காதலை கடந்து வராதவர்கள் யாரும் இருக்க முடியாது. காதலில்.. சில நேரங்களில் மிகவும் சிறிய விஷயங்கள்தான் உங்கள் பார்ட்னரை அதிகளவில் இம்ப்ரஸ் செய்யும். அதேபோல நீங்கள் தவறவிடும் சிறிய விஷயங்கள்தான் உங்களது பிரேக்கப்புக்குக் காரணமாகவே அமையும். குறிப்பாக பெண்கள் நீங்கள் அவர்களுக்கு தகுதி உடையவரா இல்லையா என்பதை எளிதில் தீர்மானிப்பார்கள். நீங்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்கள் பாட்னரின் மனதில் உங்கள் மீதுள்ள இமேஜை சற்று கூடவும் குறையவும் வைக்கும். அவ்வகையில், உங்கள் பார்ட்னரை இம்ப்ரஸ் செய்வதற்கான சில ஐடியாக்கள் இதோ…
-
1 கண்ணைப் பார்த்து பேசுங்க..
பெண்களுடன் பேசும்போது அவர்களுடைய கண்களைப் பார்த்து பேசுவது மிகவும் முக்கியம். உங்களது பார்வையின் கவனம் மாறும்போது உங்கள் எதிரில் நிற்கும் பெண் உங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பீடுகளும் மாறும்.
-
2 நீட்டாக இருப்பது முக்கியம் பாஸ்..
உங்களுடைய மோசமான உடை மற்றும் உங்கள் மீது வீசும் வியர்வை நாற்றம்கூட பெண்கள் உங்கள் மீது வைத்திருக்கும் எண்ணங்களை மாற்றும். எல்லா நேரங்களிலும் நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புவார்கள். இதற்கு நீங்கள் கிளீன் ஷேவ் செய்ய வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஆனால், உங்களது தாடி, மீசை மற்றும் தலை முடி ஆகியவற்றை ஒழுங்காக பராமரிக்க வேண்டும். கேஷூவலோ அல்லது ஃபார்மலோ... உங்களது உடைகளை உங்களுக்கு ஏற்றவாறு பெர்ஃபெக்டாக அணிய வேண்டும். ஃபஸ்ட் இம்ரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ரஷன். இதை தீர்மானிப்பது உங்களது நீட் லுக்தான்.
-
3 அவங்க நண்பர்களுடன் நட்பாக இருங்க..
உங்களுடைய ஆளுமையையும் தோற்றத்தையும் நீங்கள் இம்ப்ரஸ் செய்ய நினைக்கும் பெண் மட்டுமல்ல அவர்களுடைய நண்பர்களும் குடும்பத்தினரும்கூட மதிப்பீடு செய்வார்கள். அவர்களுடன் நீங்கள் நட்புடன் பேச வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். எளிதில் சோஷியலைஸாகும் ஆண்களை பெண்கள் எளிதில் விரும்புவார்கள். அதேபோல, அவர்கள் தங்களுடைய நண்பர்களுடன் நேரம் செலவழிக்க விரும்பும்போது அதற்கு நீங்கள் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
-
4 மொபைலைத் தவிர்ப்பது நல்லது..
நீங்கள் இம்ப்ரஸ் செய்ய நினைக்கும் பெண்களுடன் இருக்கும்போது அவர்களுடனான உரையாடலின் நடுவே மொபைலைப் பயன்படுத்துவது நிச்சயம் உங்கள் மீதான மதிப்பைக் குறைக்கும். அதனால், மொபைலைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமான விஷயங்களில் ஒன்று. நீங்கள் அவர்களுடன் பேச ஆரம்பிக்கும்போது உங்களது மொபைலை சைலண்ட் மோட் அல்லது ஃபிளைட் மோடில் போடுவதை அவர்கள் கவனத்துக்கு நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். இது உங்கள் மீதான மதிப்பை கொஞ்சம் அதிகப்படுத்தும்.
-
5 கேள்வி கேளுங்க..
ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பற்றி அதிகளவில் பேச விரும்புகிறார்கள். எனவே அவர்களுக்கு பிடித்த டாப்பிக்கில் கேள்விகளை கேட்கலாம். அவர்களுடைய கடந்த காலத்தைப் பற்றி கேள்வி கேட்கலாம். அவர்களைப் பற்றி நீங்கள் அதிகமாக தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை அவர்களுக்கு உங்களது கேள்விகளின் வழியாகப் புரிய வைக்க வேண்டும். சந்தேகம் வரவழைக்கும் படியான கேள்விகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஒவ்வொரு முறையும் உங்களுக்குள் உரையாடல் நிகழும்போது அர்த்தமுள்ள உரையாடலாக இருப்பது முக்கியம்.
-
6 கதவை முதலில் திறங்க..
பெண்களுடன் ரெஸ்டாரண்ட் போன்ற இடங்களுக்கு செல்லும்போது அவர்களுக்காக முதலில் நீங்கள் கதவைத் திறக்க வேண்டும். இது நீங்கள் பாலின சமத்துவத்துடன் அவர்களை நடத்துகிறீர்கள் என்பதற்கான ஒரு அடையாளமாக அவர்கள் நினைக்கலாம்.
-
7 சின்ன விஷயங்களையும் பாராட்டுங்க..
நீங்கள் இம்ப்ரஸ் செய்ய நினைக்கும் பெண்களை அவர்களின் தோற்றம் மற்றும் சின்ன சின்ன செயல்களுக்காக நீங்கள் பாராட்ட வேண்டும். சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி மொக்கை வாங்காமல் இருப்பதும் முக்கியம்.
-
8 அட்வைஸ் கேக்கலாம்..
நீங்கள் பெண்களிடம் ஆலோசனைகளை கேட்பது அவர்களுக்கு உங்கள் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தும். நீங்கள் அவர்கள் மீது அதிகமாக மதிப்பை வைத்துள்ளீர்கள் என்பதையும் இது எடுத்துக்காட்டும். எளிதில் பதில் சொல்லும்படியான அல்லது ஒப்பீனியன் சொல்லும்படியான அட்வைஸ்களை கேட்பது மிகவும் நல்லது. இது விரிவான உரையாடலுக்கு வழிவகுக்கும்.
-
9 பாஸிட்டிவிட்டியப் பாராட்டுங்க..
நீங்கள் நேசிக்கும் பெண் அதிக பாஸிட்டிவிட்டியுடன் இருந்தால் அதனை பாராட்டுங்கள். பெரும்பாலான மனிதர்களிடம் இன்றைய சூழ்நிலையில் இல்லாத ஒன்று பாஸிட்டிவிட்டி தான். அது அவர்களிடம் இருக்கும்போது அவர்களை பாராட்டிவிட வேண்டும். அதுமட்டுமல்ல வாழ்க்கையில் அவர்களை அதிகமாக சந்தோஷப்படுத்தும் விஷயங்களையும் அவர்களிடம் கேட்டு வைத்திருப்பது நல்லது. இது அவர்களிடத்தில் உங்களுக்கான மதிப்பை இன்னும் அதிகரிக்கும். அவர்களுக்கு சப்போர்ட்டாகவும் நீங்கள் இருக்க வேண்டும்.
-
10 நீங்க நீங்களா இருங்க...
மாயா ஏஞ்சலோ, ``மக்கள் நீங்கள் சொன்னதை மறந்துவிடுவார்கள். நீங்கள் செய்ததை மறந்து விடுவார்கள். ஆனால், நீங்கள் அவர்களை எவ்வாறு உணர வைத்தீர்கள் என்பதை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார். இது நீங்கள் நீங்களாக இருக்கும்போதுதான் சாத்தியமாகும். உங்களை அவர்கள் மனதில் மிகவும் நல்லவராக உணர வைப்பது மிகவும் அவசியம். நீங்கள் நீங்களாகவே இருப்பது உங்களுக்கு மிகவும் வசதியாகவும் அவர்கள் மனதில் ஒரு இம்ப்ரஷனையும் ஏற்படுத்தும்.
-
11 பூக்களைக் கொடுங்க...
பூ கொடுக்குறதுலாம் பழைய டிரெண்ட்னு யோசிக்காதிங்க. வொர்க்கவுட் ஆக நிறைய வாய்ப்புகள் இருக்கு. பூக்களை நீங்கள் பரிசாக கொடுக்கும்போது அவர்கள் மீது நீங்கள் மிகுந்த அன்புடன் இருப்பதை அது வெளிப்படுத்துகிறது. முடிந்தால் அதனுடன் சிறிய கடிதம் ஒன்றையும் எழுதி பரிசாகக் கொடுங்கள். கடிதம் வளவள என்று இல்லாமல் சொல்ல வேண்டியதை சுருக்கமாக நச் என்று சொல்வது முக்கியம்.
ஆல் தி பெஸ்ட்!
0 Comments