வீகன் நண்பர்களே மீட் ஃபுட்டுக்கு மாற்றா எத்தனையோ உணவுகள் உலகம் முழுக்க எடுத்துக்கிறாங்க.. அப்படி இறைச்சி உணவுக்கு மாற்றான 5 உணவு வகைகள் பத்திதான் நாம பார்க்கப்போறோம்.
வீகன்
வீகன் உணவு வகைகளுக்கான வரவேற்பும் அந்த உணவு முறைக்கு மாறுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீகன் உணவு முறையில் இறைச்சி உணவுக்கு மாற்றாக பல உணவுகளை முன்வைத்திருக்கிறார்கள். அப்படியான 6 உணவு வகைகளைப் பற்றித்தான் நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
Tofu, Tempeh, Seitan மற்றும் TVP

Tofu, Tempeh, Seitan ஆகியவை சோயா பீன்ஸிலிருந்து பெறப்படும் ஒருவகையான உணவுப் பொருளாகும். அதேபோல், TVP என்பது கோதுமையில் இருந்து கிடைக்கப்பெறும் ஒருவகையான பசையாகும். இறைச்சிகளால் செய்யப்படும் எந்தவொரு டிஷ்ஷிலும் இறைச்சிக்குப் பதிலாக இதை நீங்கள் மாற்றாகப் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக Tofu-வை வைத்து கிரிஸ்பி Tofu, நக்கட்ஸ், மொராக்கன் கட்லட் உள்ளிட்டவைகளைச் செய்து பிரமாதப்படுத்தலாம். மீட் பால்ஸ் போன்ற வகைகளுக்கு Tempeh பெஸ்ட் சாய்ஸ். TVP என்பது எல்லா வகையிலான அளவுகளிலும் வடிவங்களிலும் கிடைக்கும் என்பதால், அது இறைச்சிக்கு பெர்ஃபெக்டான ஆல்டர்நேட்டிவாக நீங்கள் பயன்படுத்த முடியும்.
காளான்

காளான் வகைகள் இறைச்சியைப் போலவே Texture கொண்டிருப்பதால், அதைப் பயன்படுத்தி பெரும்பாலான நான்-வெஜ் டிஷ்களை வெஜ்ஜாக ரெடி பண்ண முடியும். குறிப்பாக, cremini அல்லது Portobello வகை காளான்கள் இறைச்சியைப் போன்ற சுவையையும் கொண்டவை என்பது கூடுதல் சிறப்பு. காளான்களைப் பயன்படுத்தி செய்யப்படும் வீகன் பர்கர், பிளாக் பெப்பர் ஃப்ரை போன்றவை தனிச்சுவை கொண்டவை.
பலாக்காய் (Jackfruit)

முக்கனிகளில் ஒன்றான பலாபழம் காயாக இருக்கும்போது சமையலில் பயன்படுத்தியிருக்கிறீர்களா… இல்லை என்றால் ஒருமுறை பயன்படுத்திப் பாருங்கள். இறைச்சிக்கு சரியான மாற்றாக பலாக்காயைச் சொல்லலாம். கேரளாவில் இன்றளவும் பலாக்காயை வைத்து பல டிஷ்களைச் செய்து அசத்துகிறார்கள். சிக்கன், பன்றி இறைச்சி, பீஃப் போன்றவற்றைச் செய்யும் பல டிஷ்களை பலாக்காயை வைத்து செய்யலாம். barbecue சாண்ட்விச், Stir-fries உள்ளிட்டவைகளுக்கு பெஸ்ட் சாய்ஸ்.
பருப்பு வகைகள்

வீகனின் ஆரம்ப காலம் தொட்டே இறைச்சிக்கு சரியான மாற்றாக பருப்பு வகைகளைச் சொல்லலாம். விலை குறைவு என்பதோடு, பச்சை, கருப்பு, சிவப்பு என பல்வேறு நிறங்களில் கிடைக்கும் இவற்றை விரைவாக சமைத்துவிட முடியும். பர்கர் வகைகளில் பயன்படுத்தப்படும் Patty வகைகளைப் பருப்புகளால் செய்து இறைச்சிக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியும். அதேபோல், Taco வகைகளிலும் இறைச்சிக்கு பெஸ்ட் ரீப்ளேஸ்மெண்டாக நமக்குப் பிடித்த பருப்பு வகைகளைப் பயன்படுத்தலாம்.
காலிஃப்ளவர் – உருளைக்கிழங்கு – பீன்ஸ்

காலிஃப்ளவர் பூவின் இயல்பான சுவை இறைச்சிக்கு சூப்பர் ரிப்ளேஸ்மெண்டாக அதை நிலைநிறுத்துகிறது. சிக்கன் மஞ்சூரியன் போலவே நம்மூர் ஹோட்டல்களில் காலிஃப்ளவர் மஞ்சூரியன் இருப்பதை அறிந்திருப்போம். இது சொல்லிவிடும் காலிஃப்ளவரின் பாப்புலாரிட்டியை. அதேபோல், Patty வகைகளுக்கு உருளைக்கிழங்கு பெஸ்ட் சாய்ஸ். க்ரீமி பொட்டேட்டோ, சீஸ் பொட்டேட்டோ போன்றவை வீகன் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமான டிஷ்கள். பீன்ஸ் வகைகளும் அதன் பருப்பு வகைகளும் இறைச்சிகள் அளிக்கும் புரோட்டீன் சத்துகள் நிறைந்தவை.
Also Read – ஹலோ Foodies… இந்த உணவுகள்லாம் எந்த ஏரியாவைச் சேர்ந்ததுனு கண்டுபிடிக்க முடியுமா?
0 Comments