தமிழ்நாட்டின் 7 பெஸ்ட் அட்வெஞ்சர் ஸ்பாட்ஸ்!

டூரிஸத்தின் பிரபலமான அங்கமாக அட்வெஞ்சர் டூரிஸம் மாறியிருக்கிறது. அப்படி அட்வெஞ்சர் டூரிஸத்துக்குத் தமிழகத்தின் பெஸ்டான 7 இடங்களைப் பற்றிதான் நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

அட்வெஞ்சர் டூரிஸம்

தமிழகத்தின் அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ்கள் மீதான ஆர்வம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதிக அளவில் தமிழகத்தில் இருக்கும் டிரெக்கிங் கிளப்புகளை இதற்கு நல்ல உதாரணமாகச் சொல்லலாம். நீங்கள் அட்வெஞ்சர் விரும்பி என்றால், உங்களுக்கான தமிழகத்தின் 7 பெஸ்டான ஸ்பாட்கள் பத்திதான் நாம இதுல பார்க்கப்போறோம்.

ஸ்போர்ட்ஸ் ரேஸிங் – சென்னை

இருங்காட்டுக் கோட்டை ரேஸிங் டிராக்
இருங்காட்டுக் கோட்டை ரேஸிங் டிராக்

பல வழிகளில் சென்னையை இந்தியாவின் ரேஸிங் ஹப்னே சொல்லலாம். நரேன் கார்த்திகேயன் மற்றும் கருண் சந்தோக் என இந்தியாவின் இரண்டு முக்கியமான F1 டிரைவர்கள், தங்கள் கரியரை சென்னையில்தான் தொடங்கினார்கள். ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் இருங்காட்டுக் கோட்டையில் தனி ரேஸ் டிராக்கே இருக்கிறது. இங்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான புரஃபஷனல் மட்டுமல்லாது அமெச்சூர் ரேஸிங் போட்டிகளும் அவ்வப்போது நடப்பதுண்டு. Madras Motor Sports Club-க்குச் சொந்தமான அந்த ரேஸ் டிராக்கில் பயிற்சி எடுக்க பல்வேறு சர்வதேச வீரர்களும் இங்கு விசிட் அடிப்பது வாடிக்கை.

டிரெக்கிங் – மேற்குத் தொடர்ச்சி மலைகள்

டிரெக்கிங்
டிரெக்கிங்

நாட்டின் மிகப்பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலை, யுனெஸ்கோவால் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. அதன் இயற்கை எழில்மிகு சூழலால் பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. அதேபோல், சமீபகாலமாக மலையேற்றம் போன்ற அட்வெஞ்சர் ஸ்பாட்டாகும் மாறி வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் குன்னூரைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் Rock-Climbing, rappelling மற்றும் bouldering போன்றவை பேமஸான ஆக்டிவிட்டிகள். தமிழகத்தில் இந்த நடவடிக்கைகள் சரியான விதிமுறைகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்பதால், இதுபோன்ற அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ்களைத் தேர்வு செய்யும்போது சரியான நிறுவனம் அல்லது அமைப்பைத் தேர்வு செய்வது அவசியம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

கோ-கார்டிங், ஜெட் ஸ்கீயிங் மற்றும் ATV – சென்னை

ATV
ATV

சென்னையின் கிழக்குக் கடற்கரை சாலை பல வழிகளிலும் அட்வெஞ்சர் விரும்பிகளின் ஃபேவரைட் ஸ்பாட்டாக சமீப காலங்களில் மாறி வருகிறது. சோழிங்கநல்லூர் தொடங்கி மகாபலிபுரம் வரையிலான இந்த சாலை கோ-கார்டிங், ஜெட் ஸ்கீயிங் மற்றும் ATV போன்ற அட்வெஞ்சர் விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்றதாக மாறியிருக்கிறது. go-karting செய்ய Kart Attack மற்றும் ECR Speedway-க்கு செல்லலாம். அதேபோல், ATV மற்றும் இண்டோர் அட்வெஞ்சர் விளையாட்டுகளுக்கு Wild Tribe Ranch உங்களுக்கு உதவலாம். மேலும், jet-skiing-க்கு MCBT நல்ல சாய்ஸாக இருக்கும். இதற்குக் கட்டணமாக ரூ.100 முதல் 1,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

ஜங்கிள் டிரெக்கிங் – முதுமலை

ஜங்கிள் டிரெக்கிங்
ஜங்கிள் டிரெக்கிங்

அட்வெஞ்சர் டூரிஸத்தில் சமீபகாலமாக அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை ஜங்கிள் டிரெக்கிங். தமிழகத்திலும் இதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஜங்கிள் டிரெக்கிங்குக்கு பெஸ்ட் ஸ்பாட்னா, அது முதுமலையைச் சொல்லலாம். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கும் நீலகிரியைச் சுற்றியுள்ள முதுமலை புலிகள் சரணாலயப் பகுதி, அடர்ந்த வனப்பகுதியைக் கொண்டது. அத்தோடு, புலிகள், யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகளின் வாழிடமாகவும் இருக்கிறது. அதேபோல், பறவைகளைக் கண்காணிக்கும் Bird Watch Spot-ஆகவும் இருப்பதால், இந்தியா முழுவதுமிருந்து வனவிலங்கு ஆர்வலர்கள் அதிக அளவில் இங்கு வருகிறார்கள்.

சர்ஃபிங் – கோவளம் மற்றும் மகாபலிபுரம்

சென்னையின் கிழக்கே இருக்கும் கிழக்குக் கடற்கரையின் மற்றொரு முக்கியமான அட்ராக்‌ஷன் அலைச்சறுக்கு எனப்படும் சர்ஃபிங். முக்கியமாக கோவளம் மற்றும் மகாபலிபுரம் இரண்டு இந்தவகையில் ரொம்பவே பாப்புலரான டெஸ்டினேஷன் என்றே சொல்லலாம். கோவளத்தில் ஆண்டுதோறும் நடக்கும் சர்ஃபிங் திருவிழா, உலக சர்ஃபிங் வரைபடத்தில் அந்த ஊருக்கு நிரந்தரமான இடத்தைக் கொடுத்திருக்கிறது. அதேபோல், மகாபலிபுரத்திலும் நீங்கள் சர்ஃபிங்கில் கலக்கலாம். இந்த இரண்டு இடங்களிலும் சர்ஃப் போர்டுகளை வாடகைக்குக் கொடுக்கும் எத்தனையோ கடைகளும், சர்ஃபிங் கற்றுக்கொடுக்கும் டிரெய்னர்களும் இருக்கிறார்கள்.

பாராகிளைடிங் – ஏலகிரி

ஏலகிரி பாராகிளைடிங்
ஏலகிரி பாராகிளைடிங்

உலக அளவில் ரொம்பவே பிரபலமான அட்வெஞ்சர் ஸ்போர்ட்களில் முக்கியமானது பாராகிளைடிங். தமிழகத்தில் பாராகிளைடிங் அனுபவத்தை நீங்கள் பல இடங்களில் பெறலாம். ஆனாலும், அவற்றில் முக்கியமானது வேலூர் அருகில் இருக்கும் ஏலகிரிதான். சென்னை – பெங்களூர் என இரண்டு முக்கியமான நகரங்களுக்கு இடையே அமைந்திருப்பதால், அட்வெஞ்சர் விரும்பிகள் நிறைய பேரின் ஃபேவரைட் பாராகிளைடிங் ஸ்பாட்டாக ஏலகிரி இருக்கிறது. சுமார் 20,000 அடி வரை பாராகிளைடரில் பறப்பது உங்களின் அட்வெஞ்சர் தாகத்துக்கு செமையான தீனியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பருவமழைக்கு முந்தைய மாதங்களான ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலம் சரியான சீசனாகக் கருதப்படுகிறது. வயது வாரியாக பாராகிளைடிங் கோர்ஸ் நடத்தும் சில பயிற்சி நிறுவனங்களும் ஏலகிரியில் செயல்பட்டு வருகின்றன.

மவுண்டன் பைக்கிங் – ஊட்டி

ஊட்டி மவுண்டன் பைக்கிங்
ஊட்டி மவுண்டன் பைக்கிங்

கரடுமுரடான மலைப்பாதைகளில் சைக்கிள் ஓட்டிய அனுபவம் இருக்கிறதா… டூர் டி பிரான்ஸ் போன்ற சில சைக்கிளிங் பந்தயங்களில் மட்டுமே பார்த்திருக்கும் அனுபவம் உங்களுக்குக் கிடைச்சா எப்படி இருக்கும். அந்த த்ரிலே தனிதான்னு சொல்ற ஆளா… உங்களுக்கான பெஸ்ட் பிளேஸ் ஊட்டிதான். தமிழகத்தின் மலைகளின் ராணி என்று செல்லப் பெயரோடு அழைக்கப்படும் ஊட்டி, பெரும்பாலானோரின் ஹாலிடே விஷ் லிஸ்டில் ஆண்டுதோறும் இடம்பிடிக்கும் ஊர்தான். ஆனால், மவுண்டன் பைக்கிங்குக்கும் சமீபகாலமாக பேமஸாகி வருகிறது ஊட்டி. குறிப்பாக, மவுண்டன் பைக்கிங் விரும்பிகளுக்காகவே சௌத் லேக்குக்கு அருகே உருவாக்கப்பட்டிருக்கும் Mountain Bike Park உங்கள் ஆசையைத் தீர்த்து வைக்கும். கரடுமுரடான பாதைகள், நீண்ட வளைவுகளோடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பார்க்கை தமிழக அரசு, இந்தியாவின் பிரபலமான சைக்கிளிங் கம்பெனியான TI Cycles நிறுவனத்தோடு இணைந்து உருவாக்கியிருக்கிறது.

இந்த சம்மர் சீஸனில் எந்த அட்வெஞ்சர் உங்க மனசுக்கு நெருக்கமானதுனு நீங்க நினைக்கிறீங்க… கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read –

உங்கள் வெக்கேஷனை ஸ்பெஷலாக்கும் Caravan Tourism!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top