விஜயகுமார். வெள்ளித்திரை நடிகர்களின் பிதாமகன். பாசம் காட்டும் அண்ணணாகவும் மீசைக்கார நண்பனாகவும் பாதம் பட்ட படங்களில் எல்லாம் பட்டையைக் கிளப்பிய நாட்டாமை. ஸ்ரீவள்ளி தொடங்கி பொன்னியின் செல்வன் வரையில் 400 படங்களுக்கு மேல் நடித்திருப்பவருக்கு, அறிமுக நடிகர் தொடங்கி உச்ச நடிகர் வரை ரசிகர் பட்டாளம் உண்டு.

நாட்டாமை படத்தில் இவரது கேரக்டர் ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போகவே தெலுங்கு, இந்தி ரீமேக்குகளில் அந்த கேரக்டரில் ரஜினியே நடித்திருக்கிறார். அரை நூற்றாண்டு பயணத்துக்கு இது ஒரு பருக்கை உதாரணம்தான். காதலன், நண்பன், வில்லன், ஹீரோ, அப்பா, மாமனார், போலீஸ், நாட்டாமை என தன் டீனேஜ் முதல் ஒவ்வொரு பருவத்திலும் விஜயகுமார் உயிர்கொடுத்த கேரக்டர்கள் என்றென்றைக்குமான பெஞ்ச் மார்க்.
குழந்தை நட்சத்திரமாகத் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் ஹீரோ, கேரக்டர் ஆர்டிஸ்ட், தந்தை, போலீஸ் தொடங்கி தாத்தா வரை வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். அறுபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் கம்பீர அடையாளமாக ஜொலிக்கும் விஜயகுமாருக்குத் தங்கக் கம்பள வரவேற்பு அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது Tamilnadu Now Golden Carpet Awards. விஜயகுமாருக்கு Tamilnadu Now சார்பாக Lifetime Achievement விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
வெள்ளித்திரை நடிகர்களின் பிதாமகன் விஜயகுமாருக்கு விருதை அளித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கௌரவப்படுத்தினார். மைக் பிடித்த உடனே உற்சாகமான விஜயகுமார், நாட்டாமை படத்தில் தனது பேமஸான டயலாக்கான நீதிடா நேர்மைடா நியாயம்டா’ டயலாக்கைப் பேசி அரங்கை அதிரவைத்தார். பின்னர் தொடர்ந்து பேசிய அவர்,ரெட் கார்பெட் வெல்கம்னு சொல்வாங்க… ஆனால், இது Golden Carpet. இது ரொம்ப அம்சமா இருக்கு; நல்லா இருக்கு. இங்க விருதுகள் வாங்கும் கலைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த மாதிரி விருது கொடுக்கும்போது, அவர்களை இது அவர்களை ஊக்குவிப்பதுபோல் இருக்கும். அதாவது ஒவ்வொரு நாளும் ஒரு படிப்பு; ஒவ்வொரு நாளும் ஒரு அடி எடுத்து வைக்கிறோம். அதேமாதிரிதான் நான் 63 ஆண்டுகள் திரைத்துறையில் இருந்தாலும் இன்னும் கற்றுக்கொண்டு இருக்கிறேன்.
நடிப்பில் எனக்கென தனி பாணி என்பதை வைத்துக் கொள்ளாதவன் நான். `எப்பா வந்துட்டார்பா… இவர்னா இப்படித்தான்’ என்று என்னைச் சொல்லமாட்டார்கள். இயக்குநர்கள் என்ன விரும்புகிறார்களோ… அதைச் செய்யக் கூடியவன் நான். அந்த வகையிலேதான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரோடு இணைந்து நாட்டாமை, நட்புக்காக, சேரன் பாண்டியன் என பல படங்களிலே பயணித்திருக்கிறேன். இதில் எனக்கு மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் நாட்டாமை. மூன்று நாள்தான் அந்தப் படத்தில் வேலை பார்த்தேன். நாட்டாமை கதை எனக்கு முதலில் வேறு மாதிரி சொல்லியிருந்தார் கே.எஸ்.ரவிக்குமார். அதன்பிறகு சரத் சாரை சந்தித்து கதை சொன்னபோது இரண்டு கேரக்டர்களையும் நானே பண்ணிடுறேன்னு சரத் சார் சொல்லியிருக்கிறார். அதை தப்பு சொல்ல முடியாது. ஏன்னா ஒரு ஹீரோ சொன்னா டைரக்டர் மறுப்பு சொல்ல முடியாது.

அதுக்கப்புறம் அந்த கேரக்டருக்கு ஒரு அப்பா கேரக்டர் இருக்கு நீங்க அதைப் பண்ணுங்கனு கே.எஸ்.ரவிக்குமார் சொன்னார். ஏன் அதையும் சரத் சாரையே பண்ணிடச் சொல்ல வேண்டியதுதானே’னு நான் சொன்னேன்.இல்ல சார். இது நல்ல கேரக்டர். நிச்சயம் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்’னு சொல்லி என்னை நடிக்க வைச்சார். இன்னிக்கும் நாட்டாமை கேரக்டர் பேசப்படுதுனா அதற்கு முழுக்க முழுக்க கே.எஸ்.ரவிக்குமார் சார்தான் காரணம். நன்றி’ என்று பேசினார். எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொட்டு கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் விஜயகுமாருக்கு சிறப்பு மரியாதை Tamilnadu Now Golden Carpet விருது விழாவில் செய்யப்பட்டது. அந்த நெகிழ்ச்சியான மொமண்டுகளை மிஸ் பண்ணாமப் பார்க்க Tamilnadu Now யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கும் Golden Carpet விருது விழாவை மிஸ் பண்ணாமப் பாருங்க.. லிங்க் கீழே!






Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.
kuwin sở hữu kho game đa dạng từ slot đến trò chơi bài đổi thưởng, mang đến cho bạn những giây phút giải trí tuyệt vời.