Face Fat

முகத்தில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளைக் குறைக்கலாம் வாங்க – 5 வழிகள்!

முகத்தில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளைக் குறைப்பது சாதாரண விஷயமில்லை. அதற்கென நாம் நேரத்தை ஒதுக்குவதோடு, சரியான உணவு வகைகளையும் எடுத்து கொள்வது அவசியம். அதேபோல், சில பயிற்சி முறைகளையும் மேற்கொள்வதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளைக் குறைக்கலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

முகத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க 5 வழிகள்!

பேசியல் எக்ஸர்சைஸ்

முகத்துக்காக மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் முகத்தின் பொலிவைக் கூட்டவும், தசை வலிமையை அதிகரிக்கவும் பயன்படும். தொடர்ச்சியான பயிற்சிகள் மூலம் முகத்தில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளைக் குறைக்க முடியும். சில பொதுவான பயிற்சிகளைப் பற்றி பார்க்கலாம்.

  • லிப் புல் எக்ஸர்சைஸ்

தலையை நேராக வைத்துக் கொண்டு, உங்கள் கீழ் உதடை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் மேல்நோக்கி உயர்த்துங்கள். அப்படியே 10 -15 விநாடிகள் வைத்திருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்புங்கள். இதையே குறைந்தது 15 முறை செய்து பாருங்கள். இந்த பயிற்சி தாடை எலும்புகளை வலுவாக்க உதவும்.

  • சின் லிஃப்ட் எக்ஸர்சைஸ்

நேராக நின்றுகொண்டு தலையை மட்டும் பின்புறமாக எவ்வளவு தூரம் தலைகீழாக நகர்த்த முடியுமோ அவ்வளவு தூரம் நகர்த்துங்கள். தலை தொங்கும் அளவுக்கு செய்தபிறகு தாடைக்கு வேலைகொடுக்கும் வகையில் உங்கள் உதடுகளை முத்தம் கொடுப்பது போல் குவியுங்கள். இந்த பொஷிசனிலேயே 15 விநாடிகள் நிலைநிறுத்துங்கள். இதேபோல், ஒரு சின்ன இடைவெளி விட்டு 10 முறை செய்து வாருங்கள். இந்தப் பயிற்சி தாடை எலும்புகளுக்கும் கன்னத்தில் இருக்கும் தசைகளுக்கும் வலு சேர்க்கும்.

  • ஃபிஷ் லிப் எக்ஸர்சைஸ்

தலையை நேராக வைத்துக் கொண்டு உங்கள் மேல், கீழ் என இரண்டு உதடுகளையும் வாய்க்குள் இழுத்துக் கொண்டு மீன் போல் வைத்துக்கொள்ளுங்கள். இதை அப்படியே 15 – 20 விநாடிகள் வைத்திருக்கவும். இந்த எக்ஸர்சைஸை 20 முறை செய்து வாருங்கள். தாடை எலும்புகளுக்கும், கன்னத் தசைகளுக்கும் இந்த பயிற்சி வலிமையைக் கொடுக்கும்.

Face fat

தண்ணீர் நிறைய குடியுங்கள்

தண்ணீர் நிறைய குடிப்பது பொதுவாகவே உங்கள் ஓவர் ஆல் ஹெல்த்துக்கு அவசியமான ஒன்று. குறிப்பாக உங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீங்கள் குறைக்க நினைத்தால், நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் எடுத்துகொள்ளும் உணவைக் குறைப்பதில் தண்ணீர் குடிப்பது முக்கியமான பங்கு வகிப்பதாகச் சொல்கிறது ஆய்வு ஒன்று. உணவுக்கு முன்பாக சிறிதளவு தண்ணீர் குடிப்பது வெயிட் லாஸிலும் உதவும். முகத்தில் இருக்கும் கூடுதல் தசைகள் குறைப்பிலும் இது உதவுகிறது.

ஆல்கஹாலுக்கு நோ சொல்லுங்கள்

அளவுக்கு அதிகமான மது குடிப்பது உங்களுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணியாகும். முகத்தில் கொழுப்பு சேருவதற்கும் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உணர்வுக்கும் ஆல்கஹால்தான் முக்கியமான காரணம். அதிலிருக்கும் அதிகமான கலோரி உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. உடல் எடையைக் குறைக்கவும் முகத்தில் தேவையில்லாத கொழுப்பு சேர்வதைத் தடுக்கவும் ஆல்கஹாலுக்கு நோ சொல்லிப் பழகுங்கள்.

தூக்கம் ரொம்பவே முக்கியம் பாஸ்

சரியான அளவு தூக்கம் வெயிட் லாஸாக இருந்தாலும் சரி; முகத்தசை குறைப்புக்கும் சரி முக்கியமான ஃபேக்டர் என்பது மருத்துவர்களின் அட்வைஸ். தூக்கமின்மையால் மன அழுத்தத்துக்குக் காரணமான கோர்டிஸால் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இதனால், முகத்தில் கொழுப்பு சேர்வது அதிகரிப்பதோடு ஒட்டுமொத்தமாக உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம். தினசரி இரவு 8 மணி நேரத் தூக்கம் என்பது உடல் எடைக்குறைப்பிலும் முகத்தசை குறைப்பிலும் உதவக்கூடியது.

Face Fat

அவசியமான நார்ச்சத்து… தேவையில்லாத சோடியம்!

முகத்தில் இருக்கும் கொழுப்புகளைக் குறைக்க அதிகப்படியான நார்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பெரும்பாலான மருத்துவர்கள் கொடுக்கும் அட்வைஸ். காய்கறி, பழங்கள் உள்ளிட்ட நார்ச்சத்து மிகுந்த பொருட்கள் உங்களின் வெயிட்லாஸ் ஜர்னியிலும் உதவக் கூடும். தினசரி 25 – 38 கிராம் நார்ச்சத்து ரொம்பவே அவசியம். முகத்தில் இருக்கும் தசைகள் குறைப்பில் இது பங்காற்றுகிறது. அதேபோல், உங்கள் உணவில் அதிக சோடியம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சோடியம் அதிகம் கொண்டிருக்கும் உணவுகளால் முகத்தில் படியும் கொழுப்பின் அளவும் அதிகரிக்கும்.

Also Read – நீங்க போதுமான தண்ணீர் குடிக்கலை – எச்சரிக்கை செய்யும் 7 அறிகுறிகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top