தூக்கம் துக்கமாகிறதா… இந்த 5 ஐடியாக்கள் உங்களுக்கு உதவலாம்!

தினசரி இரவு நேரங்களில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா… உலகம் முழுவதும் தூக்கத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் அறிவியல்பூர்வமான 7 ஐடியாக்களைத்தான் நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

தூக்கம்

தூக்கம் என்பது எல்லாருக்கும் இயல்பாகவே வாய்ப்பதில்லை. சிலருக்கு அது வாழ்நாளின் துக்கமான சம்பவங்களும் இருக்கின்றன. இந்த பிரச்னைக்கு மருத்துவரீதியிலான சிகிச்சைகள் மூலம் தீர்வுகள் எடுத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். மொபைல் ஆப்-கள், இணைய வழித் தீர்வுகளை நாடுபவர்களும் உள்ளனர்.

அதேநேரம், உலக அளவில் பாரம்பரியமாக தூக்கத்தை மேம்படுத்த சில முறைகளைக் கடைபிடித்து வருகிறார்கள். அப்படியான, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட 5 முறைகளைப் பற்றி பார்ப்போமா?

அஸ்வகந்தா

Ashwagandha
Ashwagandha

இந்தியாவுக்கும் ஆயுர்வேதத்துக்குமான உறவு என்பது பல நூற்றாண்டுகள் பழமையானது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு அஸ்வகந்தா மூலிகையை நிவாரணமாகச் சொல்கிறது ஆயுர்வேதம். மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றை அஸ்வகந்தா குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான தூக்கத்துக்கு உதவுவதாகச் சொல்கிறார்கள். ’sleep latency’ எனப்படும் தூங்குவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை இது குறைப்பதாக 2020-ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சொல்கிறது. பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களிடையே ஆரோக்கியமான தூக்கத்தை அஸ்வகந்தா அதிகரிப்பதாகவும், மொத்தமாக ஆரோக்கிய வாழ்வு முறையையும் அளிப்பதாகவும் கூறுகிறார்கள்.

சீனாவின் Hot foot Soak

Hot foot Soak
Hot foot Soak

‘Pedicure’ ஸ்பாக்கள் அளிக்கும் சேவைகளின் இன்னொரு பயனை நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது. சீனாவில் தூக்கத்தை மேம்படுத்த வெதுவெதுப்பான நீரில் பாதங்களை நனைக்கும் ‘Hot foot Soak’ முறையைப் பயன்படுத்துகிறார்கள். தினமும் தூங்கச் செல்லும் முன்னர், இந்த முறையைச் செய்வதால் நல்ல பலன் கிடைப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

பாத் டப் அல்லது ஒரு பக்கெட்டில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு அத்தோடு, எப்சம் உப்பு, சருமத்துக்கு உகந்த லாவெண்டர் அல்லது ரோஜா எண்ணெய்கள், பழத்தின் தோல்கள், மேலும் சில மூலிகைச் செடிகளைப் போட்டு, அதில் உங்கள் பாதங்களை வைக்கலாம். இதன்மூலம், உடலின் முக்கிய ஆற்றல் அல்லது ‘qi’ குறைந்து, மனதை லேசாக்கும் என்று சீனர்கள் நம்புகிறார்கள்.

பின்லாந்தின் நீராவிக் குளியல்

sauna
sauna

இரவுநேர தூக்கத்துக்காக பின்லாந்தில் நீராவிக் குளியல் முறையை பரிந்துரை செய்கிறார்கள். மாலை நேரங்களில் எடுத்துக்கொள்ளப்படும் sauna எனப்படும் நீராவிக் குளியல் இரவு தூக்கத்துக்கு ரொம்பவே உதவுவதாகச் சொல்கிறார்கள். இதனால், உடல் வெப்பநிலை அதிகரித்து, அதன்மூலம் தசைகள் ரிலாக்ஸாகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். 2019-ல் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, sauna குளியல் எடுத்தவர்கள், இரண்டு மூன்று நாட்களில் அவர்களது தூக்கம் மேம்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. மாதத்துக்கு 5 முதல் 15 முறை sauna குளியல் எடுத்துக் கொண்டிருப்பவர்களின் மன ஆரோக்கியமும் மற்றவர்களை விட சிறப்பாக இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

ஜப்பானின் shikibuton

shikibuton
shikibuton

ஜப்பான் கலாசாரத்தில் வாழ்வியல் முறைகளுக்கு எத்தனையோ வழிகாட்டுதல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அப்படியாக, தூக்கத்துக்கு அவர்கள் பரிந்துரைப்பது ஜப்பானின் புகழ்பெற்ற shikibuton அல்லது ஜப்பானின் futon மெத்தைகளைத்தான். தரையில் இந்தவகை மெத்தைகளையும் தலையணைகளையும் பயன்படுத்து தூங்குவது உடல்நலனுக்கும் நல்லது என்கிறார்கள். பருத்தி இழைகள், கம்பளித் துணிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வகை மெத்தைகள், முதுகுப் பகுதிக்கு நல்ல சப்போர்ட் கொடுப்பதுடன், முதுகுத் தண்டுவடத்துக்கும் மென்மையைக் கொடுக்குமாம். இதனால், தூக்கம் ஆரோக்கியமானதாக இருக்கும் என்கிறார்கள்.

மத்திய மற்றும் தென்னமெரிக்க நாடுகளின் hammock முறை

 hammock
hammock

வொக்கேஷன்களில் தூளியில் ஆடுவதை ரசிப்பவரா நீங்கள்.. ஆனால், மத்திய மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் தூளி போன்ற hammock என்பது அங்குள்ள மக்கள் தினசரி தூங்கும் ஒரு முறை. நம்மூரில் குழந்தைகளைத் தொட்டிலில் ஆட்டும்போது அவை சீக்கிரமே தூங்கிவிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா… அதேதான் இதன் அடிப்படையும். பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களும் தொட்டில் போன்ற இந்த hammock-களில் தூங்கும்போது விரைவாகவே தூங்கிப் போகிறார்கள் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதேபோல், இவை தூங்கும் நேரத்தையும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Also Read – டிரெண்டாகும் `Adventure Honeymoon’ – புதுமணத் தம்பதிகளுக்கான 5 டிப்ஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top