உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இதனால், மக்கள் அழகான மற்றும் அமைதியான இடங்களை நோக்கி தங்களது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியர்கள் அதிகம் சுற்றுலாவுக்கு செல்லும் எழில் மிகுந்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழகத்தில் இருந்து அட்வென்சர் ரோட் ட்ரிப் செல்ல ஏதுவான சில இடங்களை இங்கே பார்க்கலாம்.

1) மகாபலிபுரம் – தமிழகத்தில் மிகச்சிறந்த சாலை வழிப்பயணங்களில் ஒன்று, மகாபலிபுரம் செல்வது. உலகில் மிகச்சிறந்த சிற்பங்கள் மகாபலிபுரத்தில் உள்ளன. இவைத்தவிர, அழகான கடற்கரைகளும் மகாபலிபுரத்தில் உள்ளன.

2) காஞ்சிபுரம் – சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழி மிகவும் அற்புதமானது. பல்லவர்களின் தலைநகரமாக ஒருகாலத்தில் காஞ்சிபுரம் இருந்தது. இன்றைக்கு பாரம்பரியம் மிக்க இடங்களில் ஒன்றாகவும் அதிகம் கோயில்கள் உள்ள இடமாகவும் காஞ்சிபுரம் உள்ளது.

3) நாகலாபுரம் – சித்தூர் பகுதியில் இந்த நாகலாபுரம் அமைந்துள்ளது. இங்குள்ள நாகலாபுரம் நீர்வீழ்ச்சி மற்றும் வேதநாராயண சாமி கோயிலுக்கு பயணிகள் பலரும் ஆர்வத்துடன் செல்கின்றனர். டிரெக்கிங் செல்வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அதற்கும் ஏற்ற இடமாக இது இருக்கும்.

4) பழவேற்காடு ஏரி – இயற்கையில் மிகவும் அழகான ஏரியாகவும் மிகப்பெரிய ஏரியாகவும் இது உள்ளது. பறவைகள் சரணாலயம் உட்பட ஏகப்பட்ட விஷயங்கள் இங்கு பார்க்க உள்ளன.

5) வேலூர் – சென்னையில் இருந்து ஒரேநாளில் சென்றுவரக்கூடிய இடம்தான் வேலுர். இங்குள்ள வேலூர் கோட்டை சுற்றுலாப் பயணிகள் பலரையும் ஈர்க்கின்றன. இதைத்தவிர ஜலகண்டேஸ்வர கோயில் மற்றும் மாநில அரசு அரங்காட்சியம் ஆகியவையும் அமைந்துள்ளன. ஆம்பூர் பிரியாணியும் இங்கு ரொம்பவே ஃபேமஸ்!

6) நெல்லூர் – மிகவும் பிரபல வரலாற்றுத்தளம், நெல்லூர். மௌரியப் பேரரசு காலத்தில் மிகவும் முக்கியமான இடமாக நெல்லூர் அமைந்துள்ளது. உதயகிரி கோட்டை, பறவைகள் சரணாலயம் மற்றும் சோமசீலா அணை ஆகியவை இங்குள்ள பிரபல சுற்றுலாத்தளங்கள்.

7) திருவண்ணாமலை – ஆன்மீக பக்தர்களின் ஃபேவரைட் சுற்றுலாத்தளங்களின் இதுவும் ஒன்று. திருவண்ணாமலை கோயில் மற்றும் அதிகளவில் ஆசிரமங்கள் இங்குள்ளன.

8) ஏலகிரி – மலைப்பகுதி மற்றும் குளிரான பகுதிகள் யாருக்குலாம் பிடிக்குமோ அவங்களோட ஃபேவரைட் இடமாக ஏலகிரி இருக்கும். கோடைக்காலங்களில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் இங்கே செல்வார்கள். ஏலகிரி போனீங்கனா ஸ்வாமிமலை பகுதி மற்றும் புங்கனூர் ஏரியை மிஸ் பண்ணாம பார்த்துட்டு வாங்க.

9) தரங்கம்பாடி – டச்சு காலனியாதிக்கத்தில் தரங்கம்பாடி மிகவும் முக்கியமான நகரமாக இருந்துள்ளது. பாரம்பரிய கட்டடங்கள், தேவாலயங்கள் மற்றும் டச்சு மியூசியம் ஆகியவை இங்கு அமைந்துள்ளன.

10) நாகப்பட்டினம் – சோழர்கள் ஆட்சியின் இடைப்பட்ட காலத்தில் மிகவும் முக்கியமான நகரமாக நாகப்பட்டினம் அமைந்துள்ளது. அவர்கள் காலத்தில் துறைமுகமாகவும் இந்த நகரம் இருந்தது. பிற்காலங்களில் போர்ச்சுக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் இங்கு குடியேறினர். அழகான கடற்கரைகள், கோயில்கள் ஆகியவையும் இங்கு அமைந்துள்ளன. சிறந்த ரோட்டிரிப்பிற்கு நாகப்பட்டினம் மிகச்சிறந்த ஒன்றாக இருக்கும்.

11) காரைக்கால் – மற்றொரு துறைமுகமாக இருந்த நகரம், காரைக்கால். நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் பிறந்த ஊர் இதுதான். பிரஞ்சுக்காரர்கள் இங்கு குடியேறி ஆதிக்கம் செலுத்தினர். அதற்கான சான்றுகளையும் இங்கே பார்க்கலாம்.

12) தேக்கடி – சென்னையில் இருந்து கேரளா போற பிளான் இருக்கா? வேறலெவல் ரோட் ட்ரிப் உங்களுக்கு காத்திருக்கு. இயற்கை எழில்மிகுந்த காட்சிகளையும் யானைகளையும் நீங்கள் அதிகமாக இங்கே காணலாம். கண்டிப்பா உங்க பக்கெட் லிஸ்ட்ல இந்த இடத்தை சேர்த்துக்கோங்க.

13) ஏற்காடு – தமிழகத்தில் மிகவும் அழகான பகுதிகளில் ஏற்காடும் ஒன்று. அங்கு நிலவும் காலநிலை, தேயிலை வாசம் ஆகியவை வேறலெவல் அனுபவத்தை உங்களுக்கு தரும். இங்க போகவும் மிஸ் பண்ணாதீங்க.

இந்த லிஸ்டில் நாங்க தவரவிட்ட அல்லது ரோட் ட்ரிப் செல்ல ஏதுவான இடத்தை மறக்காமல் கமெண்டில் சொல்லுங்க!
Also Read: வெளிநாட்டில் படிக்க ஆசைப்படுறீங்களா… இந்த மோசடிகளில் சிக்கிக்காதீங்க!
0 Comments