ஒவ்வொரு நாளும் சோஷியல் மீடியாக்களில் மில்லியன் கணக்கான மக்கள் தாங்கள் எடுத்த செல்ஃபிக்களைப் பதிவிடுகின்றனர். அதிகமாக கிடைக்கும் லைக்குக்கு ஆசைப்பட்டு தங்களின் ஒவ்வொரு செயலையும் செல்ஃபியாக போஸ்ட் செய்யும் நபர்களும் ஆபத்துகளின் விளிம்புகளுக்குச் சென்று செல்ஃபி எடுக்கும் நபர்களும் உண்டு. அப்படி அவர்கள் போஸ்ட் செய்யும் செல்ஃபிக்களை வைத்து அவர்களின் ஆளுமையை மதிப்பிடலாம். இதைப்பற்றி ஆய்வுகள் எல்லாம் கூட வந்திருக்கிறது. சரி.. நம்முடைய செல்ஃபி போஸ்கள் நம்மைப் பற்றி என்ன சொல்லுகின்றன என்பதைப் பார்க்கலாமா?
Also Read : மிஸ் யூனிவர்ஸில் 4-ம் இடம் பிடித்த `மிஸ் இந்தியா’ ஆட்லின் கேஸ்டலினோ – யார் இவர்?
-
1 டால் மேன் செல்ஃபி
உயரமான ஆண்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்களாகவும் கம்பீரமானவர்களாகவும் இருப்பதால் அவர்கள் பெரும்பாலும் செல்ஃபிக்களை கீழ் இருந்து எடுக்கின்றனர் என்கின்றன ஆய்வுகள். இன்னும் சுவார்ஸ்யமான விஷயம் என்னவென்றால், இன்ஸ்டாகிராமில் இருப்பதைவிட ஆண்கள் டிண்டரில் பதிவிடும் செல்ஃபிக்கள் அதிகம் கவர்ச்சிதன்மை உள்ளவையாக இருக்கின்றன என்று கூறப்படுகிறது. டேட்டிங்கை கவனத்தில் கொண்டு கீழிலிருந்து மேலாக செல்ஃபிக்கள் எடுக்கப்படுகின்றன. இது ஆற்றல் மற்றும் ஆதிக்கத் தன்மையை வெளிப்படுத்துகிறது.
-
2 இடது கண்ணம் செல்ஃபி
இடது அல்லது வலது கண்ணம் - இவற்றில் எந்தக் கண்ணத்தை அதிகம் காட்டி செல்ஃபி எடுக்கிறார்கள் என்று எண்ணி பார்த்தால் இடது கண்ணத்தைதான் அதிகம் காட்டி செல்ஃபி எடுக்கின்றனர். இதற்கான காரணம் மிகவும் சுவாரஸ்யமானது. இடது கண்ணம் மிகவும் கவர்ச்சிகரமாகவும் உணர்ச்சிகளை சிறப்பாக கம்யூனிகேட் செய்வதாகவும் கருதப்படுகிறது என்கிறது ஆய்வு. நீங்கள் அடுத்த முறை செல்ஃபி எடுக்கும்போது இதனை நினைவுபடுத்திப் பாருங்கள்.
-
3 டாப் ஆங்கிள் செல்ஃபி
நீங்கள் மேலே இருந்து செல்ஃபி எடுக்கும் பெண்ணாக இருந்தால் உங்களது பெண்மையை வெளிப்படுத்த முயற்சிக்கலாம் என்கிறது ஆய்வு. பெண்கள் பெரும்பாலும் மேலே இருந்து படங்களை எடுத்துக்கொள்கின்றனர். இது ஆண்கள் கீழே இருந்து படங்களை எடுத்துக்கொள்வதற்கு நேர் எதிரானது. மேலே இருந்து செல்ஃபி எடுப்பதன் மூலம் தாங்கள் கட்டையானவர்கள் மட்டுமல்ல உண்மையுள்ளவர்களாகவும் அழகாகவும் இருப்பதை வெளிக்காட்ட முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
-
4 லொகேஷன் செல்ஃபி
செல்ஃபிக்கள் பெரும்பாலும் நம்முடைய மனநிலையையும் மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைக்கும் ஜட்ஜ்மென்டையும் குறிக்கின்றன. இயற்கையான செல்ஃபி அல்லது அன்றாடம் நாம் இருக்கும் சூழ்நிலைகளில் செல்ஃபி எடுத்து வெளியிடவில்லை என்றால் நாம் ஒரு உண்மையான நபராக கருதப்படலாம் என்கிறது ஆய்வு. நன்றாக ஓய்வெடுக்கும் சூழலில் அல்லது நல்ல பொழுதை அனுபவிக்கும் சூழலில் நீங்கள் செல்ஃபி எடுத்து வெளியிட்டால் உங்களது ஆளுமைப் பற்றி மற்றவர்கள் மத்தியில் நல்ல எண்ணம் ஏற்படக்கூடும்.
-
5 டக் ஃபேஸ் செல்ஃபி
பதட்டமான மற்றும் மோசமான மனநிலையில் இருப்பவர்களுடன் தொடர்புடையது இந்த நியூரோடிசிஸம் பிரச்னை. இந்த நியூரோடிக் பிரச்னையுடன் தொடர்புடையவர்கள் `duck face' செல்ஃபியை எடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அவர்கள் தனியாக செல்ஃபியை எடுக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இது முழுவதும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற நிச்சயம் இல்லை என்றாலும் `duck face' செல்ஃபி எடுப்பவர்கள் இதை மனதில் வைத்திருப்பது முக்கியமானது.
-
6 பப்ளிக் ப்ளேஸ் செல்ஃபி
வீட்டைப் போன்ற ப்ரைவேட் இடங்களில் குறைவான செல்ஃபிக்களையும் நீங்கள் இருக்கும் பொது இடங்களில் அதிகமான செல்ஃபிக்களையும் எடுத்துக்கொண்டால் மனசாட்சி அதிகம் உள்ள நபராக நீங்கள் கருதப்படலாம். duck face' செல்ஃபி அல்லது ஃபோட்டோஷாப் பயன்படுத்தாமல் புகைப்படத்தை போஸ்ட் செய்தால் நீங்கள் கடின உழைப்பாளியாகவும் தகவல் மற்றும் செயல்பாடுகளில் தெளிவான நபராகவும் ஒழுக்கமானவராகவும் இருப்பதைக் குறிக்கிறது.
-
7 கான்ஃபிடன்ட் செல்ஃபி
கேமராவுக்கு நேராக கண்களை வைத்து செல்ஃபி எடுத்துக்கொள்ளும் நபராக நீங்கள் இருந்தால் பாஸிட்டிவ் வைப்ஸ் உடையவராகவும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் நபராகவும் பிறரை நேசிப்பவராகவும் நம்பிக்கை உடையவராகவும் இருப்பீர்கள் என்கிறது ஆய்வு.
-
8 ஸ்மைல் செல்ஃபி
புன்னகையுடன் செல்ஃபி எடுக்கும் நபராக இருந்தால் நீங்கள் ஓப்பன் மைன்ட் பெர்சனாக கருதப்படலாம். நீங்கள் சிறந்த படைப்பாற்றல் மிக்கவராகவும் ரிஸ்க் எடுக்கும் நபராகவும் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
இப்போ சொல்லுங்க நீங்க வழக்கமா செல்ஃபி எடுக்கும்போது எந்த போஸ் கொடுப்பீங்க?
0 Comments