மில்லினியல்ஸ் லவ் மேரேஜூக்கு முன்னுரிமை கொடுப்பது ஏன்… 3 காரணங்கள்

இன்டர்நெட்டுடனுடன் தங்கள் டீனேஜைக் கழித்த முதல் தலைமுறையான மில்லினியல்ஸ், பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணத்தை விட லவ் மேரேஜையே அதிகம் தேர்வு செய்கிறார்கள். இதற்கான 3 காரணங்களைத்தான் இந்தக் கட்டுரைல தெரிஞ்சுக்கப் போறோம்.

மில்லினியல்ஸ்

டிஜிட்டல் நேட்டிவ்ஸ் என்றழைக்கப்படும் மில்லினியல்ஸ் என்பவர்கள், பொதுவாக 1981 முதல் 1996 வரை பிறந்தவர்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் Gen Y தலைமுறையினராகவும் கருதப்படுகிறார்கள். விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தங்கள் திருமண பந்தத்தை அல்லது வாழ்க்கைத் துணையைக் கவனமாகவே தேர்வு செய்கிறார்கள். ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளிவந்த புது சிங்கிளாக நீங்கள் இருந்தால், திருமணத்தைப் பேசாமல் பெற்றோரின் முடிவுக்கே விட்டுவிடலாமா என்ற சிந்தனையில் நீங்கள் இருக்கலாம். அதேநேரம். மில்லினியல்ஸ்கள் அதிகம் பேர் லவ் மேரேஜையே தேர்வு செய்கிறார்கள். அதற்கான சில காரணங்களைப் பார்க்கலாம்.

திருமணம்
திருமணம்

திருமண வாழ்க்கை பற்றிய பயம்

குடும்பத்தினர் பார்த்து ஒரு பெண்ணையோ, பையனையோ உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களின் துணையாக வாழ்க்கை முழுவதும் பயணிக்க இருக்கும் அந்த நபரைப் பற்றி அதிகம் தெரியாமலேயே அவரை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும் என்பதுதான் பெரும்பாலான மில்லினியல்ஸ்களின் எண்ணம். அதேபோல், அவரின் குடும்பம் பற்றியும் அதிகம் தெரிந்துகொள்ள முடியாமலேயே போய்விடும். இதனால், திருமணத்துக்குப் பிறகான தினசரி ரொட்டீன் எப்படி இருக்கப் போகிறதோ என்ற எண்ணமும் மேலோங்கும். அதேநேரம், உங்கள் கேர்ள்ஃப்ரண்ட் அல்லது பாய்ஃப்ரண்டையே மணக்கிறீர்கள் என்றால், அவர்களைப் பற்றியும் அவர்களது குடும்பத்தினர் பற்றியும் அதிகம் தெரிந்துவைத்திருக்க முடியும். இதனால், திருமணத்தைப் பற்றி மட்டும் சிந்தித்தால் போதும். திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை எப்படியிருக்கும் என்பது பற்றி உங்கள் பாட்னரோடு கூட அதிக நேரம் ஆலோசனை நடத்தியிருக்கவும் முடியும் என்பது கூடுதல் ப்ளஸ்..

காதல்
காதல்

அக்சப்டன்ஸ்

பிடிவாதக்காரர்கள் அல்லது விவாதம் செய்பவர்கள் என நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம், பெரும்பாலான மில்லினியல்ஸ் யாருக்காகவும் தங்களின் குணாதிசியங்களை மாற்றிக்கொள்ள விரும்பமாட்டார்கள் என்பதுதான் இயல்பு. அதிகம் பரிச்சயம் இல்லாத புதிய நபர் உங்கள் வாழ்வின் முக்கியமான அங்கமாகும்போது, இயற்கையாகவே நம்மிடம் இருக்கும் சில குணாதிசயங்களை அவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குறிதான். நம்முடைய நிறை,குறைகளோடு நமாகவே தொடர அவர்கள் அனுமதிப்பார்களா என்பதும் சந்தேகம்தான். இதுவே, நன்கு பழக்கமான, நம்மைப் புரிந்துகொண்ட கேர்ள்ஃப்ரண்டாகவோ பாய்ஃப்ரண்டாகவோ இருக்கும்போது நம் நிறை,குறைகள் பற்றியும், குணாதிசயங்கள் பற்றியும் அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அவர்களது குணநலன்களை நாம் தெரிந்துவைத்திருப்போம். இதனால், பிரச்னை அதிகம் இருக்காது.

திருமணம்
திருமணம்

தனித்தன்மை – சுதந்திரம்

மில்லினியல்ஸ் அதிகம் பேர் லவ் மேரேஜுக்கு டிக் அடிக்க முக்கியமான காரணம் இது. அரேஞ்சுடு மேரேஜில் பெண் அல்லது பையனின் திருமணத்துக்கு ஓகே சொல்ல வேண்டும் என்பதற்காகவே, தங்களின் உண்மையான இயல்பை மறைத்து வேறொரு ஆளாகவே நடிக்கும் நிறைய பேரை நாம் பார்த்திருப்போம். அப்படியான சூழலில் திருமணத்துக்குப் பிறகு இந்த நிலை மாறும்போது, பெரிய பிரச்னை வெடிக்கும். `கோப்பால்…கோப்பால்’ என்று அப்போது கதறிப் பயனில்லை என்பதுதான் மில்லினியல்ஸ்கள் பெரும்பாலானோரின் எண்ணமாக இருக்கிறது. மதுப்பழக்கம், விளையாட்டு உள்ளிட்ட பழக்க வழக்கங்கள் கூட பெரிய பிரச்னையாக மாறி விவாகரத்து வரை கொண்டு சென்றுவிடும் அபாயம் இருக்கிறது. ரிலேஷன்ஷிப்பில் நேர்மையாக, உண்மையாக இருக்க வேண்டும் என்று கருதி மில்லினியல்ஸ் லவ் மேரேஜே சேஃப் என்று நினைப்பதாக ஆய்வு ஒன்று சொல்கிறது.

Also Read – நீங்க உங்க க்ரெஷை எவ்ளோ லவ் பண்றீங்க – ஒரு சின்ன டெஸ்ட்ல தெரிஞ்சுக்கலாமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top