Morning

தினமும் ஒரே நேரத்தில் எழுவதால் உங்கள் உடலில் என்ன நடக்கும்… இந்த 7 விஷயங்கள் தெரியுமா?

தினசரி காலையில் ரொட்டீனாக ஒரே நேரத்தில் விழிப்பவர்கள், இரவு தூக்கத்தையும் சீராக வைத்திருப்பவர்களுக்கு ஹெல்தியான லைஃப்ஸ்டைலுக்கு வழிவகுக்கும் என்கின்றன உலகின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள். தினசரி காலையில் ஒரே நேரத்தில் விழிப்பதனால் என்னவெல்லாம் பலன்கள் கிடைக்கும்னு தெரிஞ்சுக்கலாமா?

ஆக்டிவ்னஸ்

இது ஏர்லி பேர்ட் எனப்படும் அதிகாலையில் எழுந்திருப்பவர்களுக்கானது. உலகின் முன்னணி நிறுவனங்களுடைய சி.இ.ஓ-க்கள் தொடங்கி பலரும் கனட எழுத்தாளர் ராபின் ஷர்மா சொல்லும் 5 AM Club' கான்செப்டைப் பின்பற்றுபவர்களே.வெற்றி என்பது நீங்கள் தொடங்குவதிலிருந்துதான் ஆரம்பிக்கிறது’ என்கிறது அவரது புத்தகம். ஒரு நாளின் முதல் சில மணி நேரங்கள் ரொம்பவே முக்கியமானவை. காலை நேரத்தில் ஆக்கபூர்வமான செயல்களில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டால் வாழ்வின் பல வெற்றிகளைப் பெறமுடியும் என்றும் சொல்கிறார் அவர். ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் தினசரி அதிகாலை எழும் வழக்கம் கொண்டவர்கள் ஆக்டிவ்வாக இருப்பதும், புதிதாக பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

Morning
Morning

அலர்ட்

நீங்கள் மிகவும் அலர்ட்டாகவும், கவலை குறைந்தவராகவும் மாறுவீர்கள். இது ஏர்லி பேர்டுகளுக்கான மற்றொரு சாதகமான அம்சம். இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அதிகாலை சீக்கிரமே எழுந்துவிடும் பழக்கம் கொண்டவர்கள் பணியிடத்தில் கொடுக்கப்படும் எல்லா டாஸ்குகளையும் முடித்து விடுகிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அதேபோல், வேலை பார்க்கும் இடத்தில் சக்ஸஸ்ஃபுல் பெர்சனாகவும் அவர்கள் இருப்பார்கள் என்கிறது அந்த ஆய்வு.

டைமிங் ரொம்ப முக்கியம்

காலையில் அடிக்கும் அலாரத்தின் ஸ்நூஸ் பட்டனை அடிக்கடி தட்டும் வழக்கம் கொண்டவரா நீங்கள்? இல்லையென்றால் எந்தவொரு விஷயத்தையும் தள்ளிப்போடும் வழக்கம் இல்லாதவராக நீங்கள் இருப்பீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். காலையில் இந்தப் பழக்கம் இல்லாதவர்களிடம் இருக்கும் ஸ்பெஷல் குவாலிட்டி இது. நீங்கள் ஏர்லி பேர்டாக ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு முக்கியமான பதில் இது.

நோ நெகட்டிவிட்டி

குறைந்த அளவு நேரமே தூங்கும் வழக்கம் எதிர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்று என்கிறது மனநல மருத்துவம். தூக்கம் தொடர்பான பிரச்னைகள் மனநலனை எதிர்மறையாகப் பாதிக்கின்றன. மன அழுத்தம் போன்றவற்றுக்கு இதுவும் அடிப்படைக் காரணம். உறங்கும் நேரம், எழும் நேரம் ஆகியவற்றை சீராகக் கடைபிடிப்பவர்கள் இந்த பிரச்னையில் சிக்க வாய்ப்பு ரொம்பவே குறைவு. இதன்மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் ஹெல்தியான மனநலனையும் பராமரிக்கலாம்.

Morning
Morning

திருப்தி

உறங்கும் நேரம், எழும் நேரம் ஆகியவற்றை ஸ்டிரிக்டாகக் கடைபிடிப்பவர்கள் மற்றவர்களை விட வாழ்வில் திருப்தியுடன் இருப்பதாகச் சொல்கின்றன ஆய்வுகள். `Mattress inquirer’ என்ற நிறுவனம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வில் அதிகாலையில் சீக்கிரமே எழும் வழக்கம் ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் 13%, பொருளாதாரரீதியாக 18%, வேலை – வாழ்க்கை பேலன்ஸிங்கில் 21% அதிகமான சேட்டிஸ்ஃபேக்‌ஷனைக் கொடுப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

உற்சாகம்

தினசரி காலையில் சரியான நேரத்துக்கு எழும் வழக்கம் கொண்டவர்கள், மற்றவர்களை விட உற்சாகமாக இருக்கிறார்கள் என்கிறார்கள். அமெரிக்க ஆய்வு ஒன்றின்படி, தினசரி காலையில் ஒரே நேரத்தில் எழும் வழக்கம் கொண்டவர்கள் உடல்ரீதியாக எனர்ஜிடிக்காகவும் மனரீதியான ஆரோக்கியமான சூழலையும் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Morning

செரிமானம்

சிர்காடியன் சைக்கிள் எனப்படும் இயற்கையான செயல்பாடு நம்முடைய உடலில் எப்போதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். அதன்படி, தினசரி காலையில் ஒரே நேரத்தில் எழும் வழக்கம் கொண்டவர்களுக்கு செரிமானக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு ரொம்பவே குறைவு. ஒரே நேரத்தில் எழுவது, சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வது போன்றவை நமது ஜீரண மண்டலம் சிறப்பாகச் செயல்பட ஊக்குவிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Also Read – மர்லின் மன்றோவும் தபூ சங்கரின் கவிதைகளும் சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top