Depressed

`நீங்கள் சோம்பேறி அல்ல, மன அழுத்தத்தில் இருக்கலாம்’ – 4 அறிகுறிகள்!

வாழ்க்கையில் அடுத்து என்ன என்பது குறித்து எந்த ஐடியாவும் இல்லாமல் தேக்கமடைந்துவிட்டதாக ஃபீல் பண்ணுகிறீர்களா… எந்த வேலையும் செய்ய முடியாமல், எதிலும் கவனம் செலுத்த முடியாமல் சும்மாவே பொழுதைக் கழிக்கிறீர்களா… வாழ்வில் தொடர்ச்சியாக அளவுக்கு மீறி வேலை செய்ய வேண்டிய சூழலில் இருக்கும் எல்லோரும் எதிர்க்கொள்ளும் வழக்கமான நிலைதான் இது. என்றாலும், நாம் சோம்பேறித் தனமாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில் மட்டுமே முழுமையாக இருந்துவிடாதீர்கள். இப்படிப்பட்ட சூழல், நீங்கள் தீவிர மன அழுத்தத்தில் இருப்பதன் அறிகுறியாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

நீங்கள் சோம்பேறியாக இல்லை, மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்பதற்கான நான்கு அறிகுறிகள்!

  1. சிறை

சோம்பேறித்தனத்துக்கு அடிப்படையில் அதிகப்படியான உழைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். அதிலிருந்து மீள ஏகப்பட்ட வழிகள் இருக்கின்றன. செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு செய்வது, மோட்டிவேஷனல் ஸ்பீச்களைக் கேட்பது, நமக்கு நாமே இலக்குகளை நிர்ணயிப்பது என பல வழிகளில் அதிலிருந்து மீளலாம். ஆனால், மன அழுத்தம் அப்படியல்ல. மன அழுத்தத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், மேற்கூறிய வழிகள் உங்களுக்கு உதவாது. அதற்கு மருத்துவரின் உதவியோடு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சையின் மூலம் மட்டுமே மன அழுத்தத்தில் இருந்து மீள முடியும்.

Depressed

மன அழுத்தம் என்பது மனநலனைப் பாதிக்கக் கூடிய மிகப்பெரிய பிரச்னை. அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறார்கள் வல்லுநர்கள். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு அந்த பாதிப்பு வாழ்நாள் முழுவதும்கூட இருக்கும் என்கிறார்கள். தொடர்ச்சியான சிகிச்சையின் மூலம் மட்டுமே அதிலிருந்து வெளிவர முடியும் என்பது மனநல மருத்துவர்கள் சொல்லும் அட்வைஸ்

  1. மகிழ்ச்சி

நீங்கள் சோம்பேறித்தனமாக மட்டுமே இல்லை, அதற்கும் மேலான ஒரு பிரச்னையில் சிக்கித் தவிக்கிறீர்கள் என்பதற்கு மற்றொரு உதாரணம், அடிக்கடி சொல்ல முடியாத அளவுக்குத் தனிமையில் வாடுவது, சோகம், நம்பிக்கையின்மை போன்றவை. நம்பிக்கை இல்லாமல் இருப்பது மட்டுமல்ல, காரணம் புரியாத சில விஷயங்களால் உங்களை நீங்களே தாழ்த்தி எடை போட்டுக் கொண்டிருப்பீர்கள் அல்லது முற்றிலும் உடைந்து போயிருப்பீர்கள். உங்களுக்கு நீங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் நிலைமை அங்கிருக்காது.

Depressed

குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பது, உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபட முடியாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். நீங்கள் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் போது உங்களுக்கு மிகவும் பிடித்தவர்களுடன் கூட நேரம் செலவிடமுடியாத நிலையும் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

  1. ஈடுபாடு
Depressed

அமெரிக்க மனநல மருத்துவர்கள் அசோசியேஷனின் கூற்றுப்படி, `எதிலும் ஈபாடு இல்லாமல் இருப்பது தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதற்காக அறிகுறி’ என்கிறார்கள். இதனால், நீங்கள் சோம்பேறித்தனம் என நினைத்துக் கொண்டிருக்கும்போது, எதிலுமே ஈடுபாடு காட்டமுடியாத நிலை ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது. இதுபோன்று தீவிர மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், உலகத்தில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் தனிமையில் எதிலும் ஆர்வம் காட்டாமல் சும்மாவே பொழுதைக் கழிக்க விரும்புவார்கள்.

  1. வேலை

சோம்பேறித்தனம் என்பது கையை மீறிப் போய்விட்டதா… உங்களால் நிர்வகிக்க முடியாத அளவுக்கு பிரச்னைகளை ஏற்படுத்திவிட்டதா… இதனால், பள்ளி, கல்லூரி, பணிபுரியும் இடம் மற்றும் பெர்சனலாகவும் பிரச்னைகள் உண்டாகின்றனவா? – இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் சொல்லும் பதில்தான் மன அழுத்தத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா இல்லையா என்பதை முடிவு செய்யும். `சோம்பேறித்தனம்’ என நீங்கள் நினைப்பது உங்கள் தினசரி வாழ்க்கையில் இடையூறு ஏற்படுத்தியது என்றால், நிச்சயம் அதைவிட பெரிய பிரச்னையில் நீங்கள் சிக்கியிருக்கிறீர்கள் என்று பொருள்.

சோம்பேறி என எண்ணிக்கொண்டிருக்கும் பிரச்னை நீங்கள் நினைப்பதை விட பெரிது என கண்டுகொண்டால், தயங்காமல் மருத்துவரின் உதவியை உடனடியாக நாடுங்கள். தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து மீள ஒரே வழி சிகிச்சைதான் என்பது மனநல நிபுணர்கள் கொடுக்கும் ஸ்டிரிக்ட் அட்வைஸ்.

Also Read – எப்போதும் மகிழ்ச்சியா இருக்கணுமா? – அப்போ இந்த 7 வழிகளை ஃபாலோ பண்ணுங்க

2 thoughts on “`நீங்கள் சோம்பேறி அல்ல, மன அழுத்தத்தில் இருக்கலாம்’ – 4 அறிகுறிகள்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top