உலக அளவில் கொரோனா பாதிப்பால் சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவியது. அந்த சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்தது. இதனால் வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது.
தற்போது சந்தைகளில் நிலைத்தன்மை ஏற்பட்டு, முதலீட்டாளர்கள் மாற்று முதலீடுகள் பக்கம் கவனத்தைத் திசைதிருப்பியிருக்கும் நிலையில் தங்கம் வாங்கலாமா, வேண்டாமா?
தங்கம் வாங்குவது தொடர்பாக உங்களுக்கு இருக்கும் அத்தனை சந்தேகங்களுக்குமான பதில்கள் ஒரே இடத்தில்.
* KDM என்பது தங்கத்தில் காட்மியம் கலந்து தயாரிக்கப்படும் நகைகளைக் குறிப்பது. 916 என்பது 91.6% தூய்மையான தங்கம் என்பதைக் குறிக்கும்.
* ஆபரணத் தங்கத்தைப் பொறுத்தவரையில் 916 நகைகளே சிறந்தவையாகக் கருதப்படும்.
* ஹால்மார்க் தங்கம் என்பது BIS எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையத்தால் சான்றளிக்கப்பட்ட தூய்மையான தங்கமாகும்.
* தங்கத்துக்கென சர்வதேச அளவில் வரையறுக்கப்பட்டிருக்கும் தரநிலையில் அது இருக்கிறதா என்பதைப் பார்த்து ஹால்மார்க் சான்று அளிக்கப்படுகிறது.
* 916 அல்லது 22 கேரட் தங்கம் என்பது 24 கேரட் தூயதங்கத்தை விட ஆபரணங்கள் செய்ய உகந்தது மற்றும் 18 கேரட் தங்கத்தை விடத் தூய்மையானது.