Now-க்கு என்னோட பாராட்டுகளும் வாழ்த்துகளும்… எனக்கு ரொம்ப மகிழ்ச்சி என்னன்னா… என்னையும் கூப்பிட்டு ஒரு விருது கொடுத்திருக்கிறார்கள் என்பது..’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதையடுத்து தொகுப்பாளர் அர்ச்சனா நடிகர் பிரசாந்திடம் எழுப்பிய கேள்விக்கு அவர் சுவாரஸ்யமான பதிலை அளித்தார். உங்கள் அப்பாவை ஒரு இயக்குநராகத் தயாரிப்பாளராக, நடிகராக, ஒரு தந்தையாகப் பார்த்திருக்கிறீர்கள். இந்த நான்கில் எந்த கதாபாத்திரத்தை அவர் மிகச்சிறப்பாகப் பூர்த்தி செய்திருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு,
அவர் எனக்கு மிகச்சிறந்த நண்பராக இருந்திருக்கிறார்’ என்று அட்டகாசமான பதிலைக் கொடுத்தார் பிரசாந்த்.
தந்தை தியாகராஜன் விருது வாங்கிய தருணம் குறித்து நெகிழ்ந்த பிரசாந்த், `நானே சினிமா துறைக்கு வந்து 30 வருடங்கள் கடந்துவிட்டது. இதுதான் முதல்முறையாக நானும் எனது தந்தையும் ஒரு விருது விழா மேடையில் ஒன்றாக நிற்கும் நிகழ்வு. இந்த ஒரு தருணத்தை உருவாக்கிக் கொடுத்த Tamilnadu Now2-க்கு மிகப்பெரிய நன்றி. இது எல்லா தந்தைகளுக்கும் மகன்களுக்கும் எப்போதும் அமைய வேண்டும் என்று நான் ஆசைப்படுவேன். இது எனக்கு எப்போதும் மனதுக்கு நெருக்கமான விருது என்று சொல்வேன்’ என்று கூறினார்.
Also Read -`தமிழ் சினிமாவின் மினி ஆச்சி’ சுஜாதா-வுக்கு மேடையில் 2 சர்ப்ரைஸ்கள்!
பிரசாந்த் குறித்து பேசிய தியாகராஜன், மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி’ என்கிற திருக்குறளோடு தொடங்கினார். அவர் மேலும் பேசுகையில்,
அலைகள் ஓய்வதில்லை படம், அதன்பிறகு மலையூர் மம்பட்டியான் படம் வெளியான சமயங்களில் அந்த அடையாளத்தோடுதான் என்னை அழைத்தார்கள். அந்த அடையாளத்தை மாற்றியது பிரசாந்த்தான். அவர் நடிக்க வந்ததற்குப் பிறகு அதோ போறார் பார் பிரசாந்தோட அப்பா’ என்று சொல்லத் தொடங்கினார்கள்’ என்று நெகிழ்ந்தார். அதன்பிறகு தந்தை தியாகராஜன் - மகன் பிரசாந்த் இடையே நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான மொமண்டுக்குப் பிறகு,
இன்னிக்கு என்னை ரொம்ப எமோஷனலாக்கிட்டீங்க. அதனால எனக்குப் பேச்சு கூட வர மாட்டேங்குது’ என்று தனது உணர்வுப்பூர்வமான தருணம் பற்றி பேசியிருந்தார் தியாகராஜன். அந்த எமோஷனலான மொமண்ட மிஸ் பண்ணாமப் பார்க்க Tamilnadu Now யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கும் Golden Carpet Award Show-வை முழுமையாகப் பார்க்க மறக்காதீங்க!