ஜிம் செஷன்களுக்கு இடையே ரெஸ்ட் டே ஏன் முக்கியம் – 4 காரணங்கள்!

ஜிம்முக்கு தினசரி செல்பவரா நீங்கள்.. உங்க ஜிம் செஷன்களுக்கு இடையே கண்டிப்பா ரெஸ்ட் டே முக்கியம்னு மருத்துவர்கள் சொல்றாங்க… அதுக்கு அவங்க சொல்ற 4 காரணங்களைப் பற்றிதான் நாம பார்க்கப்போறோம்.

Muscle recovery

ஜிம் வொர்க்-அவுட்
ஜிம் வொர்க்-அவுட்

தொடர்ச்சியான வொர்க்-அவுட்களால் மெட்டபாலிஸம் ரீதியாகவும் மெக்கானிக்கல்ரீதியாகவும் தசைகளின் மீதான அழுத்தமும் வொர்க் லோடும் அதிகரிக்கும். இதற்குக் காரணம், தசை செல்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்றலைப் பயன்படுத்துவதே. மேலும், உடற்பயிற்சிகளின்போது தசை நார்களில் சேதம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். இது அடுத்த நாள் உங்களுக்குக் கடுமையான வலியை ஏற்படுத்தும். இதனால், சரியான இடைவெளியில் ஓய்வெடுப்பதன் மூலம் தசை நார்கள் இயற்கையாகசே சரியாகவும், உடலின் கிளைக்கோசென் அளவு சீராகவும் உதவும்.

காயங்கள்

ஜிம் வொர்க்-அவுட்
ஜிம் வொர்க்-அவுட்

தசைகள் ரணமாகியிருக்கும் நிலையிலும் தொடர்ந்து வொர்க்-அவுட் செய்வது உடல் நலத்துக்கு ஏற்றதல்ல. அளவுக்கு அதிகமாக உங்கள் உடலுக்கு வொர்க் லோட் கொடுத்து, அதற்கடுத்த நாளும் ஜிம்மில் தவமாய் கிடப்பது காயங்கள் ஏற்படும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும். இப்படி இடைவெளியில்லாமல் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது கடுமையான தசைவலியை ஏற்படுத்தும். அதேபோல், திட்டமிட்டபடி சரியாக உடற்பயிற்சி செய்வதையும் தடுத்துவிடும்.

பெர்ஃபாமன்ஸ்

ஜிம் வொர்க்-அவுட்
ஜிம் வொர்க்-அவுட்

ஜிம்மில் ஒரு செஷனில் மட்டும் சிறப்பாகச் செயல்பட்டால் போதாது; ஒவ்வொரு செஷனிலும் நீங்கள், உங்கள் திறனை வெளிப்படுத்த வேண்டும். அப்படி, ஒவ்வொரு முறையும் உங்களின் பெஸ்டை வெளிப்படுத்த வேண்டும் என்றால், உங்கள் உடல் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். சரியான உணவுமுறை உங்களின் பெர்ஃபாமன்ஸுக்கு உதவும் என்றாலும், ஜிம் செஷன்கள் இடையே உரிய ரெஸ்ட் எடுத்துக் கொள்வது ரொம்பவே முக்கியம்.

சரியான தூக்கம்

ஜிம் வொர்க்-அவுட்
ஜிம் வொர்க்-அவுட்

நல்ல வொர்க்-அவுட் செய்து முடித்தால், அது இயல்பாகவே உங்களுக்கு நல்ல தூக்கத்தையும் வரவழைக்கும். ஆனால், அதற்கு நேர்மாறாகக் கடுமையாக ஜிம்மில் வொர்க்-அவுட் செய்துவிட்டு மற்ற நேரங்களிலும் ஆக்டிவ்வாக இருக்க முயற்சி செய்தால், உடலில் அட்ரீனலின் மற்றும் cortisol போன்ற ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும். இந்தவகை ஹார்மோன்கள் அதிகம் சுரந்தால், அது உங்களின் தூக்கத்தைக் கடுமையாகப் பாதிக்கும். அதனால், ரெஸ்ட் டே என்பது ஜிம் செஷன்களுக்கு இடையே முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ரெஸ்ட் டே என்கிறை இடைவெளி விடும் நாட்களை முழுவதும் தூங்கியே கழிக்க வேண்டும் என்றில்லை. நடைபயிற்சி, நீச்சல் போன்ற லைட்டரான வொர்க் அவுட்களை நீங்கள் ரெஸ்ட் டேவில் முயற்சி செய்யலாம் என்கிறார்கள் ஜிம் டிரெய்னர்கள்.

Also Read – வில் ஸ்மித்தின் மனைவி ஜாடா பிங்கட்டின் முடி உதிர்வுக்குக் காரணமான Alopecia Areata – நோயின் தாக்கம், அறிகுறிகள் என்னென்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top