`என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கபோல?!’ – சந்தோஷமாகவே இருந்தாலும் பலரையும் எரிச்சல் படுத்தக்கூடிய கேள்வி இதுதான். என்னதான் கோபத்துல இருப்பாங்கனு அவங்களுக்கே தெரியாத அளவுக்கு ஏதோ ஒரு சோகத்தில் இருப்பாங்க. சந்தோஷமா இருக்குறதுக்கு விஷயங்கள் இருக்குதோ இல்லையோ.. ஆனால், கவலைப்படுறதுக்கு எப்பவும் விஷயங்கள் இருந்துட்டே இருக்கும்னு புலம்புவாங்க. மகிழ்ச்சியா இருக்குறதுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விஷயம் தேவைப்படும். “நீங்கள் யார் என்பதை நீங்களே ஏற்றுக்கொள்வதன் வழியாக, நிபந்தனையில்லாமல் உங்களை ஏற்றுக்கொள்ளும் நண்பர்களின் வழியாக, உங்களது கனவுகளை நோக்கிய பயணத்தின் வழியாக”னு மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். ஆனால், எல்லோருக்கும் பொதுவாக மகிழ்ச்சியாக இருக்க சில பழக்க வழக்கங்கள் உதவலாம்ல! அதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம பார்க்கப் போறோம்.
Also Read : சிறுவர்களுக்குப் பிரத்யேக இன்ஸ்டாகிராம்… ஃபேஸ்புக்கின் திட்டம் எழுப்பும் கேள்விகள்!
-
1 சிரிங்க சிரிங்க சிரிச்சிட்டே இருங்க
சந்தோஷமா இருக்கும்போது சிரிப்போம். இல்லைனா, எதாவது ஜோக் யாராவது சொல்லும்போது சிரிப்போம். இனிமேல், அடிக்கடி சும்மா சிரிச்சுப் பாருங்க. அதுக்காக எப்பவுமே சிரிச்சிட்டே இருக்கனும்னு சொல்லல. ஆனால், நீங்க எப்போலாம் டல்லா ஃபீல் பண்றீங்களோ அப்போலாம் சிரிச்சுப் பாருங்க. அப்படி சிரிக்கிறது உங்களுக்கு ஒரு பாஸிட்டிவ் ஃபீல் குடுக்கும். அதுமட்டுமில்ல மூளை டோபமைனை நீங்க சிரிக்கும்போது வெளியிடும். நாளைல இருந்து தினமும் காலைல எழுந்துி கண்ணாடி பார்த்து சிரிங்க. அந்த நாள் எப்படி போகுதுனு அப்புறம் பாருங்க. என்ன டீல் ஓகேவா?!
-
2 உடற்பயிற்சி முக்கியம் பிகிலு
உடலுக்கு மட்டுமல்லாமல் மன அழுத்தத்தைப் போக்கவும் மீண்டும் மனசோர்வு ஏற்படாமல் இருக்கவும் உடற்பயிற்சி உதவியா இருக்கும். காலைல எழுந்து உடற்பயிற்சி செய்து பாருங்க செல்ஃப் கான்பிடன்ஸ் நமக்கு தானா வரும். அதுமட்டுமில்லாம கூடவே நிச்சயமா மகிழ்ச்சியும் அதிகரிக்கும்னு எக்ஸ்பர்ட்ஸ் சொல்றாங்க. நீங்க மிகப்பெரிய அளவில் உடற்பயிற்சியை கத்துக்கனும்னு அவசியம் இல்லை. ``இரவு சாப்பிட்டதுக்கு அப்புறமா ஒரு சிறிய நடை; வேடிக்கையான உங்களது செயல்களை மீண்டும் நினைவூட்டுவது; நடனமாடுவது” அப்டினு வழக்கப்படுத்திக்கோங்க. சோ, லெட்ஸ் ஸ்டார்ட்ஸ் நௌவ்.
-
3 இன்னும் ஏன்டா முழிச்சிட்டு இருக்க... தூங்குடா கைப்புள்ள
ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் இருக்க தூக்கம் இன்றியமையாதது. ஆனால், இன்றைக்கு பெரும்பான்மையானவங்க கிட்ட இருக்குற கெட்ட பழக்கங்கள்ல தூங்காம இருக்குறதும் ஒண்ணு. நிம்மதியா நல்லா தூங்கினாலே தேவையில்லாத மன இடர்பாடுகள் குறைந்து மகிழ்ச்சி தானா வரும். பெரியவர்களுக்கு 7 மணி முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமானது. `தூக்கம் வர்றதுக்கு என்னலாம் பண்ணலாம்!’னு யோசிக்கிறீங்களா? படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னாடி அமைதியாக இருக்க நேரத்தை ஒதுக்குங்க. குளிக்கிறது, படிக்கிறது அப்டினு ரிலாக்ஸிங்கான விஷயத்தைப் பண்ணுங்க. அதிகமா சாப்பிடுறதைக் குறைங்க. உங்களோட பெட்ரூம் இருட்டாகவும் குளிராகவும் அமைதியாகவும் வச்சுக்கோங்க. நிறைய முயற்சி பண்ணியும் உங்களுக்கு தூக்கம் வரலைனா, நிச்சயம் மருத்துவரோட உதவி உங்களுக்குத் தேவை.
-
4 அலார்ட் ஆறுமுகம் மாதிரி சாப்பிடாதிங்க!
உணவுத் தேர்வுகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஆனால், சில உணவுகள் உங்களது மனநிலையையும் பாதிக்கும். எடுத்துக்காட்டாக சொல்லனும்னா அதிகமாக ஃப்ரை் பண்ண உணவுகளைச் சாப்பிடுவது உங்களை டௌனாக ஃபீல் பண்ண வைக்கும். எனவே, அப்படியான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். உணவே மருந்து.
-
5 `என்னா மனுஷன்யா’ன்ற மாதிரி நன்றியோட இருங்க
நன்றியுணர்வோட இருப்பது நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியான உணர்வுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்னு ஆய்வுகளில் கண்டுபிடிச்சிருக்காங்களாம். உங்களோட நாளைப் பற்றி நீங்க நினைச்சுப் பார்க்கும்போது இனிமையான விஷயங்களை மட்டும் கவனிங்க. உங்களை நேசிப்பவர்களை மட்டும் நீங்க நினைச்சு பார்த்துக்கோங்க. உங்களை வெறுக்குறவங்கள பத்தி நினைக்கிறது தேவையில்லாத விஷயம். சின்ன உதவியோ அல்லது பெரிய உதவியோ.. உதவி செஞ்சவங்களுக்கு ஒரு நன்றியை மறக்காம சொல்லுங்க. ஆல் இஸ் வெல்.
-
6 பாசம் வைக்க, நேசம் வைக்க, தோழன வச்சுக்கோங்க..
நண்பர்கள்கூட இருந்தா எப்பவும் ஹேப்பியாவே ஃபீல் பண்ணுவோம். வாரத்துக்கு ஒருமுறையாவது நேர்ல அவங்கள மீட் பண்ணுங்க. முடியலைனா கால் பண்ணி கொஞ்ச நேரம் அரட்டை அடிங்க. மனசுல இருக்குற ஸ்ட்ரெஸ்லாம் எங்க போகுதுனே தெரியாது. நிறைய ஃப்ரண்ட்ஸ் இல்லையேனு நீங்க கவலைப்படத் தேவையில்லை. நட்புங்குறது எண்ணிக்கைல இல்லை. ஒருத்தர், இரண்டு பேர் இருந்தாலும் அவங்களோட மனசு விட்டு பேசி சிரிங்க. ஒருத்தர ஒருத்தர் கலாய்ச்சிக்கோங்க.
-
7 உங்களை நீங்களே வெளியே கூட்டிட்டுப் போங்க..
என்னடா சொல்றான்னு யோசிக்கிறீங்களா... வேற ஒண்ணுமில்ல... மாதத்துக்கு ஒரு தடவையாவது தனியா எங்கயாவது போய்ட்டு வாங்க. உங்களுக்குப் பிடிச்ச ரெஸ்டாரன்ட், தியேட்டர் அல்லது நீங்க ரொம்ப நாளா போகுணும்னு நினைச்ச இடம் இப்படி எங்கயாவது போய்ட்டு வாங்க. உங்கள ஒரு பட்டாம்பூச்சியா நினைச்சுகிட்டு சுத்தி வாங்க. உங்களோட நீங்க ஸ்பென்ட் பண்ற டைம் உண்மையிலேயே உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
0 Comments