ரத்த அழுத்த உயர்வு அல்லது குறைவாக இருப்பது என்பது இன்றைய நிலையில், 30 வயதைக் கடந்த பெரும்பாலானோர் சந்திக்கும் முக்கியமான பிரச்னை. இதற்கான சிகிச்சை முறைகள் ஒருபுறம் இருந்தாலும், நமது அன்றாடப் பழக்க வழக்கங்கள் சிலவற்றின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அப்படியான 5 பழக்க, வழக்கங்களைப் பற்றிதான் நாம இந்தக் கட்டுரைல பார்க்கப் போறோம்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும் 5 பழக்கங்கள்!
காபி
உங்களுக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருக்கிறது என்றால், நீங்கள் தினசரி காபி அருந்த வேண்டும் என்கிறார்கள். காபி அல்லது டீயில் இருக்கும் காஃபின் என்கிற வேதிப்பொருள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவுகிறது. எப்போதெல்லாம் மூச்சுவிட சிரமமோ அல்லது அசாதரணமாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் காபியோ, டீயோ அருந்துங்கள்.
பச்சிலை
பச்சிலையில் இருக்கும் Eugenol எண்ணெய் ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதில் முக்கியமான பங்காற்றுகிறது. துளசியில் இருக்கும் மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகள் குறைந்த ரத்த அழுத்தத்தை சரியான நிலைக்குக் கொண்டுவர உதவுகின்றன.
மோர்
வெயில் காலங்களில் மோர் குடிப்பது உடலில் இருக்கும் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள உதவும். அதேபோல், உடலில் ரத்த அழுத்தம் சீராக்குவதிலும் மோர் முக்கியமான பங்காற்றுகிறது. மோருடன் உப்பு, சீரகத் தூள் உள்ளிட்டவைகளைச் சேர்த்து பருகும்போது, ரத்த அழுத்தமும் சீராக இருக்க அது உதவும் என்கிறார்கள்.
எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சை ஜூஸ் அருந்துவது குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு நல்ல தீர்வை வழங்கும். உடலில் நீர்ச்சத்து குறைவதுதான், ரத்த அழுத்தம் பாதிக்கப்பட முக்கியமான காரணம். அந்த மாதிரியான சூழலில் திரவ உணவுகளை நாள் முழுதும் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
இஞ்சி
இஞ்சியை வாயில் போட்டு மெல்லுவது உங்கள் ரத்த அழுத்தத்தைச் சீராக பராமரிக்க உதவி செய்யும். அதேபோல், மிதமான சுடு நீரில் சீரகத்தைச் சேர்த்து அருந்துவது, பேரீச்சம்பழத்தைப் பாலோடு சேர்த்து எடுத்துக் கொள்வது, தக்காளி, திராட்சை, கேரட் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதும் உங்கள் ரத்த அழுத்தம் குறையாமல் பார்த்துக் கொள்ள முக்கியமான விஷயம்.
Also Read – உடல்நலத்தைக் கெடுக்கும் 7 பிரேக்பாஸ்ட் மிஸ்டேக்ஸ்!