ஆன்லைன் டேட்டிங்குக்கு நீங்க புதுசா.. ஆன்லைன் டேட்டிங்கில் நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய ரூல்ஸ் தெரியுமா… இந்த விஷயங்கள்ல எல்லாம் கவனமா இருங்க..!
ஆன்லைன் டேட்டிங்
ஆன்லைன் டேட்டிங் அல்லது இணையதளம், ஆன்லைன் டேட்டிங் ஆப்ஸ் மூலமா புதிய நபர்களைச் சந்திக்கணும் ஆர்வம் இருக்கவரா நீங்க.. ஆனா, இது புதுசு நமக்கெல்லாம் சரிப்பட்டு வருமானு யோசிச்சிட்டு இருக்கீங்களா… இதுக்காகவே ஆன்லைன் டேட்டிங் ஆப்ஸ்ல என்ன மாதிரியான ரூல்ஸை நீங்க ஃபாலோ பண்ணனும்னு ரிலேஷன்ஷிப் எக்ஸ்ஃபர்ட்ஸ் சில அட்வைஸ் கொடுக்குறாங்க… எந்தெந்த விஷயங்களில் கவனமாச் செயல்படணும்னு அவங்க சொல்றாங்கனு தெரிஞ்சுக்கலாம் வாங்க..!
என்ன தேவைனு தெளிவா இருங்க
ஆன்லைன் டேட்டிங் ஆப்களுக்குள் செல்லும் முன்னர், உங்களுக்கு என்ன தேவை என்பதில் தெளிவாக இருங்கள். கமிட்டட் ரிலேஷன்ஷிப்தான் வேண்டும்னு நினைக்கிறீங்களா… இல்ல ஷார்ட் டைம் ரிலேஷன்ஷிப்தான் நம்ம சாய்ஸ்னு சொல்றீங்களா.. அதெல்லாம் வேண்டாம்பா சும்மா டைம்பாஸ்தானு முடிவெடுத்திருக்கீங்களானு உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டு பதிலைத் தீர்க்கமா முடிவு பண்ணிக்கங்க பாஸ்… ஏன்னா, அதுக்கேத்த மாதிரி ஆட்களைத் தேர்வு செஞ்சீங்கன்னா, மன வருத்தம் தொடங்கி எந்த தொந்தரவும் இல்லாம இருக்கலாம்.
புரஃபைல் எப்படி இருக்கணும்?
உங்க தேவை என்னனு முடிவு பண்ணீட்டீங்கன்னா, அதுக்கேத்த மாதிரி உங்க புரஃபைலை எழுதுங்க. உதாரணத்துக்கு, நமக்கு காமெடிதான் முக்கியம், ஷார்ட் டைம் ரிலேஷன்ஷிப் போதும்னு நீங்க நினைச்சா, அதுக்கேத்த மாதிரி குட்டியா, ஸ்வீட்டா உங்க புரஃபைலை ரெடி பண்ணுங்க.. `இதுதான் நான்’ அப்டினு புரஃபைல்லயே ஹிண்ட் கொடுத்துங்க பாஸ்.. அது பின்னாட்களில் வரும் பிரச்னைகளைத் தவிர்க்க உதவலாம்.
நேர்மை முக்கியம் பாஸ்
உங்களோட சமீபத்திய போட்டோவைப் போட உங்களுக்கு மனசில்லைனு வைச்சுக்கோங்க, நீங்க இன்னும் ஆன்லைன் டேட்டிங்குக்குத் தயாராகலைனு அர்த்தம். அப்படியான லேட்டஸ்ட் போட்டோவை, குறிப்பா சிரிச்சுக்கிட்டு இருக்க மாதிரியான போட்டோவை போஸ்ட் பண்ணுங்க… அதேபோல், உங்களோட வயசு, வேலை, Interests மாதிரியான விஷயங்கள்ல உண்மையை மறைக்காதீங்க. அது ஒருகட்டத்தில் தேவையில்லாத மனக்கசப்புகளை உருவாக்கிடும். ஒரு சீரியஸான ரிலேஷன்ஷிப் வேணும்னு நினைக்குற ஆளா இருந்தா, அடிப்படையில் எந்த விஷயத்திலேயும் பொய் சொல்ல வேண்டாம். மற்றவர்களை சந்தோஷப்படுத்துறதுக்காக பொய்யா நடிக்குறவங்க நிறைஞ்சது இந்த உலகம் – இதை எப்பவும் மனசுல வைச்சுக்கோங்க.
பாசிட்டிவிட்டி
உங்களோட கடந்த கால சோக அனுபவம், கசப்பான தருணங்கள்னு எல்லா பேக்கேஜையும் தூக்கி ஓரமா வைச்சுட்டு, பாசிட்டிவிட்டியைப் பரப்புற மாதிரி உங்க புரஃபைலை ரெடி பண்ணிக்கோங்க. பழைய சோக கீதத்தையே நீங்க பாடிட்டு இருந்தீங்கனா, புது ரிலேஷன்ஷிப்பை நோக்கி மூவ் ஆக நீங்க இன்னும் தயாராகலைனு மத்தவங்க புரிஞ்சுப்பாங்க. உங்களைக் கண்டுக்காதவங்கள பத்தி நீங்க ஒரு நொடி கூட கவலைப்பட வேண்டாம். எமோஷன் வேண்டாமே பாஸ்.
எமோஜியோட ஸ்டார்ட் பண்ணாதீங்க!
வழக்கமா உங்களோட கான்வர்சேஷன்களை எமோஜியோட ஸ்டார்ட் பண்ணாதீங்க.. ஆன்லைன் டேட்டிங் ஆப்-களில் இப்படியானவர்களை படுசோம்பேறிகள்னு ஒரு வரையறைக்குள்ள வைச்சிருப்பாங்க. அதேமாதிரி, டெக்ஸ்ட் பண்ணும்போது உங்க இலக்கியப் புலமையையும் காட்டணும்னு முயற்சி பண்ணாதீங்க. அது சில நேரங்கள்ல நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்ற மெசேஜை சரியா கொண்டுபோய் சேர்க்காமத் தவறாகப் புரிஞ்சுக்குற சிக்கலையும் ஏற்படுத்தலாம். அதேமாதிரி, முதல் நாள்லயே சிலர் குடும்பம், கல்யாணம், குழந்தைனு பேச ஆரம்பிச்சுடுவாங்க. அதுவுமே ரொம்பப் பெரிய தப்புனு சொல்றாங்க ரிலேஷன்ஷிப் எக்ஸ்பர்ட்ஸ்.
Also Read – பிரேக்-அப்ல இருந்து மீண்டு வருவது எப்படி… உளவியலாளர்கள் சொல்லும் எளிய வழிகள்!