ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்பில் பல வகைகள் இருக்கின்றனவாம்… அவை என்னென்ன.. அந்தந்த ரிலேஷன்ஷிப்புகளின் இயல்பு என்ன என்பதைப் பற்றிதான் நாம் தெரிஞ்சுக்கப் போறோம்.
ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்
ரிலேஷன்ஷிப்பில் எத்தனையோ வகை இருந்தாலும் ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப் அலாதியானது. வாழ்வின் வெற்றிகரமான தம்பதிகள் பலரும் தங்களது ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்களாகவே இருப்பார்கள்.
இப்படியான ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் வகைகள் என்னென்ன தெரியுமா?
Codependent Relationships

இந்த ரிலேஷன்ஷிப்பில் தங்களது அன்றாட நடவடிக்கைகள் தொடங்கி அனைத்துவிதமானவற்றுக்கும் ஒருவர், தங்கள் பாட்னரையே சார்ந்திருப்பார்கள். இருவருமே ஒருவரையொருவர் சார்ந்திருக்கவும் வாய்ப்புகள் அதிகம். Codependent Relationship-இல் இருப்பவர்கள், மற்றொருவர் இல்லாமல் தங்களின் வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்கிற மனநிலையில் இருப்பார்கள்.
Independent Relationships

நாம் மேலேபார்த்த Codependent Relationship-க்கு அப்படியே நேரெதிரானது இந்த Independent Relationship. சுதந்திரம் என்பது நல்ல விஷயம்தான்; ஆனால், தங்களது நடவடிக்கைகள் அனைத்தையும் உங்கள் பாட்னர் மர்மமாகவே வைத்திருக்கிறார் என்றால், ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு ரிலேஷன்ஷிப்பில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டமைப்பதும், சில இடங்களில் விட்டுக்கொடுத்து ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்க வேண்டியது அடிப்படையான ஒன்று என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Dominant/Submissive Relationships

Codependent, Independent ரிலேஷன்ஷிப்களின் ஆரோக்கியமற்ற வெர்ஷன்தான் இந்த ரிலேஷன்ஷிப். பாட்னர்கள் இருவருரில் ஒருவர் அல்லது சில நேரங்களில் இருவருமே எதிர்மறையான எக்ஸ்ட்ரீம் சூழலைச் சென்றடைந்திருப்பார்கள். அவர்கள், தங்கள் பாட்னர் தங்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இருவருமே ஒருவருக்கொருவர் கஷ்டம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இப்படி இந்த ரிலேஷன்ஷிப் பற்றி இரண்டு பக்கமும் இரண்டு தரப்பு நியாயங்களைச் சொல்லுவார்கள். இருவரில் ஒருவர், மற்றொருவர் மீது எந்தவொரு கழிவிரக்கமும் கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் விரும்பிய எந்தவொரு நிலைக்கும் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள். அதேநேரம், மற்றொருவரிடன் தன்னம்பிக்கை என்பது மருந்துக்குக் கூட இருக்காது.
Long Distance Relationships

இந்த லிஸ்டிலியே தனித்தன்மை கொண்டது இந்த ரிலேஷன்ஷிப். மற்ற ரிலேஷன்ஷிப்களில் இருப்பது போன்ற எமோஷனல் தடைகள் அதிகம் இல்லாவிட்டாலும், நேரடியாக இருவரும் அதிகம் உரையாடிக் கொள்ள வாய்ப்பு இருக்காது. இந்த ரிலேஷன்ஷிப்பில் கம்யூனிகேஷன் ரொம்பவே முக்கியம். பாட்னர்கள் இருவரும் சில மணி நேர பயண தூரத்திலேயோ அல்லது வெவ்வேறு நாடுகளிலோ இருப்பார்கள்.
Toxic Relationships

ஆரோக்கியமான ரிலேஷன்ஷிப்புக்கு நேரெதிரானது இந்த Toxic Relationship. பாட்னர்கள், இருவருமே ஒருவருக்கொருவர் எதிலுமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எமோஷனலாக டேமேஜாக இருக்கும் இருவரும், தங்கள் வாழ்வில் எதையாவது இழந்துவிடுவோமோ என்ற அச்சத்திலேயே இருப்பார்கள். பாட்னருக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். இந்த ரிலேஷன்ஷிப்பில், தங்களுடைய மகிழ்ச்சி ஒன்றையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். ரிலேஷன்ஷிப்பில் பாட்னருக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து, இந்த ரிலேஷன்ஷிப்பை ஆரோக்கியமாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.