Black Alkaline Water

Black Alkaline Water தெரியுமா… கறுப்பு நிறமான இந்தக் குடிநீரில் என்ன பலன்?

மனித உடல் 60% நீரால் ஆனது. குடிநீர் மனித வாழ்வின் இன்றியமையாத அம்சம். ஆனால், இவ்வளவு முக்கியமான குடிநீர் குறித்து நம்மில் பெரும்பாலானோர் சிந்திப்பது கூட இல்லை. ஆய்வாளர்களைப் பொறுத்தவரை நாம் அருந்தும் குடிநீர், குடிப்பதற்கு உகந்தது இல்லை என்கிறார்கள். அதுவும், சில ஆர்.ஓ சுத்திகரிப்பான்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வெளிவரும் குடிநீரில், இயற்கையாகவே இருக்கும் தாது உப்புக்கள் நீக்கப்பட்டு விடுகின்றன. மேலும், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குடிநீரின் அமில – காரத்தன்மையை சுத்திகரிப்பான்கள் குறைத்துவிடுகின்றன. அவற்றைக் குடிப்பதால் உடலில் அமிலத் தன்மை அதிகரிக்கிறது. கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரும்பாலானோர் சரிவிகித உணவுகளை எடுத்து வந்தாலும், முக்கியமான அம்சமான குடிநீரைப் பற்றி கண்டுகொள்வதில்லை.

Black Alkaline Water
Black Alkaline Water

ஆனால், ஃபிட்னெஸ்ஸில் அதிக அக்கறை கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை ஸ்ருதி ஹாசன் போன்றோர் பி.ஹெச் லெவல் எனப்படும் அமில – காரத்தன்மை அதிகம் கொண்ட கறுப்பு நிறமான Black Alkaline Water-ஐ குடிநீராகப் பயன்படுத்துகிறார்கள். அதென்ன பிளாக் அல்கெலைன் வாட்டர் என்கிறீர்களா?

Black Alkaline Water

பொதுவாக நாம் பருகும் நீரின் அமில – காரத்தன்மையானது 7 என்ற அளவில் இருக்கும். ஆனால், இந்த கறுப்பு நிற குடிநீரின் பி.ஹெச் லெவல் என்பது 8 மேல் இருக்கும். உடலில் அமிலத் தன்மை அதிகரிப்பதை இது தடுக்கும். இதனால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலின் பாகங்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும். இந்த நீரை உடல் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் என்பதால், நீண்டநேரம் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கும் வல்லமை கொண்டது. உடலின் பாகங்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் சர்க்குலேட்டரி சிஸ்டம் எனப்படும் காற்றோட்ட அமைப்பு சீராக இயங்க இது உதவும். இதனால், புத்துணர்ச்சியாக இருக்க வழிவகுக்கிறது. அதேபோல், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் உள்ளிட்ட தாதுக்கள் செறிவும் இதில் அதிகம். ஃப்ரீ ரேடிக்கல்ஸ் எனப்படும் உடலின் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் அணுக்கள் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், வயதான தோற்றம் ஏற்படுவதையும் இது தடுக்கிறது.

Black Alkaline Water
Black Alkaline Water

நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு அதிகம் இருப்பவர்கள் மற்றும் ரத்தத்தில் அதிக கொழுப்பு சத்து கொண்டிருப்பவர்கள் இந்தக் குடிநீரைப் பருகுவது நன்மை பயக்கும். Evidence Based Complementary and Alternative Medicine என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையின்படி, இந்த கறுப்பு நிறக் குடிநீரைப் பருகுவதன் மூலம், உடலின் முக்கியமான பாகங்களின் செயல்பாடுகள் சீராக இருக்கும் என்பதால், நீண்டநாள் உயிர்வாழ முடியும்.

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட EvocusBlack Alkaline Water, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் பி.ஹெச் வேல்யூ 8.5 என்றும், 70-க்கும் அதிகமான தாதுக்களை அது கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்தக் குடிநீரில் இருக்கும் தாதுக்களாலேயே அது கறுப்பு நிறத்தைக் கொண்டிருக்கிறது. இதன் விலைதான் கொஞ்சம் அதிகம். அரை லிட்டர் அளவு கொண்ட 6 பாட்டில்களின் விலை ரூ.500-க்கும் மேல் என்கிறார்கள்.

Also Read : Stroming Operation: தமிழகத்தில் ஒரே இரவில் கைது செய்யப்பட்ட 450 ரவுடிகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top