பிரியாணிக்கான இந்தியர்களின் காதலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. திருமணம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்கள் முதல் நண்பர்கள், குடும்பங்களின் கெட் டுகெதர் வரை தவறாமல் இடம்பெறும் ஒரு டிஷ் என்றால் அது பிரியாணிதான். பிரியாணியைப் பொறுத்தவரை உணவுப் பிரியர்களின் முதல் சாய்ஸ் ஹைதராபாத் பிரியாணிதான். ஆனால், சமீபகாலமாக அரேபிய உணவான மந்தி ரைஸ், ஹைதராபாத் பிரியாணிக்குக் கடும் போட்டி அளித்து வருகிறது.
மந்தி பிரியாணி or மந்தி ரைஸ்
ஏமன் பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்த டிஷ், உணவுப் பிரியர்களிடையே பிரபலமாக முக்கியமான காரணம் பிரியாணியைப் போன்ற இதன் புதுவிதமான சுவையும், வாசனையும்தான். தரைக்குக் கீழே குழி தோண்டி, அதில் தீயிட்டு அதன்மூலம் குழி வடிவிலான பாத்திரத்தை இதன் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். அரபு நாடுகளில் பெரும்பாலான வீடுகளில் இதற்காகவே Tandoor என்ற அந்தக் குழி இருக்கும். குழி தோண்டப்பட்டு அதன் ஓரங்கள் அனைத்தும் களிமண்ணால் பூசப்பட்டிருக்கும். அதனுள் கரிகட்டைகள் போடப்பட்டு, கனன்று கொண்டிருக்கும் அதன் சூட்டில் சமைப்பார்கள். பிரியாணி அரிசி, மசாலா கலவைகளுக்கு மேல் தேவையான இறைச்சியை வைத்து பாத்திரத்தை சீல் செய்து விடுகிறார்கள். சுமார் 4 மணி நேரம் இப்படி மென்மையான சூட்டில் வெந்தபிறகு இறக்கி வைக்கப்படுகிறது. இறைச்சி, மசலா கலவையின் ஜூஸியான சாறு சோற்றில் இறங்க, அதன் சுவையே தனிதான் என்கிறார்கள் உணவுப் பிரியர்கள். மந்தி ரைஸ், மிளகாய்-தக்காளி சாறுகள் கலந்த ஒருவகையான Sahawek எனும் சாஸோடு சேர்ந்து பரிமாறப்படுகிறது.
இந்திய வெர்ஷன்
பிரியாணிக்கு கிரில்டு அல்லது தந்தூரி சிக்கன் பிரபலமான காம்பினேஷன். இந்த காம்பினேஷன் மீதான இந்தியர்களின் காதல்தான் மந்தி ரைஸ் பாப்புலராகக் காரணம். பிரியாணி ரைஸுக்கு மேலே கிரில்டு அல்லது தந்தூரி சிக்கனை வைத்து இந்திய வெர்ஷன் மந்தி ரைஸ் பரிமாறப்படுகிறது. இதுவே அதன் மீதான இந்தியர்களின் ஈர்ப்புக்குப் பிரதான காரணம் என்கிறார்கள். மந்தி ரைஸ், பாரம்பரியமாக பெரிய தட்டுகளில் உலர்ந்த பழங்கள், வறுத்த வெங்காய இதழ்கள், வெள்ளரி ஸ்லைஸ்களோடு மந்தி ரைஸ் பரிமாறப்படுமாம். பிரியாணிக்கு பிரபலமான ஹைதராபாத் ஓல்டு சிட்டியில் வந்திறக்கும் சுற்றுலா பயணிகளும் மந்தி ரைஸ் குறித்து விசாரித்து, அதை ருசிபார்த்து வருகிறார்கள். தமிழகத்தில் குறிப்பாக சென்னையிலும் Food Lovers-ம் பேவரைட் உணவுகள் பட்டியலில் முக்கியமான இடத்தை மந்தி ரைஸ் பிடித்திருக்கிறது. வாடிக்கையாளர்களின் வரவேற்புக்கேற்ப சென்னையின் பல உணவகங்கள் மந்தி ரைஸைத் தங்களது மெனுவில் சேர்த்திருக்கிறார்கள்.
நீங்க மந்தி ரைஸ் டேஸ்ட் பண்ணியிருக்கீங்களா… உங்கள் அனுபவத்தை கமெண்டில் பகிர்ந்துக்கோங்க மக்களே!
Also Read – ஹலோ Foodies… இந்த உணவுகள்லாம் எந்த ஏரியாவைச் சேர்ந்ததுனு கண்டுபிடிக்க முடியுமா?