stress free

மன அழுத்தம் குறைய இந்த 6 உணவுகள் உதவலாம்… டிரை பண்ணிப் பாருங்க!

மன அழுத்தம் ஒருவரின் தினசரி வாழ்வையே புரட்டிப் போடக் கூடிய அளவுக்கு சீரியஸான பிரச்னை. மருத்துவர்களின் உதவியோடு சிகிச்சை எடுப்பதுதான் இதற்கு முழுமையான தீர்வைத் தரும் என்கிறார்கள். அதேநேரம், சில உணவுகளை நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் போது அவை நமது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன என்கிறார்கள் நிபுணர்கள்.

அந்த வகையில் மன அழுத்தத்தை நீங்கள் குறைக்க விரும்பினால், உங்கள் தினசரி இந்த 6 உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஹெர்பல் டீ

Herbal Tea

இளஞ்சூட்டில் இருக்கும் தேநீர் உங்களை ரிலாக்ஸாக்கி புத்துணர்வு கொடுக்கும் என்பதை நம்மில் பலரும் அனுபவித்திருப்போம். அதேநேரம், ஹெர்பல் டீ உங்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் என்கின்றன ஆய்வுகள். குறிப்பாக, லாவெண்டர், சாமோமைல் (chamomile), மாட்சா (matcha) போன்ற ஃபிளேவர்கள் உடலையும் நரம்பு மண்டலத்துக்கும் புத்துணர்ச்சி கொடுப்பதாகவும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

பால்

Milk

பல நூற்றாண்டுகளாக மனிதர்களின் அன்றாட உணவுப் பட்டியலில் பாலுக்கு முக்கியமான இடம் உண்டு. தினசரி இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர் இளஞ்சூட்டில் ஒரு கிளாஸ் பால் அருந்துவது, அமைதியான உறக்கத்துக்கு உதவும். அதேபோல், பால், அதன் உபபொருட்களான பால் தயாரிப்புகளில் இருக்கும் கால்சியம் தசைகளைத் தளர்த்தவும், மனநிலையை ஸ்மூத்தாக்கவும் உதவுகிறது. உங்களுக்கு பால் பிடிக்கவில்லை என்றால், யோகர்ட், சீஸ் என பாலின் உப பொருட்களை டிரை பண்ணலாம்.

ஒமேகா- 3

Omega 3

இதயத்துக்கு நல்லது செய்யும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் உடலுக்கும் நன்மை பயக்கக் கூடியது. ஆய்வுகளின்படி ஒமேகா-3 அமிலங்கள் மன அழுத்தம் குறைய உதவுகின்றன. இந்த அமிலங்கள் செறிவு மிகுந்த மீன் வகைகளான டூனா, சாலமோன், மேக்ரியல் போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவக் கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

டார்க் சாக்லேட்

Dark Chocolate

பொதுவாகவே சாக்லேட்டுகள் பாஸிட்டிவிட்டியைக் கொடுப்பவை. டார்க் சாக்லேட்டுகளில் இருக்கும் ஆண்டியாக்ஸிடண்டுகள் எனப்படும் ஆக்ஸிஜனேற்றிகள், உங்கள் மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும் திறன் படைத்தவை. அதேநேரம், அளவுக்கு அதிகமாக டார்க் சாக்லேட்டுகளை எடுத்துக் கொள்ளாமல், ஓரளவுக்கு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் எனபதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

முட்டை

Egg

முட்டையில் இருக்கும் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், ஆண்டியாக்ஸிடண்டுகள் போன்ற அனைத்துமே மன அழுத்தத்தை சீராக்குவதில் முக்கிய பங்கு வகிக்கக் கூடியவை. அதேபோல், முட்டையில் மிகுதியாகக் காணப்படும் கோலின் (Choline) மூளை ஆரோக்கியத்துக்கு உதவக் கூடியது. இது மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.

வைட்டமின் சி கொண்ட சிட்ரஸ் பழங்கள்

Citrus Fruits

மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைட்டமின் சி பெரும் உதவியாக இருக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. வைட்டமின் சி சத்து மிகுந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, திராட்சை போன்றவை உங்கள் மன அழுத்த அளவைக் குறைக்க உதவலாம்.

Also Read – `இந்த 4 ஸ்டோரிய படிங்க’ – நிச்சயம் மோட்டிவேட் ஆவீங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top