காதலில் விழுவது ஒரு விபத்து என்றும் ரிலேஷன்ஷிப்பில் எப்போதும் சந்தோஷமாக இருப்பது என்பது நடக்காத ஒன்று என்றும் பலர் கூறுவார்கள். ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் யாராவது `நாங்கள் இதுவரை சண்டையே போட்டதில்லை’ என்றால் மற்றவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது முடியாது என்பதில் கொஞ்சம் உண்மை இருக்கிறதுதான். ஆனால், இங்கே முக்கியமானது என்னவென்றால் ரிலேஷிப்பில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க நாம் எடுத்த முயற்சிகள் என்ன? என்பதுதான். நீங்கள் எடுக்கும் சிறு முயற்சிகள்கூட உங்களது ரிலேஷன்ஷிப்பில் மிகப்பெரிய மாற்றங்களை, மகிழ்ச்சியைக் கொண்டுவரும். உங்களுடைய ரிலேஷன்ஷிப்பை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டு சிறிய முயற்சிகளை மேற்கொண்டால் எப்போதும் அதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கவே செய்யும். சரி.. உங்கள் ரிலேஷன்ஷிப் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம்? – இதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப் போறோம்.
-
1 எதிர்பார்ப்புகளை தவிர்ப்பது நல்லது..
ரிலேஷன்ஷிப்பில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முதலில் நீங்கள் எதிர்பார்ப்புகளைத் தவிர்க்க வேண்டும். பெரும்பான்மையான ரிலேஷன்ஷிப் பிரிவதற்கும் சண்டைகள் ஏற்படுவதற்கும் இந்த எதிர்பார்ப்புகளே அடிப்படைக் காரணமாக இருக்கின்றன. உங்களுடைய துணை உங்களுக்கு எத்தகைய சர்ப்ரைஸ்களை வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள் சர்ப்ரைஸ் செய்யும்போது நீங்கள் மகிழ்ச்சியாக அதனை அனுபவிக்கலாம். உற்சாகமாக இருக்கலாம். ஆனால், அதனை எதிர்பார்ப்பதை கைவிட்டுவிடுங்கள். எவ்வளவு நெருக்கமான ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் சரி யாரும் ஒருவருக்கொருவர் கடன்பட்டவர்கள் கிடையாது என்பதை நாம் உணர வேண்டும். அதையும் மீறி உங்களை எப்போதும் விடாமல் சர்ப்ரைஸ் செய்கிறார் என்றால் நீங்கள் மிகவும் அதிஷ்டசாலிதான். அத்தகைய சூழ்நிலையில்கூட நீங்கள் எதிர்பார்ப்பை தவிர்க்கலாம். இதன்மூலம் உங்களது ரிலேஷன்ஷிப்பில் உள்ளவர்களுக்கு நீங்கள் எவ்வளவு மதிப்பானவர்கள் என்பதை உணர வைக்கலாம். அன்பின் இயற்கையான பாஸிட்டிவான அம்சங்களை நீங்கள் கவனிக்கலாம் அல்லது வெளிக்காட்டலாம். ரிலேஷன்ஷிப்பில் எதிர்பார்ப்பு தேவையில்லாத ஆணி பாஸ்!
-
2 குவாலிட்டியான நேரத்தை செலவிடுங்க..
இவ்வளவுதானா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் நம்மில் எத்தனை பேர் நமது துணையுடன் குவாலிட்டியான நேரத்தை செலவிடுகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நபருடன் குவாலிட்டியான நேரத்தை செலவிடுவதால் உங்களது ரிலேஷன்ஷிப் இன்னும் ஆரோக்கியமானதாக மாறும். உங்களது துணையின் மனதையும் கவரும். எப்போதும் வேலை, நண்பர்கள் என்றிருக்காமல் தினமும் குறிப்பிட்ட சில மணி நேரத்தை உங்களது துணைக்காக செலவிடுவது நல்லது. உங்களது ரிலேஷன்ஷிப்பின் ஆரம்ப நாள்களில் இருந்ததைப் போல ஒருவருக்கொருவர் எப்போதும் இருப்பது மிகவும் முக்கியமானது. ரிலேஷன்ஷிப்பில் டைமிங் ரொம்ப முக்கியம்!
-
3 ஒருவருக்கொருவர் காது கொடுத்து கேளுங்க மற்றும் பாராட்டுங்க..
ரிலேஷன்ஷிப்பில் கேட்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உங்களுக்கு போரிங்கான டாப்பிக்கில்கூட அவர்கள் பேசலாம். ஆனால், உங்களை மதித்து அவர்கள் பேசும்போது அதனை நீங்கள் கவனிக்க வேண்டும். தான் பேசுவதை கேட்பதற்குகூட ஆள் இல்லை என்ற எண்ணத்தை ஒருபோதும் அவர்களுக்கு கொடுத்துவிடக் கூடாது. அப்படி செய்தால், உங்கள் ரிலேஷன்ஷிப்பில் மகிழ்ச்சி என்பது நிச்சயம் நீடிக்காது. அதுமட்டுமல்ல அவர்கள் கூறுவதில் இருக்கும் விஷயங்களைக் குறிப்பிட்டோ அல்லது அவர்களின் செயல்களில் இருக்கும் விஷயங்களைக் குறிப்பிட்டோ அவர்களை மனதார பாராட்டுங்கள். இதனால், அவர்களுக்கும் உங்களுக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப்பில் பலம் இன்னும் அதிகரிக்கும். ரிலேஷன்ஷிப்பில் கேக்குறதை தவிர்க்கக்கூடாது!
-
4 அவர்கள் அவர்களாக இருப்பதற்கு மதிப்பு கொடுங்க..
`நீங்க இன்னும் கொஞ்சம் ஃபன்னியா இருந்தா நல்லா இருக்கும்; நீங்க இந்த டிரஸ் போட்டா நல்லா இருப்பீங்க; நீங்க இன்னும் கொஞ்சம் ஹைட்டா இருந்தா செமயா இருப்பீங்க’ - இப்படி அவர்களிடம் இல்லாத ஒன்றை தேடிக் கண்டுபிடித்து குறையாக கூறுவதை முற்றிலுமாக தவிர்க்கலாம். இது ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இரண்டு பேருக்குமே கோபத்தை மட்டுமே ஏற்படுத்தும். இதற்கு பதிலாக அவர்கள் அவர்களாக இருப்பதைப் பாராட்டுங்கள். அவர்களின் பாஸிட்டிவான பக்கங்களை குறிப்பிட்டு பேசுங்கள். அப்படி எதுவும் இல்லை என்றால் நீங்கள் தவறான ரிலேஷன்ஷிப்பில் உள்ளீர்கள் என்று அர்த்தம். மதிப்பு கொடுக்குறதுக்கு மதிப்பெண்கள் அதிகம்!
-
5 பி ஓப்பன்..
உங்களது ரிலேஷன்ஷிப்பில் மூடி மறைப்பதை தவிர்த்துவிடுங்கள். மகிழ்ச்சியான ரிலேஷன்ஷிப்பில் ஒருவருக்கொருவர் நேர்மையாகவும் ஓப்பனாகவும் ஸ்பேஸ் கொடுத்தும் இருக்க வேண்டும். மூடி மறைப்பது என்பது காலப்போக்கில் உங்களது ரிலேஷன்ஷிப்பில் நிச்சயம் பாதிப்புகளை ஏற்படுத்தும். விஷயங்களை உங்களது துணையுடன் நீங்கள் பகிர்ந்துகொள்வதால் மனதளவில் இருக்கும் ஸ்ட்ரெஸ்களைகூட நீங்கள் கடந்து வர முடியும். ரிலேஷன்ஷிப்பில் ஒளிவு மறைவு இருப்பது ஆப்புதான்!
-
6 பொறாமைகளைத் தவிருங்கள்..
உங்களது ரிலேஷன்ஷிப்பை பொறாமை உணர்வு எளிதாக அழித்துவிடும். உங்களது துணை உங்களுக்கு போதிய நேரத்தை ஒதுக்காமல் நண்பர்களுக்கோ அல்லது வேறு யாருக்காவது அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக நீங்கள் உணர்ந்தால் அதனை நேர்மையான வழியில் சரிசெய்ய வேண்டிய செயல்களில் இறங்குங்கள். பொறாமையை வளர்ப்பதற்கு பதிலாக நம்பிக்கையை உங்களது ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் வளர்க்கலாம். இது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். பரஸ்பர நம்பிக்கையை ரிலேஷன்ஷிப்பில் வளர்ப்பது என்பது மிகவும் முக்கியம். ரிலேஷன்ஷிப்பில் பொறாமையை கைவிட்ருங்க!
-
7 தீர்க்க முடியாத பிரச்னைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்..
உங்களது ரிலேஷன்ஷிப்பில் தீர்க்க முடியாத பிரச்னைகள் என்று எதுவும் இருக்காது. ஆனால், அதையும் மீறி சிக்கல்கள் ஏற்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால், உங்களது ரிலேஷன்ஷிப்பில் உள்ள பிரச்னை காலப்போக்கில் மறைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில நேரம் பிரச்னைகளை பேசி சரிசெய்யலாம் என்பதன் அடிப்படையில் பேசினால் அது கூடுதல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அப்படியான தருணங்களில் அமைதியாக இருப்பதே நலம்!
Also Read : LGBTQIA+ என்றால் என்ன?
0 Comments