உலக அளவில் கொரோனா பாதிப்பால் சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவியது. அந்த சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்தது. இதனால் வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது.
தற்போது சந்தைகளில் நிலைத்தன்மை ஏற்பட்டு, முதலீட்டாளர்கள் மாற்று முதலீடுகள் பக்கம் கவனத்தைத் திசைதிருப்பியிருக்கும் நிலையில் தங்கம் வாங்கலாமா, வேண்டாமா?
தங்கம் வாங்குவது தொடர்பாக உங்களுக்கு இருக்கும் அத்தனை சந்தேகங்களுக்குமான பதில்கள் ஒரே இடத்தில்.
* ஆன்லைனில் தங்கம் வாங்குவதால் கடைகளில் வாங்கும்போது செய்கூலி, சேதாரம் போன்றவைகளைத் தவிர்க்க முடியும். * தங்கத்தின் சுத்தம், பாதுகாப்பாக வைத்திருப்பது போன்ற பிரச்னைகள் ஆன்லைனில் வாங்கும்போது கிடையாது. * மிகவும் எளிதாக பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற வாலெட்டுகள் வாயிலாகவே ஆன்லைனில் தங்கத்தை வாங்கி முதலீடு செய்ய முடியும் * விற்கும்போது எந்தவித இழப்பும் இன்றி விற்க முடியும் * ஆன்லைனில் வங்கிக் கடன்களுக்கு அடமானமாக இதை வைக்க முடியும்
* KDM என்பது தங்கத்தில் காட்மியம் கலந்து தயாரிக்கப்படும் நகைகளைக் குறிப்பது. 916 என்பது 91.6% தூய்மையான தங்கம் என்பதைக் குறிக்கும்.
* ஆபரணத் தங்கத்தைப் பொறுத்தவரையில் 916 நகைகளே சிறந்தவையாகக் கருதப்படும்.
* ஹால்மார்க் தங்கம் என்பது BIS எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையத்தால் சான்றளிக்கப்பட்ட தூய்மையான தங்கமாகும்.
* தங்கத்துக்கென சர்வதேச அளவில் வரையறுக்கப்பட்டிருக்கும் தரநிலையில் அது இருக்கிறதா என்பதைப் பார்த்து ஹால்மார்க் சான்று அளிக்கப்படுகிறது.
* 916 அல்லது 22 கேரட் தங்கம் என்பது 24 கேரட் தூயதங்கத்தை விட ஆபரணங்கள் செய்ய உகந்தது மற்றும் 18 கேரட் தங்கத்தை விடத் தூய்மையானது.
* ஹால்மார்க் முத்திரையை வரவேற்கும் நகை வணிகர்கள் தனி ஹால்மார்க் அடையாள எண் (HUID – Hallmark Unique Identification Number) கொண்டுவரப்படுவதையே எதிர்க்கிறார்கள். * HUID என்பது ஒவ்வொரு நகைக்குமான தனித்த அடையாள எண்ணாகும். இதன்மூலம் குறிப்பிட்ட நகையை யார் வாங்குகிறார்கள், விற்கிறார்கள், அவர்களின் பின்னணி என்ன போன்ற தகவல்களைக் கண்காணிக்க முடியும் என்கிறார்கள் நகை வணிகர்கள். * இது வாடிக்கையாளர்களின் பிரைவசியைப் பாதிக்கும் என்பதால் எதிர்க்கிறோம் என்பது அவர்களின் வாதம். * ஹால்மார்க் தனி அடையாள எண்ணைப் பெற காத்திருப்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு வர குறைந்தது 5 முதல் 10 நாட்கள் தாமதம் ஏற்படும். புதிய விதிமுறையால் தங்கத்தின் விலையும் கடுமையாக உயரும் என்றும் அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
* பலவிதமான தங்க சீட்டுத் திட்டங்களை நகைக்கடைகள் நடத்தி வருகின்றன. மாதந்தோறும் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் ஒரு தொகையைக் கட்டி, ஆண்டு முடிவில் அந்தப் பணத்துக்கு ஈடான தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம். இதற்கு சில கடைகளில் செய்கூலி, சேதாரம் இல்லை. * நகை சீட்டுகளைப் பொறுத்தவரை இடையில் நிறுத்தினால், பணமாகத் திரும்பப் பெற முடியாது. நீங்கள் செலுத்திய தொகைக்கு ஈடான தங்கத்தையே மற்றெந்த சலுகைகளும் இல்லாமல் வாங்க முடியும். * குறிப்பிட்ட சில கடைகளில் 18% மேல் சேதாரம் உள்ள நகைகளை வாங்கினால், நீங்கள் கூடுதலாகப் பணம் கட்ட வேண்டி வரும். * நகைக்கடைகளில் சீட்டுத் திட்டம் மூலம் தங்கக் காசு, சேதாரம் குறைந்த நகைகளை வாங்கினால் உங்களுக்கு நஷ்டம் ஏற்படும். * மொத்தமாகப் பணத்தைக் கொடுத்து நகை வாங்க முடியாதவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சீட்டு கட்டும் முன்பு கடையின் பாரம்பரியம், நம்பகத்தன்மையைக் கணக்கில் கொள்ளுவது அவசியம்.
* நகைகளை மெஷின்களில் உற்பத்தி செய்து தருவதால், பிரில்லியன்ட் கட்-ல் 30% வரை சேதாரம் குறைவதால் பணமும் மிச்சப்படுகிறது. * கைவினை நகைகளைவிட 50% லேசானதாகவும், வலிமையானதாகவும் பிரில்லியண்ட் கட் நகைகள் உள்ளன. * நோய்களை உருவாக்கும் கேடிஎம் (KDM) துளியும் இல்லாமல் பிரில்லியண்ட் கட் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. இவை BIS ஹால்மார்க் நகைகள் என்பதால் எவ்வித தயக்கமும் இன்றி நகைகளை வாங்கலாம். * பிரில்லியண்ட் கட்-ல் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய டிசைன்களை ஆர்டர் செய்தும் பெற்றுக்கொள்ளலாம்.