• கறுப்பு மஞ்சள் தெரியுமா… அதன் பலன்கள் என்னென்ன?

    பெரும்பாலும் இந்த கறுப்பு மஞ்சள் மருத்துவ குணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. கறுப்பு மஞ்சளை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம். 1 min


    கறுப்பு மஞ்சள்

    தமிழர்கள் தங்களது உணவுகளில் தவறாது பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று மஞ்சள். அந்த மஞ்சள் உணவுப் பொருள்களில் மட்டுமின்றி கிருமி நாசினியாகவும், நாட்டு வைத்தியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மஞ்சள் என்றதும் மஞ்சள் நிறம்தான் நம்முடைய நினைவுக்கு வரும். ஆனால், கறுப்பு மஞ்சள் பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? கறுப்பு மஞ்சள் என்ற ஒன்று இருப்பது பலருக்கும் தெரியாது. இது இஞ்சியின் குடும்ப வகையைச் சேர்ந்தது. பெரும்பாலும் இந்த கறுப்பு மஞ்சள் மருத்துவ குணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. கறுப்பு மஞ்சளை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

    கறுப்பு மஞ்சள்
    கறுப்பு மஞ்சள்

    கறுப்பு மஞ்சள் வலி நிவாரணியாக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பல் வலி, சொறி, வயிற்றுப் பிரச்னைகள் மற்றும் கீல் வாதம் ஆகியவற்றுக்கு இந்த கறுப்பு மஞ்சள் மிகச்சிறந்த நிவாரணி. ஆனால், இதனை மிகவும் கவனமாக குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கறுப்பு மஞ்சள் அதிகம் உதவுகிறது. செரிமானப் பிரச்னைகளைப் போக்கவும் கல்லீரல் பிரச்னைகளை சரி செய்யவும் இந்த கறுப்பு மஞ்சள் உதவுகிறது. உடலில் இன்சுலின் அதிகளவு சுரப்பதையும் கட்டுப்படுத்துகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும் இந்த கறுப்பு மஞ்சளை பயன்படுத்தலாம்.

    கறுப்பு மஞ்சள்
    கறுப்பு மஞ்சள்

    கறுப்பு மஞ்சளானது மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆக பயன்படுகிறது. இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

    கறுப்பு மஞ்சளில் உள்ள Curcuma caesia நுரையீரலை பலப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் மூச்சுக்குழல் அழற்சி, நிமோனியா மற்றும் ஆஸ்துமாபோன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது.

    தோல் அரிப்புத் தன்மை உடையவர்கள் இந்த கறுப்பு மஞ்சளை அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவினால் அரிப்பு குணமாகும்.

    கறுப்பு மஞ்சள் மிகவும் அரிதாகக் கிடைக்கும் ஒருவகை மூலிகையாகும். இதனை உரித்து சிறு துண்டுகளாக்கி முட்டைக்கோஸ், எலுமிச்சை, வெள்ளரிக்காய் சேர்த்து காலை உணவுடன் எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் அதிகமாகும்.

    Also Read: Village Cooking Channel: இன்டர்நெட் வசதியே இல்லாத ஊரிலிருந்து யூ-டியூப் டைமண்ட் பட்டன் – வில்லேஜ் குக்கிங் சேனலின் கதை!


    Like it? Share with your friends!

    450

    What's Your Reaction?

    lol lol
    12
    lol
    love love
    8
    love
    omg omg
    40
    omg
    hate hate
    8
    hate

    Ram Sankar

    0 Comments

    Leave a Reply

  • Choose A Format
    Personality quiz
    Series of questions that intends to reveal something about the personality
    Trivia quiz
    Series of questions with right and wrong answers that intends to check knowledge
    Poll
    Voting to make decisions or determine opinions
    Story
    Formatted Text with Embeds and Visuals
    List
    The Classic Internet Listicles
    Countdown
    The Classic Internet Countdowns
    Open List
    Submit your own item and vote up for the best submission
    Ranked List
    Upvote or downvote to decide the best list item
    Meme
    Upload your own images to make custom memes
    Video
    Youtube and Vimeo Embeds
    Audio
    Soundcloud or Mixcloud Embeds
    Image
    Photo or GIF
    Gif
    GIF format
    கோலிவுட் முன்னணி ஹீரோக்களின் மாஸ் கேமியோக்கள்! இந்தியாவின் அழகான ஆறுகளும் படகு சவாரிகளும்… இதையெல்லாம் மிஸ் பண்ணீடாதீங்க ஏர்போர்ட்டே இல்லாத உலகின் 5 நாடுகள்! அட குல்பியில் இத்தனை வகைகளா? தமிழ் நடிகைகளின் க்யூட் Vacation Clicks!