திருமண அழைப்பிதழோடு என்னென்ன கிஃப்ட்கள் கொடுக்கலாம்… அப்படியான 5 கிஃப்ட் ஐடியாக்கள் ஐந்து பற்றி பார்ப்போம் வாங்க…
வெட்டிங் கார்டு கிஃப்ட்
திருமண அழைப்பிதழோடு சின்ன சின்ன கிஃப்ட்களை அனுப்பி வைக்கும் பழக்கம் சமீபகாலமாக கவனம் பெற்று வருகிறது. அப்படி அனுப்பப்படும் கிஃப்ட்களில் கிளாசிக்கானது ஸ்வீட் பாக்ஸ்தான் என்றாலும், அதிலும் வித்தியாசம் காட்டுவது உங்களின் தனித்தன்மையைக் காட்டும். உங்களின் கிஃப்ட்கள் மூலம் விருந்தினர்களை சர்ப்ரைஸ் செய்ய அசத்தலான 5 ஐடியாக்கள்!
சாக்லேட்

சாக்லேட்டுகள் யாருக்குத்தான் பிடிக்காது. உங்கள் ரசனையை வெளிப்படுத்தும் Custom டிசைன் சாக்லேட்டுகள் வெட்டிங் கார்டு கிஃப்டுகளுக்கு சிறந்த சாய்ஸாக இருக்கும். Peanut Butter, Salted Caramel மற்றும் Jelly Chocolates என வித்தியாசமான ஃபிளேவர்கள் மூலம் உங்க தனித்தன்மையைக் காட்டலாம் மக்களே. சாக்லேட் விரும்பிகளுக்கு இதுபோன்ற ஃபிளேவர்டு சாக்லேட்டுகள் நிச்சயம் க்யூட் சர்ப்ரைஸைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உலர் பழங்கள்

நீங்க ஃபிட்னெஸ் மேல அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கும்பட்சத்தில், Dry fruits எனப்படும் உலர் பழங்கள் நிச்சயம் உங்க எண்ணத்தைப் பிரதிபலிக்குறதா இருக்கும். அதேநேரம், உலர் பழங்கள் என்றால் வழக்கமான முந்திரி, திராட்சை ஆகியவற்றுக்குப் பதிலாக berries, walnuts மற்றும் dried apricots என வெரைட்டி காட்டுங்கள்.
சுவர் அலங்காரத் தட்டுகள்

உங்க வெட்டிங் கார்டோட பிரத்யேகமா பெயிண்ட் செய்யப்பட்ட சுவர் அலங்காரத் தட்டுகளை கிஃப்டா கொடுக்குறது மெஜஸ்டிக்கான லுக் கொடுக்கும். உங்க திருமண விருந்தினர்களோட வீட்டு சுவர்களை இவை அலங்கரிக்கிறதோட, உங்களைப் பத்தியும் அவங்களுக்கு நினைவூட்டும் ஒரு சிறந்த பரிசாகவும் அமையும்.
ஹோம் மேட் ஜாம்ஸ்

நீங்க ஒரு Foodie-ஆ இருக்கபட்சத்துல இந்த ஐடியா நிச்சயம் உங்களுக்குக் கைகொடுக்கும். கெஸ்டுகளுக்கு உங்க கைப்பட நீங்களே தயாரிச்ச ஹோம் மேட் ஜாமை அனுப்பி உங்களோட சமையல் ரசனையைக் காட்டலாம். சொந்தமாக வீட்டிலேயே செய்யப்படும் கிராஃப்ட்ஸ் மேல மக்களுக்கான ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சுட்டு வருது. அந்த வரிசையில ஹோம் மேட் ஜாம்ஸுடோட, ஸ்ப்ரெட், சாஸ் போன்றவற்றை நீங்க, உங்க வெட்டிங் கெஸ்டுகளுக்குப் பரிசளிக்கலாம்.
செடித் தொட்டி
இயற்கை மீதான உங்கள் காதலை வெளிப்படுத்த இதைவிட பெரிய அடையாளம் என்ன இருக்கப்போகிறது. நீங்க நேசிக்கிற செடிகளை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தொட்டிகளில் வைத்து கிஃப்டா கொடுக்கும்போது, நிச்சயம் அது உங்கள் விருந்தினர்களை புருவம் உயர்த்த வைக்கும். அத்தோடு, இயற்கை பற்றியும் மரங்கள் வளர்ப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த இது ஆக்கப்பூர்வமான முயற்சியாகவும் இருக்கும்.
இதுமாதிரி, வேற என்னென்ன பொருட்களை வெட்டிங் கார்டோட கிஃப்டா கொடுக்கலாம்?… நீங்க என்ன நினைக்கிறீங்கன்றதை கமெண்ட்ல சொல்லுங்க மக்களே..!
Also Read – Pre-Wedding போட்டோஷூட்டில் கலக்குவது எப்படி… கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்!
0 Comments