ஸ்கூபா டைவிங் லவ்வரா நீங்க.. இந்தியாவின் இந்த 4 பெஸ்ட் பிளேஸ்களை மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியாவில் ஸ்கூபா டைவிங்குக்கு பெஸ்டான நான்கு இடங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா?

ஸ்கூபா டைவிங்

கடலின் அடி ஆழத்துக்குச் சென்று அதன் அழகை ரசிக்கும் அனுபவமே அலாதியானது. ஸ்கூபா டைவிங் சூட், தண்ணீருக்கும் சுவாசிக்கும் கருவிகளோடு நீலக்கடலின் ஆழத்தில் ஒரு பயணம் மேற்கொள்வது வாழ்வின் ஒன் டைம் அனுபவத்தைக் கொடுக்கக் கூடியது. இந்தியாவில் பெஸ்டான 4 ஸ்கூபா டைவிங் ஸ்பாட்கள் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கலாமா?

அந்தமான்

வங்காள விரிகுடா கடலின் ஆழத்தில் வாழும் உயிரினங்கள் மற்றும் அவற்றின் அழகான உலகம், உங்களுக்கு நிச்சயம் புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்த அழகே, அந்தமானில் ஸ்கூபா டைவிங் புகழ்பெற்றதாக இருக்கக் காரணம். பவளப் பாறைகளும் அதில் வசிக்கும் உயிரினங்களும் வேறெங்கும் காணக்கிடைக்காத தனித்துவம் மிக்கவை.

அந்தமான்
அந்தமான்

லட்சத் தீவுகள்

இந்தியாவின் பாப்புலரான ஹாலிடே டெஸ்டினேஷனாக அந்தமான், நிகோபர் தீவுகள் இருப்பதால், லட்சத்தீவு பயணம் உங்களுக்கு அமைதியான, அதேநேரம் யுனீக்கான எக்ஸ்பீரியன்ஸைக் கொடுக்கும். லட்சத்தீவில் இருக்கும் பெரும்பாலான பகுதிகள் மனிதக் கால்தடம் படாதவையே. இதற்குக் காரணம் நிர்வாகத்தால் பாதுகாப்பு கடுமையாகப் போடப்பட்டிருப்பதே. லட்சத்தீவு கடல் பகுதி உலகின் மிக அழகான கடல்வாழ் உயிரினங்களைக் கொண்டிருக்கிறது. இதனாலேயே ஸ்கூபா டைவிங்கும் அங்கு பிரபலமாக இருக்கிறது. மெதுவாக சுற்றுலாப் பயணிகளில் கவனத்தை லட்சத் தீவுகள் ஈர்த்து வருகிறது.

புதுச்சேரி

கிழக்குக் கடற்கரையில் இருக்கும் ஒரே ஸ்கூபா டைவிங் லொக்கேஷன் புதுச்சேரிதான். நீங்கள் பிகினராக இருந்தாலும் புரஃபஷனலாக இருந்தாலும் சரி, உங்களுக்கான சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கவல்ல புதுச்சேரி, இந்தியாவின் டாப் ஸ்கூபா டைவிங் ஸ்பாட்களில் முக்கியமானது. பவளப் பாறைகள், கடல் பாம்புகள், jackfish, செயற்கையாக உருவாக்கப்பட்ட முகடுகள் என புது உலகமே கடலின் ஆழத்தில் உங்களுக்காகக் காத்திருக்கும். இந்த எக்ஸ்பீரியன்ஸை மிஸ் பண்ணிடாதீங்க.

புதுச்சேரி
புதுச்சேரி

கோவா

கோவாவில் ஸ்கூபா டைவிங் உங்கள் அட்வெஞ்சர் மனநிலைக்கு நிச்சயம் தீனி போடும் வகையில் அமையும். கடல் நீரோட்டம் குறைவு என்பதால், இந்தியாவில் ஸ்கூபா டைவிங் செய்ய பாதுகாப்பான கடல் பகுதிகளில் கோவா முக்கியமானது என்று சொல்லலாம். சின்ன சின்ன பவளப் பாறைகள், பல்வேறு நிறங்களில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் என கலர்ஃபுல்லான எக்ஸ்பீரியன்ஸை நீங்கள் பெறலாம்.

இதுல எது உங்களோட ஃபேவரைட் ஸ்கூபா டைவிங் ஸ்பாட்னு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top